‘வெள்ளை பாப்பாத்தி’ குழந்தைகளின் உலகத்தில் குழந்தமையைத் (innocence) தவிர வேறு எந்த விழுமியங்களுக்கும் பொருள் இல்லை என்று உணர்த்தும் கருவை களமாகக் கொண்டு பயணிக்கும் விழுமியத்தின் உரு. இருந்தாலும் சிதைந்த கருவின் ஒரு துளி உதிரம் போல அபலைப் பெண்களின் அவலத்தை தன்னை அறியாமலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ருக்குவின் ‘மினி சைக்கிள்’, 80களில் துண்டாடப்பட்டத் தோட்டக்காட்டு பெண்களின் வேலை இல்லா கையறு நிலை என் மனக்கண் முன் என் சகோதரிகளையும் நவீன் போன்றொரின் அம்மாக்களையும் நிழலாடச் செய்தது இது. அன்றைய பிழைப்பு நெருக்கடி மட்டுமல்லாமல், ருக்கு போன்ற அபலைகளின் சமுதாய மதிப்பீடுகள் சார்ந்த தனி மனித ஒழுக்க இடுக்குகள் குவிந்த அடையாள சிக்கலும் கூட. அனுபவத்தில் இல்லாத நெருக்கடிகளைக் கையாள முடியாத அடையாளக் குழப்பங்கள் நிறைந்த இருண்ட வாழ்க்கையின் சித்தரிப்பு எழுத்தாளனின் பிரக்ஞை இன்றியே வெளிப்பட்டுள்ளது. அவரின் ஆழ்மனதின் அதிருப்திகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு
எனது தனி வாழ்வில், சில வருடம் முன்பு தனிப்பட்ட முறையில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை தமிழ் நிலத்தில் அரசு தனது பள்ளிகள் வழியே குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வியும், அது அந்தக் குழந்தைகளை சென்று சேரும் விதத்தையும் ஒரு தன்னார்வலனாக கடலூர் மாவட்டத்தின் பல அரசு ஆரம்ப பள்ளிகளில் சென்று தங்கி அவதானித்திருக்கிறேன் .
கடிதம் 2: வெள்ளை பாப்பாத்தி
நவின், ஜெயமோகனோ , ராமகிருஷ்ணனோ சொல்லி கேட்டிருக்கிறேன். படைப்பாளி யானை போல இருக்க வேணும் என்று. முட்டி மரத்தை சாய்க்கவும் முடியவேணும். தும்பிக்கை நுனியில் ஊசியை எடுக்கவும் முடியவேணும். போயாக், பேச்சி மரத்தை சாய்த்தது. வெள்ளை பாப்பாத்தி ஊசியை எடுத்தது. அம்மாவின் கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது. முடிந்தால் அதை மெருகேற்றலாம். கொடிமலரின் வருங்காலத்தைக் குறியீட்டால் காட்டதான் அம்மா என்றால், அது தேவை கூட இல்லை.
கடிதம்: வெள்ளை பாப்பாத்தி
வெள்ளைப் பாப்பாத்தி ஓர் அழகான சித்திரமாக மனதுக்கு இதம் தருகிறது. அதுவும் குறிப்பாக, குழந்தைகள் குறித்த மனதை வேதனைப்படுத்தும் செய்திகளை ஊடகங்களில் படித்துப் படித்து வெறுத்துப் போயிருந்த நேரத்தில், கள்ளங்கபடற்ற குழந்தையின் உள்ளத்தை எந்தச் சடங்கமும் இல்லாமல் ரசிக்க வைத்த ஆசிரியருக்கு நன்றி. எல்லாக் குழந்தைளையும் போல கொடிமலர் தன்னுடைய உலகத்தில் மிகச் சந்தோஷமாக வாழும் சிறுமி. உலகின் அற்புதங்களை உணரவும் ரசிக்கவும் நிகழ்த்தவும் அவளுக்கு ஒரு வெள்ளை வண்ணத்தி போதும். அவள் தேவதையாகிறாள். வரம் தருகிறார். வலிகளைப் போக்குகிறார்கள். வறுமையிலும் சிரமத்திலும் வாழும் அச்சிறுமி மிகுந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியாகக் கதை முழுக்கக் குதித்தோடுகிறாள். போக்குவரத்து விளக்குகள் வண்ண மிட்டாய்களாய் அவளுக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. காரில் போகும் வகுப்புத்தோழன் கணபதியை முந்தி சைக்கிளில் போவதில் அவளுக்கு உற்சாகம் கொப்பளிக்கிறது. அந்தக் குழந்தை ஆனந்தமடைய ஸ்ட்ராவும் கால்பிடி அரிசிமணிகளுமே போதும். தன்னைக் கேலி செய்து வருத்தப்பட வைக்கும் கணபதியையும் சிறுகுழந்தையாக்கி, தான் ஒரு பெரிய தேவதையாகி வரம் தருகிறாள். உலகியலில் அவளிடம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் நிறைவானவள்.
