அஞ்சலி : தந்தையைப் போன்ற வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு

ஆயுதபூஜை என்று கூறப்படும் சரஸ்வதி பூஜை அன்று திறனாய்வின் பிதாமகர் என்று பலரால் போற்றப்படும் திரு வெங்கட் சாமிநாதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. தம் வாழ்வின் இறுதி மூச்சு வரை கலை, இலக்கிய விமர்சகராக அற்புதமான பணி ஆற்றினார். தமிழகத்தில் பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பல இணையப்பக்கங்களில் எழுதிவருகின்றனர். சிங்கப்பூர்த்…

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஒரு பதிவு

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. சிங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில் நான்கு மொழிக்குமான கருத்தரங்குகள் நடக்கும். 24 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் ரெ.கார்த்திகேசு கலந்துகொண்டுள்ளார். அதற்கும் முன்பு இராஜகுமாரன் 80களில் கலந்துகொண்டுள்ளார்.  அதற்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் அழைக்கப்படுவது இரண்டு மாமாங்கத்திற்குப் பின்…

பதிவு : மாற்றுக்கல்வி கலந்துரையாடல்

11.10.2015ல் வல்லினமும் மை ஸ்கில் அறவாரியமும் இணைந்து ‘மாற்றுக்கல்வி’ எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து கவிஞர் கலாப்ரியா மற்றும் பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கிராண்ட் பசிப்பிக்…

கல்விக்கூடங்களில் வல்லினத்தின் தொடர் இலக்கியப் பயணம்

வல்லினம் இவ்வாண்டு தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் இலக்கியக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இதில் நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்குகளை வல்லினம் சார்பாக பேராசிரியர்கள் வீ.அரசு மற்றும் எம்.ஏ.நுஃமான் ஆகியோர் வழிநடத்தினர். 12.10.2015 (நண்பகல் 2.00)- உப்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் முதல் அங்கமாக இயக்குனர் சஞ்சை அவர்களின் ‘ஜகாட்’…

இலக்கியத்தின் வழி தேசிய அடையாளம்

இந்த மாதம் எதிர்ப்பாராவிதமாக ‘இலக்கிய மாதமாக’ அமைந்து விட்டது.  நவம்பர் 1, வல்லினம் கலை இலக்கிய விழாவும் அதைத் தொடர்ந்து 6,7-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்பும் சிறப்பாக அமைந்தன. அனைத்துலக தரம் வாய்ந்த சிங்கப்பூர் இலக்கிய விழாவில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் மிக அறிதாகவே கிடைப்பதாக அறிகிறேன். ஆக கடைசியாக இருபத்து நான்கு…

மசியின் நிறங்கள்

பல்லினங்கள் வாழக்கூடிய ஒரு சமூகத்தில் ஒவ்வொரு இனமும் தன்னுடைய தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொள்கிறது. அதேவேளையில் அது தனக்குப் புறத்தே இருக்கிற பிற இனங்களின் பண்பாட்டிலிருந்து தேவையானதை தன்வயமாக்கிக்கொள்வதோடு தன்னிடமிருப்பதை பகிர்ந்தும்கொள்கிறது. நாம்- நாங்கள், அவர்கள் – மற்றவர்கள் என்கிற பாகுபாடுகளைக் கடந்து இடையறாது நிகழ்ந்தவாறே இருக்கும் இந்தப் பரிமாற்றம் பண்பாட்டுப் பொதுமைகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு…

இலக்கியத்தில் அரசியல்

மலேசிய சோசியலிஸ கட்சியுடன் இணைந்து வல்லினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஈப்போவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா ஆகியோர் ‘இலக்கியத்தில் அரசியல்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் நாகேந்திரன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் மு.சரஸ்வதி…

வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு…

விவாதங்கள் தொடர வேண்டும்

தமிழ்மொழியில் வெளியாகும் படைப்புகள் இன்று பல தேசங்களில் வாழும் தமிழர்கள் படிக்க ஏதுவாய் வினியோகிக்கப்படுகின்றன. இணையம் மூலமாகவும் பலரை சென்றடைகின்றன. இந்தஒரு சூழ்நிலையில், படைப்பு என்பதன் தன்மையும் அடையாளமும் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான உறவும் வெளியும் மாறியமைந்துள்ளன. குறிப்பிட்ட படைப்பானது, அது உருவான சமூக, பண்பாட்டு வெளிக்கு அப்பாற்பட்ட வாசகர்களை அடைகிற…

வகுப்பறையின் கடைசி நாற்காலி

‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற…

ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள்

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நண்பர் நவீன் அவர்களின் ஆசிரியப் பணி அநுபவப் பதிவுகளை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, கீழ்க்காணும் குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பதிவுகள் பல அடிப்படையான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனைச் சுருக்கமாக தொகுத்துச் கொள்ள முயல்கிறேன். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்நிலையும்…