2007இல் வல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதலே அதை நிறுத்தப்போகும் தினம் குறித்த பேச்சும் தொடங்கிவிட்டது. அதற்கு முன் தமிழகத்தில் சிற்றிதழ்கள் தோன்றுவதும் மறைவதும் சடங்கான ஒன்றாக இருந்ததால் அதன் நீட்சியில் வல்லினத்தின் ஆயுள் கால நிறைவு குறித்து ஆர்வமாகவே காத்திருந்தோம். நிதானம் என்ற பெயரில் சோம்பேறித்தனத்தையும், புத்திசாலித்தனம் எனும் அர்த்தத்தில் பின் வாங்குதலையும், இலக்கியவாதியின்…
Category: வல்லினம் 100
இலக்கியத்தின் பல்லும் நகமும்
இரண்டாயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச் செலவானது. அந்த முதலீட்டை நிகழ்த்த வாய்ப்பு கொண்ட தரப்புகளுக்கே சிந்தனை, பண்பாட்டுச்சூழலில் குரல் இருந்தது. அது எப்போதும் அரசியல், வணிக அதிகாரத்திற்கு ஆதரவான குரல்தான்.…
தான்தோன்றி
பத்து வருடங்களுக்கு முந்தைய ஓர் இரவில் இலண்டனிலிருந்து தொலைபேசியில் அழைத்துத் தன்னை அறிமுகப்படுத்திக்ககொண்ட நவீன், மறுநாள் காலை விமானத்தில் என்னைச் சந்திப்பதற்காக பிரான்ஸ் வருவதாகச் சொன்னார். மலேசியாவில் ‘வல்லினம்’ என ஓர் இதழைத் நடத்துவதாகவும் சொன்னார். அதுவரை வல்லினம் எனக்கு அறிமுகமில்லை. அதுவரை மலேசியா இலக்கிய உலகோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருந்ததுமில்லை. வாலிபக் கரும்புலி…
மனஊக்கமும் செயலூக்கமும்
‘பறை’ என்ற ஆய்விதழின் மூலம் ‘வல்லினம்’ என்ற அமைப்பை 2014ல் அறிந்தேன். இதழின் உள்ளடக்கம் முக்கியமானதாக தோன்றியது. அவ்விதழுடன் மாணவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட ‘யாழ்’ என்ற ஓர் இதழும் இலவசமாக இணைக்கப்பட்டிருந்தது. ஏன் தமிழ்நாட்டில் இதுபோன்ற முயற்சிகள் வரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலுள்ளவர்கள் கல்வி குறித்து வைத்திருக்கும் கற்பிதம் ஆபத்தானது. மலேசியாவிலுள்ள இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், கல்வி…
வல்லினம்: காத்திரமும் வெகுஜனத்தன்மையும்
வல்லினம் நூறாவது இதழ் 472 பக்கங்களில் வெளிவருகிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறு பத்திரிகைக்கு இது ஒரு மிகப் பெரிய சாதனைதான். தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் முக்கிய தடம் பத்தித்த முதல் சிறு பத்திரிகை என இலக்கிய வரலாறு எழுதுபவர்களால் கணிக்கப்படும் எங்களின் ‘நிறப்பிரிகை’ சுமார் நான்காண்டுகளில் மொத்தம் 12 இதழ்கள்தான் வெளிவந்தன. 2007-ல் தொடங்கப்பட்ட…
வல்லினம்: இன்றும் நாளையும்
வல்லினம் நூறாவது இதழ் வெளிவருவது கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வுதான். மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு உலகத் தமிழர் மத்தியில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த இதழ் அது. பத்து ஆண்டுகளுக்கு முன் வல்லினம் முதலாவது இதழ் வெளிவந்திருந்த சமயம் நான் மலேசியாவில் இருந்தேன். 2007 ஜுலை முதலாம் திகதிமுதல் ஓராண்டு காலத்துக்கு மலாயாப் பல்கலைக் கழகத்தின்…
வல்லினங்களின் மெல்லிதயம்
இப்போது நான் வசிப்பது இடைகால் என்னும் கிராமம். இது தனிமையும் அமைதியுமான அழகிய ஒன்று. ஒரு வகையில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் இங்கே இலக்கியம் பேசவோ படித்ததைப் பகிர்ந்து கொள்ளவோ நண்பர்கள் கிடையாது. அதனாலேயே இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பும் போது, எதையோ இழந்தது மாதிரி…
மலேசிய தமிழ்மரபின் ஒற்றை அடையாளம்
நான் இரண்டுமுறை மலேசியாவுக்கும் – ஒருமுறை சிங்கப்பூரில் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டதன் பேரிலும் இரண்டாம் முறை நவீனும் நண்பர்களும் அமைப்பியல் பற்றிப் பேசக் கேட்டுக்கொண்டதன் பேரிலும் – சென்று முடிந்த அளவு இலக்கியம் மலேசியாவில் உருவாக்கம்பெறும் முறை, மலேசிய தமிழர்களின் இன்றைய வாழ்வுமுறை போன்றவற்றைக் கிரகித்துக் கொண்டேன். ஓரளவு மலேசியத் தமிழர்கள் பற்றிய அமெரிக்கப் பேராசிரியர் ஆண்ட்ரு…
