பேச்சி கதை வாசிப்பின் முடிவில், புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல இருந்தது.
யாக்கை
“ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. முடியை இழுத்துவாரி குதிரைவால் கொண்டை கட்டியிருந்தாள். கொண்டைக்கு மட்டும் பழுப்பு நிற வண்ணம். சிலிவ்லெஸ் உடலோடு ஒட்டாதபடிக்கு மார்புகள் நிமிர்ந்திருந்தன. வெள்ளை லேகிங்ஸில் பிட்டங்கள் ததும்பித்திமிரின. கருஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் அழகாக தெரியலாம் என நினைத்துக்கொண்டான். முயக்கத்தில் ஒத்த நிறம் கொண்ட ஜோடியுடன் இருக்கும்போது தனியாக இருப்பதுபோல பிரம்மை அவனுக்கு ஏற்படுவதுண்டு. ஓர் அறைக்குள் நிர்வாண தனியனாக இருப்பதென்பது அவனை அச்சமுற வைக்கும். அவன் அதிகம் பேசவில்லை. வழக்கம் போல சடங்காக “ஏன் இந்த வேலைக்கு வந்த?” என்றான். “அப்பா கடல்ல உழுந்து செத்துட்டாரு. அதான் சர்” என்றபடி உடையைக் களையத் தொடங்கியபோது அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
பேச்சி : கடிதங்கள்
கதைக்குள் நுழைவதற்குள், கதைசொல்லியை நான்கு வார்த்தைகள் திட்டிவிட வேண்டும்.
வார்த்தைக்கு வார்த்தை வியக்கும்படிச் சொல்லிச் செல்லும் யுக்தியை எங்கிருந்து ஐயா கௌவிக்கொண்டீர்கள்?
ஒரு சிறுகதையில் இவ்வளவு சொல்ல முடியுமா என்ற வியப்பை அள்ளிக் கொட்டுவதில் அப்படியென்ன வெறி உங்களுக்கு?
சிறிய புள்ளியான கருவை நீங்கள் பாட்டுக்கும் கிறுக்கித் தள்ளி திகைக்க வைப்பதில் யார் மேல் இந்த ஆதங்கம்?
அடிக்கடி புதியவைகளை எழுதித் தள்ள எங்கிருந்து கிடக்கிறது நேரம்?
பேச்சி : கடிதங்கள்
பேச்சி: சுனில் கிருஷ்ணன்
அன்புள்ள நவீன்
இதுவரை வந்துள்ள இந்த வரிசை கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை என ‘பேச்சி‘யை சொல்வேன். ‘யாக்கை’ யின் கதை சொல்லல் பாணி இதிலும் தொடர்கிறது. அப்பா கதை சொல்லியாகவும், அப்பா சொல்லி மகன் செல்வம் எழுதிய கதை என இரு சரடாக பிணைந்து செல்கிறது. அப்பா சொன்ன கதையே கூட செல்வம் சொன்னதுதானா என்றொரு மயக்கத்தை கதை அளிக்கிறது. இரண்டு கதைகளில் ஒரு கதை முற்று பெறுகிறது, மற்றொன்று பெறவில்லை என்பதாக கூட தோற்றமயக்கம் உருவாக்கியதில் கதை வெற்றி பெற்றுள்ளது. ‘கிராப்ட்’ ரீதியாக இந்த சோதனை கதை சொல்லல் முறையில் தேர்ந்து விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். எனினும் இதில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது, இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக ஆகிவிடக்கூடும். கருப்பு மண்ணுக்கு அடியில் சிவந்த மண் கொம்பனை நினைவுபடுத்தியது போன்ற தகவல் வாசகரை கவனம் சிதற செய்யும் யுத்தியாக ஆகிவிடக்கூடும். தொன்மமும் உறவு சிக்கலும் முயங்கும் கதை. பேச்சி எனும் தொன்மம் வழியாக உறவு சிடுக்கை, பெண் உளத்தை தொட முயல்கிறது.
யாக்கை : கடிதங்கள் 5
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
கனவு கலைந்து, கலங்கிய நினைவுடன் விழித்தெழுந்த, ஒரு அதிகாலையில் முதல் வேலையாக ‘யாக்கை’ கதையை வாசித்தேன். அந்த தருணம் முதல் எழுதும் இந்தக் கணம் வரை மனதில் ‘யாக்கை’ யே நிரம்பி வியாபித்திருக்கிறது. ‘காலைக் காட்சியில் பாசியால் நிரம்பி பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்’ , ‘ஆழ்கடலுக்குள் உண்டாக்கிய அலைகளால் நீர் செம்மண் நிறத்திலிருந்தது’ போன்ற வர்ணனைகளும், ‘மழை பெய்த கடலடியில் மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்து விட்டால் மீன்கள் உஷாராகி விடும்’ போன்ற நுண்தகவல்களும், ‘நீரில் உலர்ந்து பிளவுபடத்துவங்கிய முதுகுத்தோலை கொத்தி மீன்கள் சதையை பிய்த்த’, ஈத்தனின் வாழ்வின் உச்ச தருணங்களும், என இந்த கதை அபாரமான வாசிப்பனுபவம் தந்தது. கப்பலின் முன்பகுதிக்கு அணியம் எனவும், இங்கு சங்கரா மீன் என கூறப்படுவதன் ஒரு வகை, செப்பிலி மீன் எனவும் அறிந்து கொண்டேன்.
யாக்கை : கணேஷ் பாபு கடிதம்
யாக்கை: விஜயலட்சுமி
உடலும் அதனுடன் சேர்ந்து உயிரும் இன்னொன்றுக்கு உணவாவதை ஈத்தனின் மரணமும் மகளின் தொழிலும் சொல்கிறது. கடலில் ஈத்தனின் உடல் மீன்களால் அனுமதியின்றி தின்னப்பட்டது. தன் மகள் ஆண்களால் தின்னபட்டுவிட்டாள் என்பதை புரிந்தவுடன் ஈத்தன் தன்னை கடலுக்கு இரையாக்குகிறான். இப்போது அவளுடன் புணர வந்தவன் தன்னையும் ஒரு உடல் தின்னி என்பதை உணரும்போது நிற்க முடியாமல் ஓடுகிறான்.
இது கதையோட gist.
யாக்கை: கடலூர் சீனு கடிதம்
உங்கள் தளத்தில் யாக்கை சிறுகதைக்கு வந்த வாசகர் எதிர்வினை அனைத்தும் வாசித்தேன் . ஒரு கதை எவ்வாறெல்லாம் வாசித்து உள்வாங்கப்படுகிறது என்பதை நெருங்கி அறிவது ஒரு வாசகனாக எப்போதுமே எனக்கு உவகை அளிப்பது .
கடிதங்களை வாசித்த வரையில் நான் அவதானித்தது மூன்று.
யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின் போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.
Continue reading →