எதிர்வினை 1 : கள்ள மௌனமும் இலக்கிய உலகமும் – கலை சேகர்
மதியழகன் என்பது புனைப்பெயர்தான் – ம.நவீன்
மதியழகன் தன் முகநூலில் எனது நேர்காணலை முட்டாள்தனமானது என்பதாகக் குறிப்பு ஒன்றை இன்றைக்கு எழுதியுள்ளார். அதற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். உழைப்பை அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். அவரது அதிகபட்ச உழைப்பே ஒரு கட்டுரை எழுதும் முன் பலரையும் அழைத்துக் கருத்துக்கேட்டு தொகுப்பதுதான். மலேசியத் தமிழர்களின் வாசிப்பு குறித்த கட்டுரை எழுதும்போது என்னை அழைத்தவர் “மா.இராமையா என்பவர் யார்? நான் கேள்விப்பட்டதே இல்லையே?” எனக்கேட்டபோது அவர்தான் மலேசியாவின் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார் எனக்கூறி விளக்கம் கொடுத்தபோது “அப்படியா? அப்படியா? எனக்குத் தெரியாதே” எனக்கேட்டுக்கொண்டவரின் அறியாமை இன்னமும் மனதில் அகலாமல் உள்ளது. ஆனால் மலேசியாவில் மிக நீண்டகாலம் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த எழுத்தாளரின் பெயரையும் தான் அறிந்திராததைப் பற்றிய குற்ற உணர்வோ வெட்கமோ கொஞ்சமும் இல்லாமல் அதை தனது அசட்டுச் சிரிப்பின் வழி கடந்துகொண்டிருந்தார்.
ஆதி.இராஜகுமாரன்: நிழலைப் பதுக்கிய கலைஞன்
வல்லினம் நூறு வீடியோ பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘ஒருவேளை ஆதி.இராஜகுமாரன் இல்லாமல் இருந்திருந்தால் வல்லினம் அச்சு இதழ் தொடர்ந்து வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்.’ அவ்வுதவியை அவர் நட்பு கருதி செய்யவில்லை. அடிப்படையில் அவர் தன்னை ஓர் தேர்ந்த இலக்கிய வாசகனாகவே வைத்திருந்தார். எனவே அவ்வாறான முயற்சிகளில் தன்னை இணைத்துக்கொள்வது அவருக்கு உவப்பாக இருந்தது.
மண்டை ஓடி: கிறிஸ்டி கடிதம்
அன்பு நண்பர் நவீன் அவர்களுக்கு,
கிறிஸ்டி எழுதிக் கொள்வது. கடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் தங்களை நான் சந்தித்தது நினைவிருக்கலாம். எனக்கு உங்கள் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தை “வாசித்துவிட்டு எழுதுங்கள்” என்று சொல்லிக் கொடுத்ததும் நினைவிருக்கலாம். அடுத்த சிறுகதைத் தொகுப்பையே வெளியிட்டு விட்டீர்கள் என்று நண்பன் சுரேக்ஷ் கூறினான். மிகவும் தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும். இடையில் சில காரணங்களால் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. மீண்டு வந்ததும் உங்கள் சிறுகதைத் தொகுப்பைத்தான் முதலில் வாசித்தேன். உடனே எழுத மனம் துடித்தாலும் அலுவலகப் பணிச்சுமையும் அலைச்சலும் தடைகளாகவே இருந்தன. இன்றைய தினத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல எனக்கும் இன்று இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தது.
