வாசிப்பும் ரசனையும்: சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை கதைகளை முன்வைத்து.

மயாழ் சிறுகதை பட்டறையில் பங்கெடுக்க உள்ள ஆசிரியரிமிருந்து ஒரு கேள்வி.

புலனக்குழுவில் நீங்கள் குறிப்பிடும் படைப்புகள் அனைத்தும் சிறப்பானவையாக உள்ளன. இவ்விரு படைப்பாளிகளின் எல்லா படைப்புகளும் சிறந்தவைதானா? ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளும் சிறந்தவையாக இருக்குமா?

புனிதவதி, ஜொகூர்

Continue reading

சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4

venugopal118.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.

சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர்  அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும்  மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும்  குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3

index18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: மீட்கப்படும் குழந்தமை – 2

20chrcjpava18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘சத்ரு’ சிறுகதை வாசிக்க : சத்ரு – பவா செல்லதுரை

கதைகளின் வழியே கதாசிரியனை அறிய  முயற்சிப்பது சுவாரசியமானது. பவா செல்லதுரையின் கதைகளை வாசிக்கும்போது கைகளை அகல விரித்து பேரன்களைக் கொஞ்ச அழைக்கும் ஒரு தாத்தாவின் சித்திரமே மறுபடி மறுபடி தோன்றுகிறது. தாத்தாக்கள் பேரன்களை எப்போதும் வெறுப்பதில்லை. வாஞ்சையை அவர்கள் மேல் தடவி தடவி ஈரமாக்குவதைவிட வேறெதுவும் தெரியாத தாத்தாக்களின் வசைகளைக்கூட பேரன்கள் விளையாட்டுகளாக மாற்றுகின்றனர். பவா சக மனிதனை நம்பி வாழ்பவர். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை நம்பி வாழ்பவர். அதுவே அவரைச் சுற்றி மனிதர்களை மொய்க்க வைக்கிறது. அவர் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை கொடுக்கவும் செய்கிறார்.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கண்களின் விடுதலை – 1

பவா கதை18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  வலி சிறுகதை வாசிக்க : வலி – பவா செல்லதுரை

ஒரு புனைவை மிகச்சிறந்தது எனச் சொல்லும்போது ஏன் அது அவ்வாறானது என நண்பர்கள் கேட்பதுண்டு. அப்புனைவு அவர்களுக்கு எந்த அனுபவத்தையும் கொடுத்திருக்காத பட்சத்தில் இந்தக் கேள்வியின் தொணி கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். உண்மையில் ஒரு கலை வடிவம் நம்மை ஈர்த்த தருணத்தை  அந்தரங்கமாக நாம் அதனுடன் உரையாடிய கணத்தை இன்னொரு வாசகரிடம் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா என நான் கேட்டுக்கொண்டதுண்டு. முடியாது. அவ்வாறு முடியுமென்றால் அவ்வுணர்வை ஒரு படைப்பாளி கட்டுரை வடிவில்கூட விளக்கமாக விளாவரியாக எழுதிவிடுவார்.

Continue reading

போயாக் சிறுகதைகள் – கிறிஸ்டி

கிறிஸ்டிஅன்பு நவீன் அவர்களுக்கு,

தங்களின் ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள கதாமாந்தர்களின் வாழ்க்கை அனுபவம் இதுவரை என்னிடம் ஏற்படுத்தாத சலனத்தை ஏற்படுத்தியிருந்ததன் விளைவு, இரண்டு வாரங்களாக என்னால் வேறு எந்த படைப்பையும் வாசிக்க இயலவில்லை. கதைகளின் பேசுபடுபொருளை உள்வாங்கி செரித்துக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. தங்கள் எழுத்தைப் பற்றி முன்னுரை வழங்கியுள்ள திரு. சு.வேணுகோபால் அவர்கள் மற்றும் யாக்கை, போயாக் பற்றி கூறியுள்ள திரு. ஜெயமோகன் அவர்கள் இருவரின் எழுத்துகளையும் படித்தபிறகே என்னால் குறுஞ்சித்தரிப்புப்பாணி கொண்ட தங்கள் கதைகளை உள்வாங்கிக்கொள்ளவும் விரித்தெடுக்கவும் முடிந்தது.

