கடிதம்/எதிர்வினை

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 4

ஒழுக்கமானவர்கள் போல உங்களையும் வல்லினத்தாரையும் ஏசிக்கொண்டிருக்கும் சிலரின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் போல. என் தோழியிடம் முக நூலில் எப்படிப் பேசினார்கள் என இந்த ஒழுக்கச்சீலர்களின் உண்மை முகத்தை வல்லினத்தில் காட்டுகிறேன். (எல்லாவற்றையும் சேகரித்து அனுப்பினால் வல்லினம் பிரசுரிக்குமா?)அதேபோல எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். தயாஜியின் சிறுகதையில் காளி என்ற பெண் தெய்வத்தின் மீது காமம் கொள்வது போல உள்ளது. இது முறையா? நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன். கடவுளின் மேல் காமம் கொள்வதுதான் நவீன இலக்கியமா ? அல்லது பின் நவீன இலக்கியமா?

santhalsanthal@gmail.com
Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 3

தன் தாயையே காம நோக்கோடு பார்த்ததற்காக தன் தவறை உணர்ந்து தொடக்கத்திலேயே தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். அப்படி மன்னிப்பு கேட்கும் போது தான் எப்படி இந்த காரியத்தை செய்யத் துணிந்தேன் என்பதை அன்றைய நாளில் தான் பார்த்த புளூ பிலிமை காரணம் காட்டுகிறான். மனசாட்சியின் கோரப்பிடியில் சிக்கி, சித்திரவதை அனுபவிக்கும் அவன் தான் பார்த்த புளூ பிலிமில் கண்ட காட்சிகளை அணு அணுவாக ரசித்து தாயிடம் விளக்குவது ஏன்?

Continue reading

ஆதவன் தீட்சண்யாவின் கடிதம்

1.”ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)

2. “தாய், மகள், சகோதரி – எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்” என்கிற மனுஸ்மிருதியின் உத்தரவு அன்றிருந்த நிலைமையை விளக்கப் போதுமானது.

– பண்டைய அமைப்புமுறை: ஆரிய சமூகத்தின் நிலை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 7 பக்கம் 12 மற்றும் 389

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 2

நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘oedipus complex’ மற்றும் தாய் வழி சமூகத்தில் உள்ள உறவு முறை எப்படி நம் தமிழ் சமூகத்துடன் தொடர்பு கொள்வது? தமிழ் படைப்பாக இருக்கும் இதை படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் மேல் பகிர்ந்துள்ள கருத்தும் கோட்பாடுகளும் அந்த அந்த சமூக கட்டமைப்புகளில் காலகோலத்தோடு தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு தமிழ் வாசகனுக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளன் ஒரு சமூக மறுமலர்ச்சியாளனாக கண்டிப்பாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் அந்தச் சமூகத்தோடு / சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துகளை அல்லது சற்று அப்பாற்பட்ட கருத்துகளை வைக்கும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சற்று யோசிக்கலாம்.

Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்)

வணக்கம் நண்பரே. மிகவும் வருத்தத்துடன்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இம்மாத வல்லினத்தில் தயாஜியின் சிறுகதையைப் பார்த்து பயந்தேன். அதில் தாய்மையை அசிங்கப்படுத்தியுள்ளார். அது போல வரிகள் இருந்தன. வல்லினம் மீது எனக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை உண்டு. நீங்கள் சரியானதைச் செய்வீர்கள் என. இது போன்ற கதைக்கு உங்கள் விளக்கம் என்ன? முக நூலில் இது குறித்த சர்ச்சையிலும் உங்கள் தரப்பை சொல்லவில்லை. அவர்கள் கருத்துக்கு கருத்து ரீதியில் பதில் சொல்லலாமே. என்னைப் போன்ற வாசகர்களுக்கு இது குழப்பத்தை உண்டு செய்கிறது. எனக்கு போதிய விளக்கம் கொடுப்பீர்களா? எனக்கு தெரியாததைத் தெரிய படுத்துங்கள்.  உங்களுக்கு இந்தக் கதையைப் பிரசுரித்ததில் சம்மதமா?

durga6776@gmail.com

Continue reading

அவதூறுக்கு பதில் சொல்லதான் வேண்டுமா?

மொட்டைக் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் மொட்டைக் கடிதங்கள் பெரும்பாலும் இயலாதவர்களின் குரலாக இருக்கும் போது அதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. சமூகத்தால் ஒடுக்கப்படும் ஒரு சிறுமியிடமிருந்துகூட தன் உரிமையைக் கேட்டு மொட்டைக் கடிதம் வரலாம். எல்லாவற்றையும் சீர்த்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது. கடிதத்தின் ஆதாரமான நோக்கத்தை ஆராய வேண்டியுள்ளது.

Continue reading

மலேசியாவில் பெண் எழுத்தாளர்கள் இயங்குவதே ஆண்களின் பெருந்தன்மையினால்தான்!

இப்போது காலை மணி ஏழு. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் மூன்றாவது நாளாக காட்டுக்குள் முகாமுக்குச் செல்லவேண்டும். எந்தத் தொடர்பும் இருக்காது. நாளை இதுகுறித்து பேசும் அளவுக்கு மனம் இன்னும் அமைதியாகவில்லை. ஒரு நிமிடம் மலேசிய இலக்கியத்தின் நிலை குறித்த வேதனையும் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கோபமுமே மிஞ்சியிருந்தது.
Continue reading

சொறணையுள்ள ஒரு குரல் – க.பாக்கியம்

அன்புள்ள ம.நவீன்,

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மலாயா பல்கலைக் கழகப்  பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன் அவர்கள் என்னைத் தொலை பேசியில் தொடர்பு  கொண்டார்கள்.

Continue reading

மலேசிய இலக்கிய வியாபாரம் – எதிர்வினை

முன் எச்சரிக்கை : எழுத்தாளர் சங்கத்தலைவர் தனது மகனின் இயக்குனராகும் ஆசையை  நிறைவேற்றவே தொடர்ந்து இயக்குநர்களை மலேசியாவுக்கு  ‘சங்க பணத்தில்’ அழைத்து வருகிறார் என இக்கட்டுரையைப் படிக்கும்  யாரேனும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. எப்படி கொஞ்சம் கூட வெட்கம் நியாயம் இல்லாமல் தனது மனைவியின் நூலுக்கு மாணிக்க வாசக புத்தக விருதை கொடுத்து அழகு பார்த்தாரோ அப்படியே தன் மகனையும் இயக்குநராக்கில் அழகு பார்க்க நினைக்கிறார் எனவும் கருத்துகள் எழலாம். எழுத்தாளர் சங்கம் ராஜேந்திரனின் குடும்ப சொத்தாகிவிட்டதாக வருத்தம் அடையலாம். இது போன்ற எந்த சேதாரத்துக்கும் இந்த எதிர்வினை பொறுப்பேற்காது.

Continue reading

நடிகர் சேரன் கேட்ட லஞ்சமும் மலேசிய இலக்கிய வியாபாரமும்!

 

நடிகர் சேரன்

கடந்த வார தினக் குரலில் (31.3.2012) ‘வெட்கப்படுகிறேன்’ எனும் தலைப்பில் வந்த செய்தி கண்ணில் பட்டது. இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் தான் வெட்கப்படுவதாக மலேசியாவில் வந்து கூறியிருக்கிறார். எதற்காக சேரன் மலேசியாவில் வந்து வெட்கப்பட வேண்டும் என செய்தியை முழுக்க வாசித்தால் அதிர்ச்சி.

Continue reading