சிட்டி செண்டருக்குள் புகுந்து மேல் தளம் நோக்கி சென்றோம். அங்குதான் சாரு எங்களுக்குக் காத்திருப்பதாகக் கூறினார். லிப்ட் கதவுகள் திறப்பதற்கு முன்பே கண்ணாடி கதவின் வழியாக சிவா சாருவைப் பார்த்துவிட்டிருந்தார். ‘இங்கதான் நிக்கிறார்’ என்றார்.
Continue reading
Author: ம. நவீன்
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…9
லீனா அன்று காலையில் பம்பாய் கிளம்பியவுடன் வீடு எங்களுக்குச் சொந்தமாகியிருந்தது. அன்று இயக்குநர் சேரனைக் காலை 10 மணிக்கு லீனா அழைக்கச் சொல்லியிருந்தார். அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு. சேரன் அலுவலகம் தி.நகரில் இருந்தது. எப்படியும் தி.நகருக்குப் போவதில் நஷ்டமில்லை என்ற படியால் புறப்பட்டோம். ஆட்டோ, சரவணன் ஸ்டோர் முன்பு நின்றது. ஹாரன் சத்தம் அதிகரித்திருந்தது.
Continue reading
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…8
இரவுணவுக்கு லீனாவை எங்காவது நல்ல உணவகமாக அழைத்துச் செல்லப் பணித்தோம். லீனாவுக்கு உணவு வாங்கிதருவது எங்கள் பிரதான நோக்கம். ஆட்டோ ‘ஹாரிஸன் மீனம்’ அருகில் நின்றது. நாங்கள் சென்ற தளத்தில் சீன உணவகமும் இருந்தது. லீனா சீன உணவு சாப்பிடுகிறீர்களா என்றார். அவசரமாக மறுத்தேன். அங்கு சீன உணவை தமிழர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். எங்கள் ஊரில் சீன உணவுகளைச் சீனர்களே சமைக்க உண்போம் என்றேன்.
மலேசியாவில் இப்போதெல்லாம் தாய்லாந்து உணவுகளை மலாய்க்காரர்கள் சமைப்பதும், ஜப்பானிய உணவுகளைச் சீனர்கள் சமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு சமைக்கும் போது அதன் அசல் சுவையிலிருந்து மாறுபட்டதாக அவ்வுணவு அமைந்துவிடுகிறது. அவரவர் இனத்துக்கே உரிய சிறப்பாம்சம் பிற உணவு முறையில் கலந்து விடுகிறது. விளைவாக இதுதான் அவர்கள் நாட்டின் உணவோ என்ற கற்பனையில் தின்று தொலைக்க வேண்டியுள்ளது. அந்த ஆபத்து அங்கு நிகழக்கூடாது என விரும்பினேன்.
Continue reading
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…7
பேசுவது , பழகுவது போலவே சிலரைப் பார்ப்பது ஒருவகை அனுபவம்தான். இயக்கு நர் பாலுமகேந்திராவைப் பார்க்க ஆவல் கூடிக்கொண்டிருந்தது. அவர் நடத்தும் சினிமாப் பட்டறை குறித்து கேள்விப்பட்டதுண்டு. சிவாவுக்கு சினிமா கல்லுரியில் இணைந்து பயிலலாம் என திட்டங்கள் இருந்தபோது அவர் சிந்தனையில் இருந்தது பாலுமகேந்திராவின் இந்தச் சினிமா பட்டறையும்தான். ஆனால் அதன் சட்டத்திட்டங்கள் தொடர்பாக எதுவும் சரியாகத் தெரியாமல் இருந்தது. சரியாக ஐந்து மணிக்குச் சென்று விட்டோம். சிவா வழக்கம் போல ஸ்டைலாக ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தார். அவர் மாணவர்கள் வகுப்பு முடிந்து வெளியில் நின்றிருந்தனர். எங்கள் வருகையை இயக்குநரிடம் கூறினர். உள்ளே சென்று காத்திருக்க அனுமதி கிடைத்தது.
Continue reading
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…6
நாசரை ‘நடிகர்’ என்பதை மீறி ஒரு கலைஞராகவே அடையாளம் கண்டுவைத்திருந்தேன். ‘அவதாரம்’ திரைப்படம் அவருக்குள் இருக்கின்ற கலைத்தன்மையை அடையாளம் காட்டியிருந்தது. அதை தவிர்த்து பல படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களை ரசிகனின் முன் வைக்கும் விதத்தில் அவர் நடிப்பாற்றல் மிளிர்ந்திருக்கிறது. சிங்கை இளங்கோவன் நாசர் பற்றி பேசும்போதெல்லாம் ‘தமிழ்த்திரையுலகில் ஒரு வித்தியாசமான கலைஞன்’ எனப் பாராட்டுவார். அவர்களுக்குள் நட்பு இருந்தது. இளங்கோவன் ஒருவரை அப்படிச் சொல்வது சாதாரணம் அல்ல. அவர் கலையையும் கலைஞனையும் எவ்வித சமரசமும் இன்றி அணுகக்கூடியவர்.
