14.3.2015 – ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதுகலை மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் பதிவு இது. இந்நிகழ்வை நூலகர் விஜயலட்சுமி அறிமுகம் செய்து பேசியப்பின் சிறுகதை குறித்த அடிப்படையான கேள்விகளுடன் நான் வழிநடத்தினேன். நூலகத்தின் அழைப்பின் பெயரிலேயே இந்தக் கலந்துரையாடலை நான் வழி நடத்தினேன். என்னுடன் பூங்குழலி, மணிமொழி , யோகி ஆகியோர் உடன் வந்தனர்.
நிகழ்வில் பேசியதில் ஒரு பகுதி :
நண்பர்களே, சிறுகதைகள் குறித்து பார்ப்பதற்கு முன் இலக்கியம் ஏன் அவசியமாகிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் தேடுவோம். இலக்கியம் குறித்து நம்மிடம் சில முன் முடிவுகள் உண்டு. உண்மையில் அவை போலியானவை. யாரோ நம் மனதில் ஏற்றிவிட்டவை. நாம் அந்த முடிவுகள் குறித்து ஆராய்ந்ததே இல்லை. எந்தக் கேள்வியும் இல்லாமல் கல்விக்கூடங்களிலோ நூல்களிலோ சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். இன்று அதன் சில அம்சங்களை ஆராய்வோம்.