மலேசிய இலக்கிய வரலாற்றில் வல்லினம்
கருவில் உதித்ததில் இருந்து வல்லினத்தை நான் பார்த்து வருகின்றேன். அதன் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வல்லினம் குறித்து எப்போது பேசினாலும் எனக்குள் ஒரு நிறைவும் சந்தோஷமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் தெரிகிறது. நானும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டில் இலக்கியம் குறித்து பேசிவருகிறேன். நான் பார்த்துப்பேசி பழகக்கூடிய மனிதர்கள் எல்லாம்…
கேள்விகள் எழுப்புவதே சிறப்பு
வல்லினம் குழுவை பார்க்கும்போதெல்லாம், வெறுமனே எழுத்தாளர்களின் குழுமம் என நாம் பார்ப்பதில்லை. துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்ட சமுதாயத்தை மாற்றக்கூடிய ஆளுமை கொண்ட இளம் தலைமுறையினராகத்தான் பார்க்கின்றேன். நமது இந்திய சமுதாயத்தின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் கடந்த இருநூறு ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு இடையே தனி அடையாளமாக தன்னைப் பார்க்க விரும்புகிறது. மரபு சார்ந்த சிந்தனை, இப்படித்தான்…
வல்லினத்துக்கு முன்- பின்
வல்லினம் குழுவினரின் தொடர்பு கிடப்பதற்கு முன்பு என் நிலைஎன்ன? அவர்களின் தொடர்பும் ஆதரவும் கிடைத்த பிறகு என் நிலை என்ன? என யோசிக்கிறேன். தொடக்கத்தில் எனக்குமூர்த்தி மற்றும் பாலு போன்று கைகொடுத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நிறையவும் எழுதினேன். மயில், வானம்பாடி போன்ற இதழ்களில் என் தொடர்கள் வெளிவந்தன. லங்காட் நதிக்கரை நாவலுக்கு பரிசு…
வல்லினத்தின் விமர்சன முன்னெடுப்பு
மலேசிய இலக்கியம், மலேசிய படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து மிகவும் காத்திரமான விமர்சனத்தை முன் வைத்து எழுதக்கூடிய பல படைப்புகளை வல்லினத்தில் நான் படித்திருக்கின்றேன். பழம்பெரும் எழுத்தாளர்களைக்கூட தயவுதாட்சண்யம் இல்லாமல் விமர்சிக்ககூடிய சிற்றிதழாக வல்லினம் மலேசியாவில் வந்தது. அவர்களோடு எனக்கும் தொடர்பு ஏற்பட்டு இதையொட்டிய என்னுடைய கருத்துகளையும் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கருத்துகளில் நேர்மையையும் தெளிவையும் பார்க்க…
வல்லினத்தின் உள்ளார்ந்த ஈடுபாடு
கெடா மாநில எழுத்தாளர் சங்க தலைவராக நான் இருந்த சமயத்தில் அச்சில் வந்த முதல் வல்லினம் இதழை அங்கு வெளியிட்டு அறிமுகம் செய்தோம். அவ்விதழுக்குப் பல படைப்புகளை நான் எழுதியிருக்கிறேன். இலக்கிய விமர்சனங்கள் அரசியல் விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சிறுகதைகள், சுய அனுபவ கட்டுரைகள் எனச் சொல்லலாம். அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள் நெருக்கமும் தொடர்பும் இருந்தது.…
வல்லினம் மீண்டும் அச்சிதழாக வேண்டும்
வல்லினம் இணைய இதழுக்கு முன்பு, அச்சிதழாக வந்தது எனக்கு ஒரு உந்துதலாகவும் எதையாவது எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. எனது கதைகள் கட்டுரைகள் எல்லாம் அதில் வெளிவந்தன. தொடர்ந்து என்னை ம.நவீன் விரட்டி விரட்டி படைப்புகளை வாங்கினார். ஒரு முறை நான் எழுதிக் கொடுக்காவிட்டால் என் வீட்டின் முன் தீ குளித்துவிடுவேன் என்றும் கிண்டலாகச்…
என்னை மீட்ட வல்லினம்
திடீரென மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதாய் ‘காதல்’ என்ற இதழ் வந்திருந்தது. இளைஞர்கள் தங்களிடம் உள்ள மொத்த திறமைகளையும் கொட்டி அதனை உருவாக்கியிருந்தார்கள். புத்தகத்தில் வெளிவந்த நேர்காணலுக்கான படங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன. நான் அவற்றை மிகவும் ரசித்தேன். ‘காதல்’ புத்தகத்துக்குப் பிறகுதான் வல்லினம் வெளிவந்தது. வல்லினத்தின் வெளிப்பாடு என்னை எழுதத் தூண்டியது. வல்லினத்தில் தொடர்ந்து…