கட்டுரை/பத்தி

இலட்சியப் பயணம்: சென்று சேராத முன்னோடி

ஐ.இளவழகு

2005இல் நவீன இலக்கிய வாசிப்புக்குள் நான் நுழையும்போது லட்சியவாத எழுத்துகளின் மேல் நண்பர்கள் வட்டத்தில் பெரும் பரிகாசம் இருந்தது. அதன் நாயகர்களாக இருந்த நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்கள் பல்கலைக்கழகத் தரப்பில் கவனப்படுத்தப்பட, நவீன இலக்கியவாதிகள் குழு அவ்விருவரும் பொருட்படுத்தத் தேவையற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே உரையாடல்களை நிகழ்த்தினர். இன்னும் சொல்லப்போனால் ‘லட்சியம்’ என்ற வார்த்தைகூட அப்போதெல்லாம் கேலி செய்யப்பட்ட நினைவு உண்டு. அவ்வகையில் அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் உருவான படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புகளையும் நவீன இலக்கியத்தை முன்னெடுத்தவர்கள் கவனப்படுத்தவில்லை.

Continue reading

துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ

கா.பெருமாள்

2016இல் கீழவளவு மலையில் சமண படுகைகளைக் கண்டுவிட்டு இறங்க முயன்றபோது  ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட பாதைகள் சரிந்துசெல்வதைக் கண்டேன். எந்த வழியில் ஏறிவந்தேன் என்று கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன். என்னை அழைத்துச்சென்ற நண்பர் அன்புவேந்தனும் இறங்கும் வழியைக் கணிக்கச் சிரமப்பட்டார். ஏறிவரும்போது அந்தச் சிக்கல் இல்லை. உச்சி மட்டுமே கவனத்தில் இருந்தது. சிறுகதை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசம் என மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சியைப் பார்ப்பதையும் உச்சியில் இருந்து பல்வேறு திசைகளில் பிரிந்து செல்லும் வழிதடங்களைப் பார்ப்பதையும் சொல்லலாம். சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துகொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.

Continue reading

செம்மண்ணும் நீலமலர்களும்: முதல் சுடர்

மலேசிய நாவல்களை வாசிக்கும்போது பெரும்பாலானவை ஏற்படுத்தும் சலிப்புக்குக் காரணம் அதன் அடிப்படை சாரமாக மறுபடி மறுபடி வரக்கூடிய இரண்டு அம்சங்கள்தான். முதலாவது படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ள நீதியுணர்வு சார்ந்த கோபம். இரண்டாவது மானுட உறவுகள் சார்ந்த குழப்பம்.

Continue reading

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள்: பாலுணர்வின் கிளர்ச்சி

1

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை வலுவானது. மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை (நெருப்புப் பூக்கள் – 1979) வெளியிட்டவர். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை (1979) நடத்தியவர்.  அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து (புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் – 1979) நவீன இலக்கியச் சிந்தனை மூலம் வெளியிட்டார். மலேசியாவில் புதுக்கவிதை வளரத்தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தவர். ஆம்! இளஞ்செல்வனிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என கோ.புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது (மறக்கப்பட்ட ஆளுமை).

Continue reading

பேய்ச்சி: தொன்மத்திலிருந்து தொடரும் பேயன்னை (பாரதி)

கடந்த வருடம் டிசம்பர் திகதி 20-22 -இல் நடந்ததெறிய நவீன முகாமில் கலந்து கொண்டேன். அதுதான் என்னுடைய முதல் பங்கேற்பு. அம்முகாம் நவீன இலக்கியத்தையும் எழுத்து அறிவையும் சார்ந்தே இருந்தது. அம்முகாமில்தான், பேய்ச்சி நாவல் வெளியீடுச் செய்யப்பட்டு, அருண்மொழி நங்கை அவருடைய அனுபவத்தோடும் உலக இலக்கிய அறிவோடும் அந்நாவலைப் பற்றி உரை ஆற்றினர். நாவலைப் படிக்க அவருடைய உரையும் புத்தகத்தின் முன் அட்டையும் என்னை மிகவும் ஈர்த்தது.  முன் அட்டையில் இருக்கும் செம்பனை இலையின் மறைமுக வரைப்படமும் தீப்பந்தம் ஒரு பெண் முக அமைப்புபோல் குங்குமம் இட்டு இருப்பதும் இப்புத்தகத்தைப் படிக்க ஊக்குவித்தது. முன் அட்டையில், நாவலின் தலைப்பில் பேய்ச்சி என்று அச்சடிக்கப்பட்டு உள்ளதில் ‘ய்’ மட்டும் சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற வினாவுக்குக் நாவலைப் படித்து முடித்தவுடன் விடைக் கிடைத்தது.