மதியழகன் குறிப்புகள் : போலி அறிவுவாதப் புற்று – ம.நவீன்
பகுதி 1
கலை இலக்கிய விழா பணிகளின்போது பொதுவாக வேறு சங்கதிகளில் ஈடுபடுவதில்லை. அது நேரத்தைச் சன்னஞ்சன்னமாக உறிஞ்சும். அதே மனநிலையில்தான் மதியழகன் முனியாண்டி தன் முகநூலில் எழுதியுள்ள குறிப்பை ஒரு முகநூல் பதிவாக மட்டுமே எண்ணி புறக்கணிக்க நினைத்தேன். எளிய கலந்துரையாடலுக்குக்கூடத் தகுதியற்ற பிதற்றல்கள் அவை. குறிப்புகளை ஒட்டி விஜயலட்சுமி எழுப்பிய சில அடிப்படையான கேள்விகளை அவர் ‘கிறுக்கல்கள்’ எனப் புறம்தள்ளி விட்டிருந்தார். சரி என அவரது முந்தைய சில குறிப்புகளை வாசித்தபோது கடும் அதிர்ச்சி. கட்டுரையைவிட அதைப் பாராட்டி எழுதப்பட்ட கருத்துகள் மேலும் குழப்பங்களையே உண்டு செய்தன. முகநூலில் போலி புத்திஜீவிகள் எவ்வாறு உருவாகின்றனர் என மதியழகன் முனியாண்டியின் முகநூலை வளம்வந்தால் போதும் எனப்புரிந்தது. எதையும் சிந்திக்க முடியாத ஒரு தரப்பு இளைஞர்கள் எத்தனை பரிதாபமாக இவ்வாறான அரைவேக்காட்டு எழுத்துமுறையில் சிக்கிக்கொள்கின்றனர் எனவும் அறிய முடிந்தது. எனவே, இந்தக் எதிர்வினை அல்லது விளக்கம் மதியழகனுக்கு மட்டுமல்ல. மதியழகனால் வெகு எளிதில் இந்த எதிர்வினையைக் கடந்து செல்ல முடியும். அதற்கு அவரிடம் Mark Zuckerberg முகநூலில் உருவாக்கிக்கொடுத்த கிண்டல் சிரிப்பு சின்னம், ‘ஹஹஹ..’ என சத்தமிட்டு சிரிக்கும் பாவனை, இது ஒரு மாற்றுக்கருத்து என்ற பெருந்தன்மையான வசனங்கள் உதவக்கூடும். எனவே கொஞ்சம் மேம்பட்டு சிந்திக்கும் ஆர்வம் இருந்தால் பிற வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.
வெள்ளைப் பாப்பாத்தி
மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவதுபோல இருக்கும்.
அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத் தாட்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லி கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும் வரை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அன்றைய தினத்தைத் தவறவிட்டால் வருட இறுதி விடுமுறை நீண்டுவிடும். பொதுவாக இறுதி ஆண்டுத் தேர்வு முடிந்தபின் பாடங்கள் நடக்காது. என்றாலும் ஆர்.எம்.டி உணவு கிடைக்கும் என்பதால் அம்மாதான் தினமும் அவளைப் பள்ளிக்குச் செல்லும்படி விரட்டிக்கொண்டிருந்தாள்.
கடிதம் : சிவமணியம்
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி, நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை, நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து, அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள். என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன்.
கடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்!
ஒரு இடைவெளிக்குப் பின் எழுதும் கருத்துரை அல்லது சிறிய எதிரொலி. சிறிது நேரம் அழகு காட்டி மறையும் வண்ணத்துப்பூச்சி வாழ்வு. அவ்வுலகில் நிறைந்திருப்பது அடர்த்தியான வண்ணங்களும் சிறகுகளும் மட்டுமே.
வெண்டைக்காயில் தொங்கட்டான் போட்டு தங்களை அழகுப்படுத்திக் கொண்ட ‘கோணங்கியின்’ கொல்லனின் பெண் மக்கள் : தின்பண்டத்துக்கு ஏங்கிய தன் குழந்தைகளுக்கு சோழ தட்டையை நிலக் கசக்காய் கசக்கி கொடுத்த கொல்லன். இந்த உலகுக்குள் ஊடுருவிப் புதைந்திருப்பது அற்புத வாழ்வியல் வண்ணங்கள். கவிதை மொழியில் பின்னிக் கலந்த கதையுலகம்.
கடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி
என் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இப்படி உரிமையுடன் அழைப்பதற்கு காரணம் உங்களின் அண்மைய சிறுகதையான ‘வெள்ளை பாப்பாத்தி’ என்பதை சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன்.
‘நாகம்’ சிறுகதையைப் படித்தவுடனேயே நீங்கள் எனக்கான எழுத்தாளர் என்று முடிவெடுத்தேன். சில அறியாமைகளை முகநூலில் கேட்டிருந்தேன். பதில் சொல்லவில்லை 🙂
‘வெள்ளை பாப்பாத்தி’ எனக்கு மிகுந்த அணுக்கமான சிறுகதையாக உள்ளது.