Category: பதிவு

ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்

26.5.2017 – வெள்ளி முதலில்  நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று.  நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில்…

வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்

நவீன இலக்கிய படைப்பாளிகளில் என்னைப் பிரமிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் திரு.ஜெயமோகன். அவரின் ‘மாடன் மோட்சம்’ சிறுகதையைப் படித்தபோது அவரது அசாத்திய கற்பனையைக் கண்டு வியந்தேன். அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடனோடு சேர்ந்து இருநாள் பட்டறை நடத்தப்போகிறார் என அறிந்ததும் விரைந்து பதிந்து கொண்டேன். ஏற்கனவே கடந்த ஆண்டு வெறும் மூன்று மணி நேர சந்திப்பிலேயே…

சிங்கப்பூர் வாசகர் வட்ட விழா : ஓர் அனுபவம்

எம்.கே.குமார் தனது ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு முன்னுரை கேட்டிருந்தார். அப்படியே அவசியம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து பேச வேண்டும் என்றார். நான் முதலில் நூல் குறித்து எழுதிவிடுகிறேன்; பின்னர் வருவது குறித்து பேசுவோம் என்றேன். என்னால் சடங்கான முன்னுரை எழுத முடியாது என்பதை அறிவேன். மலேசியாவில் எனக்கு…

கலை இலக்கிய விழா 8 : தேங்காத தொடர் பயணம்

சிங்கையிலிருந்து இராம கண்ணபிரான் மற்றும் முனைவர் ஶ்ரீலட்சுமி ஆகியோர் அதிகாலை 5மணிக்கு மலேசியாவில் வந்து இறங்கியவுடன் கலை இலக்கிய விழா தொடங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. உற்சாகமாக இருவரும் காத்திருந்தனர். தங்கும் விடுதியில் அவர்களை இறக்கிவிட்டபின் தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் 11 மணிக்கு இராம கண்ணபிரான் அவர்களை ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஏற்கனவே கேள்விகள்…

கலை இலக்கிய விழா 8-ஐ முன்வைத்து

மலேசியாவில் இவ்வளவு தீவிரமாக கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வல்லினம் குழுமமே என்பது இலக்கியத்தைச் சார்ந்தவர்களுக்கு சென்றடைந்திருக்கும். இலக்கிய நிகழ்ச்சிகள் ஏன் கலைத்தன்மை (creativity) சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதை சிந்தித்திருக்கிறது வல்லினம். அந்தச் சிந்தனையை செயல் வடிவத்தில் பார்க்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. எத்திசையில் நிகழ்ச்சி நகரும் என்ற சுவாரஸ்யம். நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயார்…

“இலக்கியம் சொல்வதல்ல காட்டுவது” – ஜெயமோகன் பட்டறை அனுபவம்.

கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.  முதலில் ஒரு புலனக்குழுவை உருவாக்கி, போட்டியில் பங்குகொண்டவர்கள் இணைக்கப்பட்டனர். தொடர்ந்து அதில்…

புதிய முயற்சி : புலனக்குழு இலக்கிய உரையாடல் – 1

‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனும் கருப்பொருளின்கீழ் இவ்வாண்டு நடைபெறவுள்ள வல்லினம் கலை இலக்கிய விழா 7, மூத்த படைப்பாளர்களை ஆவணப்படுத்துதல்; இளம் படைப்பாளர்களை அடையாளம் காணுதல் எனும் இரு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. அதையொட்டி வல்லினம் சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்புகள் ஜூன்மாதம் தொடங்கி அச்சு, மின் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்தது அனைவரும் அறிந்ததே. வெறும் போட்டிகள்…

வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 3

பிப்ரவரி 7, 2016 ஞாயிற்றுக்கிழமை – [இரண்டாம் நாள்] ஆறாவது அமர்வு : என்னை நாயென்று கூப்பிடுங்கள்  நூலாசிரியர் : சிவா பெரியண்ணன் நூல் விமர்சனம் : கோ. புண்ணியவான், பூங்குழலி வீரன் நேரம்: காலை 9.30– 11.00 வரை இக்கவிதை நூல் தொடர்பாக கோ.புண்ணியவான், பூங்குழலி வீரன் இருவரும் எழுதியிருந்த விமர்சனக் கட்டுரைக்கு அப்பால் உள்ள விடயங்கள் குறித்துப் பேசுவதாக அமர்வு முன்னகர்த்தப்பட்டது. அவ்வகையில் சிவா பெரியண்ணன் கவிதைகள் குறித்த…

வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 2

அமர்வு இறுக்கமாக இல்லாமல் சுமுகமான நிலையிலேயே சென்றது. நண்பர்கள் எழுந்து நீர் அருந்த, கைகால்களை உதறிக்கொள்ள, கழிப்பறைக்குச் செல்ல என, தேவையான பொழுதுகளில் வெளியேறி வந்ததால் நீண்ட உரையாடல்களில் சிக்கல் இல்லாமல் மற்ற அனைத்து நேரங்களிலும் ஈடுபாட்டுடன் ஒன்றியிருக்க முடிந்தது. மூன்றாவது அமர்வும் குறித்த நேரத்தில் முடிய, அடுத்த அமர்விற்கான நேரத்தை மீண்டும் மறு உறுதிப்படுத்திக்…

வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 1

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கலை, இலக்கியம், அரசியல் என பல்வேறு தளங்களில் உற்சாகமாய் இயங்கிவரும் வல்லினம் இவ்வாண்டு ‘வல்லினம் விமர்சன அரங்கு 2016’ எனும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், இலக்கிய வாசகர்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுவான இலக்கிய அரங்காக இல்லாமல் மலேசியத்தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கவேண்டும் எனும் அழுத்தமான நம்பிக்கையில் இவ்விமர்சன…

இரை

இரண்டாவது தடவை அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்திருக்கக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது. முதல் தடவை எந்தப் பிரச்சினையும் இல்லை. தாகம் அடங்கவில்லை போலிருந்தது. இரண்டாவது தடவை படுத்துக் கொண்டே, இருட்டில் போத்தலை வாயில் சரித்தபோது அளவுக்கதிகமான தண்ணீர் வாய்க்குள் புகுந்து உடனடியாக விழுங்கிக் கொள்ளமுடியாமல் புரையேறி விட்டது. தொண்டை வழியே உள்ளே…

கலை இலக்கிய விழா 7 : ஒரு பார்வை

வல்லினம் கலை இலக்கிய விழா 7, இம்முறை மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது.  இவ்வாண்டு கலை இலக்கிய விழாவில் நான்கு இளம் படைப்பாளர்களின் நூல்கள் வெளியீடு கண்டன. அவை முறையே ம.நவீனின் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’, அ.பாண்டியன் எழுதிய ‘அவர்கள் பேனாவின் இருந்து கொஞ்சம் மை’ எனும் மலாய் இலக்கியம் குறித்த கட்டுரைத்தொகுப்பு,…

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஒரு பதிவு

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார்.  அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின்…

பதிவு : மாற்றுக்கல்வி கலந்துரையாடல்

11.10.2015ல் வல்லினமும் மை ஸ்கில் அறவாரியமும் இணைந்து ‘மாற்றுக்கல்வி’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து கவிஞர் கலாப்ரியா மற்றும் பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கிராண்ட் பசிப்பிக்…

கல்விக்கூடங்களில் வல்லினத்தின் தொடர் இலக்கியப் பயணம்

வல்லினம் இவ்வாண்டு தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் இலக்கியக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இதில் நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்குகளை வல்லினம் சார்பாக பேராசிரியர்கள் வீ.அரசு மற்றும் எம்.ஏ.நுஃமான் ஆகியோர் வழிநடத்தினர். 12.10.2015 (நண்பகல் 2.00)- உப்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் முதல் அங்கமாக இயக்குனர் சஞ்சை அவர்களின் ‘ஜகாட்’…