பேச்சி: கடிதம்
திரு நவீன்
பேச்சி சிறுகதை வாசித்தேன், நான் பெரும்பாலும் இணையத்தில் கிடைக்கும் கதைகளை வாசிக்கிறேன். பேச்சி என்னுள் ஒரு சலசலப்பை உருவாக்கிவிட்டது. கதை வாசித்து பத்து நாட்கள் ஆகியும் பேச்சி பற்றியே சிந்தித்துகொண்டிருக்கிறேன் என கூறிவிடலாம். பெரிய இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லையெனினும், இப்போது படித்துகொண்டிருக்கிறேன். கதையை வாசித்து முடித்தவுடன் என்னை வசிகரித்த வரிகளை தொகுக்க வேண்டும் என்று நினைத்தேன். மனதளவில் சேகரிப்பதைவிட, எழுதி பார்த்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. பேச்சி கதையின் என்னை கவர்ந்த வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
சிறுகதை : பேச்சி
“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன்.
நிமிர்ந்து பொன்னியின் படத்தைப் பார்த்தேன். கடந்த தீபாவளிக்கு இரண்டு கால்களும் இருக்கும்போது துடைத்தது. கனகாம்பர மாலை காய்ந்து பழுப்புச் சங்கிலியாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அவளுக்குக் கடைசி மாலையாக இருக்கலாம். செல்வம் என் படத்தைப் பொன்னிக்குப் பக்கத்தில் மாட்டிவைத்தாலே பெரிய கொடுப்பினைதான். நினைவு வந்தால் பார்த்துக்கொள்ள படங்களைக் கைப்பேசியில் சேகரிக்கும் தலைமுறை அவன். நான் நினைவுகள் உருவாகப் படங்களைச் சுவர்களில் மாட்டிவைப்பவன்.
இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்
எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் ‘இலங்கை,நவீன்‘ எனும் குறிப்பை வாசித்தபோதே அதை ஒட்டிய சர்ச்சை எழும் என அறிந்ததுதான்.
ஒரு பயணக்குறிப்பு அதை வாசிக்கும் நபர்களின் தேடலில் / தேவையில் இருந்து உள்வாங்கப்படுகிறது. உண்மையில் என் பயணக்குறிப்புகள் எதை ஒட்டியும் ஆழமான பதிவொன்றைச் செய்யவில்லை. அவை அப்போதைய எனது மனப்பதிவின் புகைப்படங்கள். ஜெயமோகன் பிரதானமாக ஒரு நிலத்தின் இலக்கியச் சூழலை அறிய விரும்புபவர். அவ்வகையில் என் கட்டுரை வழி அவர் முன் வைத்தது ஒரு கருதுகோள் மட்டுமே. அந்தக் கருதுகோளை தவறு என மறுக்கவும் உண்மை என நிறுவவும் ஆரோக்கியமான உரையாடல்கள் தேவையாக உள்ளன.
உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்
ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.
சடக்கு வந்த வழி
ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே நிலை உள்ளதை அறிய முடிந்தது.