Continue reading

எதிர்வினை 6: மதி பையா பாவம் – கலை சேகர்

imagesஎன்ன மதியழகன்? தங்களிடமிருந்து எக்காரணம் கொண்டும் நேரடி பதில்கள் வரவே வாராதோ? என்னமோ கேட்டால் வேரென்னவோ சொல்றீங்க? அதுவும் நமக்குள் நடந்த வேறொரு உரையாடலின் படங்களை காட்சியகமாக்கி இருக்கிறீர்கள்! அவ்வளவு கோழையா நீங்கள் மதியழகன்?
சரி… அப்படியே நமக்குள் தொடர்பிலான ஒன்றை சொல்லனும் என்றாலும்… அதை சும்மா மேலோட்டமா சொல்லி சொதப்பக்கூடாது! வாசிக்கிறவங்களுக்கு கதை புரியாம போயிராதா? ஒரு இயக்குனர் நீங்க இப்படி சொதப்பலாமா?? உங்க கதையில் என் கதாபாத்திரத்தை கொஞ்சம் ‘க்ரெய் ஏரியா’வில் வைத்து விட்டீர்களே? இதனால்தான் உங்களுக்குப் புரோடியுசர் கிடைக்காமல் பட்டறை நடத்துவதாகப் பம்மாத்து காட்டுகிறீர்களா? மதி பையா பாவம். (இதை பிக்பாஸ் ஐஸ்வரியா சொல்லும் ஷாரிக் பையா பாவம் தொணியில் வாசிக்கவும்)

எதிர்வினை 5: கோழையின் குரல் – விஜயலட்சுமி

43950509_1462895410479425_4191337698016886784_nதியழகன் என்ற கோழை தன்னிடம் விவாதம் செய்ய வல்லினம் குழுவுக்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கொண்டிருந்தான். வல்லினத்தில் ஆகக் கடைசியாக இணைந்த நான் “சரி வா. நேரடியா விவாதிக்கலாம்” என்று மூன்று முறை அவனை அழைத்துவிட்டேன். வரமாட்டேன் என ஓடி ஒழிகிறான். அவனிடம் விவாதிக்க நான் பண்பாடு கற்க வேண்டுமாம். ஒரு கோழை, முட்டாள் சத்தமிட்டுதான் பேசுவான் என இன்று அறிந்துகொள்ள முடிந்தது. நான் ஓர்மையில் யாரையும் அழைப்பதில்லை. ஆனால், கருத்து விவாதத்தைமீறி தனிமனித அவதூறு செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்க அவசியமில்லை. தனிமனிதனான என்னிடமே விவாதத்துக்கு வர தயங்கும் அவன், வல்லினம் குழுவை விவாதத்துக்கு அழைப்பதெல்லாம் இவ்வருடத்தின் சிறந்த நகைச்சுவை. எனவே, இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கோழைகளை நோக்கி வாளை சுழற்ற முடியாது அல்லவா.

Continue reading

எதிர்வினை 4: அறிவிலார் தீங்கு – விஜயலட்சுமி

indexமதியழகன் – நவீன் விவாதத்தை வாசித்தேன்.  கடைசியாக நேற்று அவர் என்னைப் பற்றி செய்த அவதூறையும் நண்பர்கள் அனுப்பினர். அனுப்பியிருக்க வேண்டாம். முட்டாள்களின் புலம்பலை, நேரடி வாதத்திற்கு வரத்தயங்கும் கோழைகளின் முகநூல் பதிவை வாசிப்பது வீண்.

நான் கராத்தே சண்டைப் போட்டிகளைப் பார்ப்பதுண்டு. அதில் படுபயங்கரமாக அடிப்பட்டு கோதாவில் இருந்து வெளியே விழும் ஒருவர் வெளியே நின்றபடி ஒற்றை விரலைக் காட்டி, கொச்சை மொழி பேசி, கத்தி, திட்டி என்ன செய்தாலும் அது பத்திரிகை செய்திதான். அது சுற்றி உள்ளவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் அவன் எப்போதுமே வீரனாகிவிட முடியாது. அது தோற்று அவமானம் அடைந்தவர்களின் கூச்சல். அந்தக்கூச்சலுக்குக் கைத்தட்ட ஆள் இருக்கும். குரங்கு குட்டிக்கரணம் அடிக்கும் போது கைத்தட்டுவதில்லையா.

Continue reading

எதிர்வினை 3: நட்பு நீக்கம் – அ.பாண்டியன்

imagesமதியழகன் நான் உங்களை என் முகநூல் நட்பில் இருந்து நீக்குகிறேன்.

இப்படி அறிவிப்பை எழுதிய பிறகு உங்களை நீக்குவதே சரியாக இருக்கும். அதன்வழி, பயந்தவன், நேர்மையற்றவன், கோழை என்ற வசைகளை நீங்கள் விரையமாக்காமல் இருக்கலாம் அல்லவா.

அதற்கு முன்…

Continue reading