Continue reading
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…5
காலையில் எழுந்தவுடன் லீனா பரபரப்பாக எங்களுக்குப் பசியாரை தயார் செய்து கொண்டிருந்தார். நம்ம ஊர் (மலேசியா) பாலப்பம் போல இருந்தது ஆனால் இனிப்பில்லை. அப்பத்திற்குப் பிரத்தியேகமாய் குழம்பு செய்திருந்தாலும் முன்னிரவு வைத்த மீன் குழம்பைக் கேட்டுவாங்கி சாப்பிட்டேன். சுவை கூடியிருந்தது. சமையல் என்பது ஒரு மாபெரும் கலை. கலையுணர்வு உள்ளவர்களால்தான் அதை புதுமை செய்ய முடிகிறது.
Continue reading
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…4
மீண்டும் வந்த போது இயக்குநர் ராம் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரின் உதவி இயக்குநர் செல்வம் இருந்தார். ஏதோ புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். இளைஞர் .24 அல்லது 25 வயதிருக்கும். சட்டம் படித்துள்ளார். ராமுடன்தான் தங்குகிறார். “எப்படிப் போகிறது வேலை ” என ஆரம்பித்தோம்.
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…3
எ.வி.எம்அருகில் சென்றவுடன் அதன் உலக உருண்டை சுழன்று கொண்டிருந்தது. பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த உருண்டை. இந்நிறுவனம் பற்றி கேள்விப்பட்டதுண்டு. தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பாரம்பரியம் நிறைந்த தயாரிப்பு நிறுவனம் என்றும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ஆர். என ஐந்து முதல்வர்களை சம்பளம் தந்து வேலை வாங்கிய ஒரே நிறுவனம் என்பது அதில் முக்கியமானது.
உள்ளே நுழைந்தோம். இதற்கு முன் திரைப்படங்களில் கண்ட கட்டடங்கள் வல இடம் என இருந்தன. இயக்குநர் ராம் வழங்கிய எண்களுக்கு அழைத்த போது செட் அமைக்கும் குழுவில் இருந்த நண்பர் வெளிவந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.உள்ளே இதற்கு முன் திரைப்படங்களுக்காக அமைக்கப்பட்ட செட்டுகளைக் காட்டினார். சில திரைப்படங்கள் கண்முன் வந்து சென்றன.
சிறுகதை : கூலி
அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் ‘நான்காவது பிலோர் 4-பி’ என்று பதறத்துடன் குறிப்பெடுத்ததை மீண்டும் ஒருதரம் நினைத்து சரி பார்த்துக்கொண்டான். நிச்சயம் அவ்வறை அழுகை சூழ்ந்து இருக்கும். அம்மாதான் அதிகம் அழுதிருப்பாள். அம்மாவுக்கு அழுவதற்குப் பெரிய காரணங்கள் வேண்டாம். சாதாரணமாக மேசையின் கால்கள் உடைந்துவிட்டாலே அம்மேசையை அப்பா வாங்குவதற்கு உழைத்த உழைப்பையும் பிடித்த சிக்கனத்தையும் சொல்லி அன்று முழுதும் அழுது தீர்த்துவிடுவாள். அண்ணனுக்கு விபத்து நடந்தது நிச்சயம் அவளை நிலைகுழைய வைத்திருக்கும். அப்பா வேலையை விட்டு ரிட்டாயரான பிறகு அவளின் முழு நம்பிக்கையும் அண்ணன்மீதுதான் இருந்தது.
சினிமாவைத் தேடி சென்னை பயணம்…2
இயக்குநர் ராம் வீடு விருகம்பாக்கத்தில் இருந்தது. அவரிடம் தொலைப்பேசியின் மூலம் வழி கேட்டபடியே இடத்தை வந்தடைந்தோம். பயணம் நெடுகிலும் ‘கற்றது தமிழ்’ படத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தபடியே இருந்தன. நான் தமிழில் அதிகமுறை பார்த்த படம் அது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் தொடங்கும் கதை ஒட்டுமொத்தமாக சமூக , அரசியல் விமர்சனமாக மாறி அதன் தொனி உலகம் மொத்தத்துக்கும் ஒன்றென ஒலிக்கிறது. உலகமயமாக்கல் அதில் தொடங்கும் மனித ஏற்றத்தாழ்வு அதன் விளைவாய் வாழ்வியல் சவால்கள் என மிக ஆழமான விமர்சனங்களை முன்வைக்கும் படம். ஊடே காதல். ‘தமிழ் கற்றவனின் நிலை’ என்ற ஒற்றை பரிணாமத்தில் தமிழ் ரசிகர்களால் படம் புரிந்துகொள்ளப்பட்டது துரதிஷ்டம்.



