கடிதம்/எதிர்வினை

கடிதம் – கிருஷ்.ராமதாஸ்

‘காத்திருப்பதும் சுமப்பதும் காயப்படுவதும் இதழுக்காகத்தான் என்றால் எனக்கு அது சம்மதமாகவே இருந்தது.’

வணக்கம் நவீன். இணையத்தில் சிற்றிதழ் தேடித் தேடி, பித்துப்பிடித்து அலையும் கிருஷ்.ராமதாஸ், துபாய் (பெரம்பலூர், தமிழ்நாடு) எழுதுவது. நல்வாழ்த்துகள். நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல இணையத் தேடலின் போது ‘ஜெயமோகனுக்கு எதிர்வினை’ என்ற தலைப்பைப் பார்த்த உடன்  உங்கள் இணையப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஏன் மேய்ந்து என்ற வார்த்தை? உண்மை அதுதான். நான் இலக்கியவாதி இல்லை. எழுத்தாளன் இல்லை. ஆனால் 1980களில் இருந்து சிற்றிதழ்களின் மீது அளவற்ற பிரியமும், வெறியும் கொண்டவன். எப்படி அவை  என்னை ஈர்த்தன என்று இன்றளவும் விடை காண முயற்சிக்கிறேன்.

Continue reading

ஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது…

lit jeஇரு மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் சிற்றிதழ் என்பது… எனும் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் முதல்பகுதி என் குறித்த வசை. மற்றவை சிற்றிதழ் குறித்து நான் ‘பறை’ ஆய்விதழில் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையும் அதையொட்டிய சிற்றிதழ் வரலாறும் எனச்சென்றது. வல்லினம் கலை இலக்கிய விழா 7, அதனை ஒட்டிய பயணங்கள், சொந்த வாழ்வின் சிக்கல்கள் இவற்றோடு சிங்கப்பூர் சிறுகதைகள் குறித்து தொடர்ந்து எழுதவேண்டி இருந்ததால் தொடர்ச்சியான வாசிப்பு,எழுத்து என இரண்டு மாதங்கள் ஓடியே போனது.

Continue reading

தயாஜி; அழகுநிலா; அலையும் முதல் சுடர்!

தயாஜி, முதலில் உங்கள் கடிதம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் எதிர்ப்பார்ப்பது இத்தகைய உரையாடலைத்தான். ‘காவ்யா பதிப்பக’ வெளியீட்டில் வந்த க.நா.சு வின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இலக்கியப் படைப்புகளை ஒப்பிட்டு; மதிப்பீடு செய்து தன் முடிவுகளை எந்தவித  மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைக்கிறார். வாசிக்க வாசிக்க அவர் விரிவான பார்வை ஆச்சரியம் தருகிறது. அவர் சிபாரிசு செய்துள்ள பல நூல்களை இன்னும் கண்ணால் கூட கண்டதில்லை என நினைக்கும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது. நான் அவரை மிக முக்கியமான வாசகராகப் பார்க்கிறேன். ஒரு தீவிரமான வாசகனால்தான் எந்தப்படைப்புக்குள்ளும் நுழைய முடிகிறது. அது குறித்த புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடிகிறது.

Continue reading

தயாஜி கடிதம் : அழகுநிலா சிறுகதைகள்

வணக்கம் நவீன். நாம் அதிகம் பேசியிருக்கிறோம். இன்னமும் பேசவிருக்கிறோம். இக்கடிதத்தை எழுதுவதற்கு காரணம் உண்டு. நாம் வல்லினம் குழுவில் நண்பர்களுடன் தொடர்ந்து செயலாற்றிவருகின்றோம். ஆரோக்கியமான முறையில் அதற்கான பலன்களை நான் கண்டிருகின்றேன்; உணர்ந்திருக்கின்றேன். ஆனால் சமீபத்தில் வல்லினம் குழு குறித்தும் உங்களை குறித்தும் சில அவதூறுகள் வந்தவண்ணம் உள்ளன. எல்லா அவதூறுகளுக்கும் நாம் பதில் கொடுத்திட அவசியமில்லை என்று நம்புகின்றேன். நாம் நமக்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றாகத்தான் நமது உரையாடல்களை இப்படி பதிவு செய்ய நினைக்கிறேன்.

Continue reading

ஸ்ரீவிஜி கடிதம்

நவீன் உங்களின் பணி ஆசிரியர் தொழில். புத்தக வாசிப்பு, போதனை,எழுத்து,மொழி ஆதிக்கம் என தொடர் தேடல், கற்றல் உங்களின் திறனை வளர்த்து இலக்கியத்தின் பால் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டே Continue reading

எழுத்தும் வாழ்வும் : மா.சண்முகசிவா கடிதம்

அன்பு நவீன்,

ஐயா ரெங்கசாமியும் இளங்கோவனும் நேரெதிர் ஆளுமைகள். அந்த சந்திப்பு எவ்வளவு அழகாக இருந்திருக்கும். அன்பும் மரியாதையும் கூடி வந்த அந்த உறவில் வேறுபட்ட பார்வைகள் கூட நெகிழ்ந்து கலக்கும் தருணங்கள் இருந்திருக்கும் . அதை பதிவு செய்திருக்கலாம். Continue reading

எழுத்தும் வாழ்வும் : கடிதங்கள்

தொடர்ந்து எழுத்தும் வாழ்வும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டே வருகிறேன். என் மனதில் ஐயா ரெங்காசாமியும் உங்களையும் கடந்து ஐயா மருத்துவர் சண்முகசிவா முன்னிலையில் வந்து நிற்கிறார். உங்களை சுற்றி யார் யார் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இருக்க வேண்டியவர் உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்கிறார் ஒரு நல்ல வழிகாட்டியாக. Continue reading

எழுத்தும் வாழ்வும் : கடிதம்

தொடர்ந்து எனது புளோக் வைரஸ் தாக்குதலுக்குட்படுகிறது. கடிதங்கள் அனுப்ப முடியவில்லை என சில நண்பர்கள் கூறினர். சிலரது கடிதங்கள் வந்தாலும் என்னால் பிரசுரிக்க முடியவில்லை. எனவே உங்கள் கடிதங்கள்/ கருத்துகளை என் மின்னஞ்சலுக்கே அனுப்பலாம். valllinamm@gmail.com

 

thiranthe kidakkum dairy….  innum niraiya aachiriyanggalum marmangkalum irukkumo? padikka aaval thoondukirathu… Navin  nerattai othukki ezthunggal…aduttavar diaryai paddikkakkoodathu enbar. aanaal intha diaryyil  padikka vendiya niraiya anubavangkal ullana… so plz continue…

N.Puspa

நல்ல தொடக்கம் நண்பரே… அயராமல் எழுதுங்கள்!

ஜான்சன்

இது பெரியவரைப் பற்றியா உங்களைப்பற்றியா? எதுவாகிலும் நல்ல நடை

சிந்து

ஹி ஹி ஹி ஹி: சாருவுக்கு பதில்

சாரு நிவேதிதா எழுதியுள்ள (http://charuonline.com/blog/?p=1503) கட்டுரையில் குறிப்பிடும் மலேசியப் பொடியன் நான்தான். இரண்டு நாள்களுக்கு முன்புதான் கண்ணாடியில் கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறது என கவனித்துப் பார்த்தேன். சாரு பொடியன் என்றவுடம் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

Continue reading