சினிமா

வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!

இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும் அடிப்படையான தரம் இல்லாமல் அது குறித்து நான் ஒருவார்த்தைகூட பேசுவதில்லை. ஒருவேளை ஒரு குப்பை தேவைக்கு மீறி கொண்டாடப்பட்டால் இளம் ரசிகர்களின், வாசகர்களின் குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதை விமர்சிக்கலாம். அது குப்பை என சுட்டிக்காட்டலாம். அதேவேளையில் , மலேசியாவில் கலை முயற்சிகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது அது குறித்து மௌனமாக இருப்பதும் அதைவிட கேவலமானதுதான். நாம் அது குறித்து பேச வேண்டியுள்ளது. அதன் நகர்ச்சிக்கு நம்மாலானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.

மேலும்

தங்க மீன்கள் ; குளம் கானலாகிய கதை

திட்டமிடப்படாமல் பதிவாகும் நமது புகைப்படம் நமக்கு அத்தனை நெகிழ்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் சலிக்காமல் நாம் அதை பார்க்கிறோம். அதில் தெரிவது நாம் புரிந்து வைத்திருக்கும் நாம் அல்ல. சிரிப்பில், அழுகையில், மௌனத்தில் , கோபத்தில் நமது முகம் வேறொன்றாக இருக்கிறது. நாம் நமது வேறொரு முகத்தைப் பார்க்கிறோம். அதில் அவ்வளவு இஷ்டம் காட்டுகிறோம். அதில்தான் உண்மை நெருக்கமாக உள்ளது. அதிலும் பிரக்ஞையற்ற நமது குழந்தை பருவங்களின் புகைப் படங்கள் நமது பாதுகாப்பில் எப்போதும் இருக்கின்றன.

மேலும்

சாட்டை : ஒரு மீள் பார்வையில்…

சாட்டை திரைப்படம் குறித்து நண்பர்கள் பலரும் சொல்லியிருந்தனர். பார்ப்பதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். தாமதமாகத்தான் தொலைக்காட்சியில் தங்கத்திரையில் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்த்த உடனே படம் கவர்ந்தது. தங்கத்திரையில் அம்மாதம் முழுவதும் ஒரே படத்தை ஒளிபரப்புவார்கள் என்பதால் மீண்டும் சில முறை அப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்தடுத்த முறை பார்த்தப் பின்பே நான் அப்படத்தை ஓர் ஆசிரியராக மட்டுமே இருந்து பார்த்ததை அறிந்துகொண்டேன்.
மேலும்

உலக நாயகன் கமலும் உள்ளூர் நாயகன் சை.பீரும்…

நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல்.  ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத்  தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.

மேலும்

Life of Pi : இறுதி கையசைப்பு

 

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச்செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச்செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கையசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்ப்பார்க்கிறேன்
அவ்வளவு தானே
—  ஆத்மாநாம்
மேலும்

நான் கடவுள்

(இந்தக் கட்டுரை, ‘நான் கடவுள்’ வந்தபோது எழுதியது. இப்போது ‘அவன் – இவன்’ பார்த்தபோது இனி எப்போதும் பாலாவினால் நல்லப் படம் ஒன்றை வழங்க சாத்தியம் இல்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.)

 •  

  மேலும்

  நந்தலாலா : மேலும் சில பயணங்கள்

  ‘நந்தலாலா’ திரைப்படம் குறித்து பல நண்பர்களிடமிருந்தும் நல்லவிதமான கருத்துகள் வரவே ஒரு முறையாவது பார்த்துவிட முடிவெடுத்தேன். இயக்குநர் மிஷ்கின்தான் அப்படத்தை இயக்கி நடித்ருந்தார். அப்படம் ஜப்பான் இயக்குநர் தகேஷி கிடானோ என்பவரால் 1999ல் இயக்கப்பட்ட ‘கிகுஜிரோ’ எனும் படத்தின் தலுவல் என இணையப்பக்கங்களில் செய்திகள் வந்திருந்தன. அதைப் பற்றி எனக்கென்ன கவலை. நான் எந்த ‘ஜிரோ’வையும் அதுவரை பார்க்காத நிலையில் நந்தலாலாவைப் பார்ப்பதில் பெரிய தடைகள் இருக்கவில்லை.

  மேலும்

  அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு

  சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை உட‌னே சென்று பார்த்துவிட‌ சில‌ விட‌ய‌ங்க‌ள் கார‌ண‌ங்க‌ளாக‌ இருந்துவிடுகின்ற‌ன‌. ந‌டிக‌ர்க‌ள், திரைக்க‌தை, அப்போதைய‌ ம‌னோநிலை, ந‌ண்ப‌ர்க‌ளின் தூண்டுத‌ல் என்ப‌ன‌ அதில் சில‌. இவையெல்லாம் இல்லாம‌ல் ஓர் இய‌க்குன‌ரின் மேல் வைத்திருக்கும் ந‌ம்பிக்கையின் கார‌ண‌மாக‌வே ‘அங்காடித் தெரு’வுக்குச் சென்றேன்.

  2006 ஆம் ஆண்டில் த‌மிழ‌க‌ம் சென்றிருந்த‌ போது ம‌னுஷ்ய‌ புத்திர‌னோடு வ‌ச‌ந்த‌பால‌னின் ‘வெயில்’ திரைப்ப‌ட‌ம் பார்க்க‌ச் சென்றிருந்தேன். பிர‌முக‌ர்க‌ளின் சிற‌ப்புக் காட்சி அது. எங்க‌ளுக்குப் பின்னால் எழுத்தாள‌ர் தில‌க‌வ‌தி அம‌ர்ந்திருந்தார். உட‌னே அவ‌ரின் ‘க‌ல்ம‌ர‌ம்’ நாவ‌ல் நினைவிற்கு வ‌ந்த‌து. அந்த‌ நாவ‌லுக்கு எப்ப‌டி ‘சாகித்திய‌ அகாத‌மி’ விருது கிடைத்த‌து என‌க் கேட்க‌ நினைத்து திரும்பினேன். பின்ன‌ர், அவ‌ர் ‘ஐ.பி.எஸ்’ என்ப‌து நினைவுக்கு வ‌ந்து வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாம‌ல் இருந்துவிட்டேன். ந‌டிக‌ர் ப‌சுப‌தியிட‌ம் ஒரு ‘ஹ‌லோ’ சொன்னேன். ப‌ட‌ம் என்னை மிக‌வும் நெகிழ‌ வைத்திருந்த‌து.ப‌ட‌ம் முடிந்த‌பின் வ‌ச‌ந்த‌பால‌னிட‌ம் ஓரிரு வார்த்தைக‌ள் பேசினேன். திரும்பிச் செல்லும் போது ம‌னுஷ்ய‌ புத்திர‌னிட‌ம் ப‌ட‌ம் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். “உயிர்மையில் எழுதுங்க‌ளேன்”, என்றார். “எழுத‌வேண்டும்”, என்ற‌தோடு ச‌ரி.

  மேலும்