அஞ்சலி

அ. ரெங்கசாமிக்கு அஞ்சலி

ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது.

“அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள்.

Continue reading

சை.பீர்முகம்மதுவுக்கு அஞ்சலி

சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.

Continue reading

தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் அவர்களுக்கு அஞ்சலி

‘தமிழ்ச்சீலர்’ மா.செ.மாயதேவன் அவர்களை நான் முதன்முறையாக 2004இல் சந்தித்தேன். அப்போது நான் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். மூன்று மாத பயிற்றுப்பணிக்காகப் பள்ளிகளைத் தேர்வு செய்யச் சொன்னபோது கல்லூரியைவிட்டு மிக அதிக தொலைவுள்ள மாவட்டமாக விண்ணப்பித்தேன். பொதுவாக விடுதிக்கு எளிதாகத் திரும்பக்கூடிய தொலைவுகளில் உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதையே பயிற்சி ஆசிரியர்கள் விரும்புவர். எனக்கு புதிய சூழல் தேவையாக இருந்தது. அதன்படி எனக்கு தைப்பிங் மாநிலத்தில் பயிற்றுப்பணிக்கான இடம் வழங்கப்பட்டது.

Continue reading

போப்பிக்கு அஞ்சலி

போப்பி இன்று இறந்தான். உண்மையில் அதன் அடையாள அட்டையில் பாரதி என்றுதான் பெயரிருக்கும். கனிவும் கம்பீரமும் ஒருங்கே அமைந்த கண்களைக் கொண்டிருந்தான் என்பதால் அப்பெயர் வைத்தேன். ஆனால் போப்பி என்ற பெயர்தான் இயல்பாக ஒட்டிக்கொண்டது. எனவே அவன் தன் பெயர் பாரதியென கடைசி வரை அறிந்திருக்கவில்லை.

Continue reading

அஞ்சலி: கோவை ஞானி

கோவை ஞானி இறந்துவிட்டதாக எழுத்தாளர் அர்வின் குமாரிடமிருந்து தகவல் வந்தபோது இணையத்தில் அதை ஒருதரம் உறுதி செய்துக்கொண்டேன். நீரிழிவு பாதிப்பினால் கண் பார்வை இழந்த நிலையிலும் உதவியாளர்கள் மூலமாக வாசிப்பதையும் எழுதுவதையும் விட்டு விலகாத அவர் தனது 86ஆவது வயதில் அனைத்தையும் முழுமையாக நிறுத்திக்கொண்டுள்ளார் எனத் தோன்றியது.

Continue reading

அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2019/10/20170203_201914.jpg“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர்.

அது உண்மைதான்.

Continue reading