Continue reading

பேய்ச்சி: புனைவாய்வு (ஆதித்தன் மகாமுனி)

ஓர் எழுத்தாளனின் சுவைக்கேற்ப உருவாவதல்ல நாவல். அது எழுத்துகளோடு வாழபோகும் ஒரு வாசகனின் குறுகிய கால குடும்பம். அவன் வெளியேயும் உள்ளேயும் நின்று கதாபத்திரங்களோடு பயணிக்கப் போகிறவன். அவனே அந்த கதைக்கு நாயகனாகவும் மாறலாம் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப கதை மாந்தர்களுக்கு உருவம் கொடுக்கலாம். ஆனால், எழுத்தாளன் என்பவன் தன் கதையைக் கற்பனையாகவும் அல்லது உண்மையைக் கற்பனை சுவையோடு ததும்ப சமைப்பதே ஆகும். தான் பார்த்த, படித்த, அனுபவித்த எல்லாவற்றையும் வாசகனுக்கு அதே உணர்ச்சிகளோடு கொண்டு வந்து சேர்ப்பது என்பது நாவலின் தனிச் சிறப்பு.

Continue reading

பேய்ச்சி: தாய்மையும் பேய்மையும்

வாசகனுக்குக் கலை இலக்கியத்தின், வாசிப்பின் பெறுபயன் என்பது வெறும் உணர்வு கடத்தலாக இருக்கும் என்று எண்ணி; உணர்வினைக் கடத்துகின்ற எல்லா எழுத்துப் பிரதிகளும் கலை இலக்கியமே என நான் தடுமாற்றம் அடைந்ததுண்டு. ஆனால், உண்மை கலையினை வேறுபடுத்தும் நுண்ணிய கூறுகள் உள்ளன என்பது தொடர்ந்து வாசிப்பில் துலங்குகிறது.

Continue reading

பேய்ச்சி: ஒரு வாசிப்பு அனுபவம் (காளிபிரஸாத்)

காளிப்ரஸாத்

தமிழகத்திலிருந்துக் கிளம்பி மலாயா சென்ற புலம் பெயர் மக்களின் வாழ்க்கையைத் தலைமுறை வாரியாக வருடக்கணக்குளோடு அளித்த நாவல்கள் ஏற்கனவே மலேசியாவில் எழுதப்பட்டிருக்கின்றன. அதை எழுதியவர்களில் சீ.முத்துச்சாமி முக்கியமானவர்.

Continue reading

நீலகண்டப் பறவையைத் தேடி…

‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’

Continue reading

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020எப்போதும் சொல்வதுதான். எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. பிரகாசமான முகத்துடன் என்னை நீங்கள் அன்று தரிசிக்கலாம். கடந்து சென்ற ஒரு வருடத்தை புதிய ஆண்டில் நின்றுகொண்டு அசட்டையாக எட்டிப்பார்ப்பதில் ஒரு ‘திரில்’ உண்டு. ஏதோ அதெல்லாம் யாருக்கோ நடந்ததுபோல. அப்படிப் பார்க்கும்போது, பெரும்பாலும் மகிழ்ச்சியும் துக்கமும் உலகியல் சார்ந்த நிகழ்வுகளில் குவிந்ததில்லை. பணித்துறை, கல்வித்துறை, பொருளாதாராம், குடும்பம் என எதில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையும் நான் பொருட்படுத்திப் பதிவிட்டதில்லை. ஆனால் என் தாய்மாமாவின் மரணம் என்னை இம்முறை அதிகமே தடுமாற வைத்தது. மூளையில் மூன்று புற்றுக்கட்டிகள். அவற்றைக் கண்டுப்பிடித்த முதல் நாளில் இருந்தே காப்பாற்ற முடியாது என உள்ளூர அறிந்த நிலையிலும் ஏதோ நம்பிக்கையில் வைத்தியம் செய்ய அலைந்துகொண்டிருந்தேன்.

Continue reading