யாக்கை சிறுகதை கதையை நகர்த்தும் பாத்திரங்களின் இரு உடல்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறது என்பதை மையப்படுத்துகிறது. ஈத்தனின் உடல் இனி மகளின் எதிர்கலத்தைக் காப்பாற்ற உதவாது என்பதையும், கேத்ரினின் உடல் காமுகரிடம் சிக்கி சிதைவுறப் போகிறது என்பதைக் குறியீட்டு ரீதியாகயாகவும் அழகியல் ரீதியாகவும் சொல்லிச் செல்கிறார். இரண்டு உடலுமே ‘தின்னக் கொடுத்து’ சன்னஞ் சன்னமாக அழிகிறது அல்லது அழியப்போகிறது என்பது அதன் சொல்லும் திறனில் சிறக்கிறது.
யாக்கை சிறுகதை – கடிதங்கள் 3
திருவாளர் நவீன் அவர்களுக்கு. போயாக் சிறுகதையின் மூலம் உங்களை அறிந்து உங்களது சிறுகதைகளையும் அறிந்தேன். ‘யாக்கை’ நல்லதொரு சிறுகதை.
ஈத்தனுடைய தந்தையார் ஈத்தனுக்காக தன் யாக்கையை சுறாமீனுக்குத் திண்ணக்கொடுக்கிறார். ஈத்தனுடைய மகளும் ஈத்தனால் தன் உடம்பை மனிதர்களுக்குத் திண்ணக்கொடுக்கிறாள். இப்படி இரு தலைமுறையினரை தனக்காகவும் தன்னாலும் திண்ணக்கொடுக்கவைத்த ஈத்தன் தன் யாக்கையையும் கடலுக்குத் திண்ணக்கொடுக்கிறார்.
யாக்கை சிறுகதை – கடிதங்கள் 2
விபச்சார விடுதியில் வண்ணக்காட்சிகளாகவும், கடலின் நடுவிலே வெள்ளை கருப்பு காட்சிகளாகவும், கதை இரண்டு தளத்திற்கும் மாறி மாறி நகர்வது சுவாரசியம்.
முதல் இரு வாசிப்புகளில் ‘ஈத்தன்’ மீதுதான் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தன. அவன் மகளையே உடலால் உறவுக்கொள்ளும் ஒரு கொடூரன் என்றும், உடல் செயலிழந்து காம உறவை தொடர இயலாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறான் என்றும் புரிதல் இருந்தது. பிறரின் கதையாக இது இருந்திருந்தால் அந்த புரிதலோடு….சரி கதை ஓகே இரகம் என கடந்திருப்பேன்.
யாக்கை சிறுகதை – கடிதங்கள் 1
வல்லினத்தில் வெளிவந்துள்ள எனது யாக்கைக் குறித்து நண்பர்களின் பார்வையும் விமர்சனமும்.
சிறுகதையை வாசிக்க : யாக்கை
யாக்கை என்றால் உடல். யாக்கை என்றவுடனே யாக்கை நிலையாமையும் நினைவில் வருகிறது. இக்கதை உடல் மூலதனமாகும், பயனற்று போகும் இரு சரடுகளால் பின்னப்பட்டுள்ளது. கேத்தரினா, அவள் தந்தை என மாறி மாறி பயணிப்பது நல்ல வாசிப்பை அளிக்கிறது. கதையின் மிக முக்கியமான இடம், ஈத்தன் தன் மகள் துணையின்றியே இரண்டு மாதம் இருந்திருக்கிறாள். அதுவும் ஜொலிப்புடன் என்பதை உணரும் தருணம். அங்கிருந்து கேத்தரினா இன்று பார்க்கும் தொழிலுக்கு ஒரு நேர்கோட்டு இணைவை வாசகராக கற்பனை செய்து கொள்கிறேன்.
போயாக் : கடிதம் 5
குறிப்பு : இவை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்டு இன்னும் பிரசுரமாகாத கடிதங்கள்.
எனக்கு இந்தக் கதையை படிக்கும் போது உளப்பகுப்பாய்வு கோட்பாட்டைத் தான் நினைத்துக்கொள்ள முடிகிறது. மேல் மனதிற்கும் அடி மனதிற்கும் இடையேயான இடியாப்பச் சிக்கலைப் பற்றியது அது. அடி மனம் பழங்குடிகளுக்கானது. உள்ளுணர்வையே நம்புவது, கட்டற்றது ஆனால் நாம் வாழும் சமூகம் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டது. மேல் மனம் அதற்க்கேற்றார் போல அடி மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒரு போராட்டம் அல்லது சிக்கல் உருவாகிறது. அந்தச் சிக்கல்தான் கதையின் நாயகனின் சிக்கலும் கூட.
போயாக் : கடிதம் 4
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள், பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப் போல விவரிக்கப்பட்டிருந்தது. தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர் என்ற மூன்று வழிகளில் ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி. அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.
போயாக் : கடிதம் 3
அன்புள்ள நவீன், நலம்தானே? நேற்று காலை உணவின்போது Netflixஇல் “Black Mirror” என்ற தொடரின் Crocodile பாகத்தை பார்த்தேன். உடனடியாக போயாக் நினைவில் எழுந்தது. அக்கதையிலும் மைய பாத்திரங்களாக இரண்டு பெண்கள். அறிவியல் மிகுபுனைவுக் கதைகளை கொண்ட இத்தொடரின் இந்தக் கதையில் கண் சாட்சியற்ற ஒருநிகழ்வு உலகியல் தளத்தில் நடைபெற சாத்தியமேயில்லை என்பதை சொல்முறையின் புறவய தோற்றத்தில் நிறுவி விடுகிறது. மேலாக உட்குறிப்பில் எல்லைகளை மீறும் முதலைகளின் உலகில்சாட்சியாக நிற்க்கும் ஒன்றுமறியாத பரிசோதனைப் பன்றி குட்டிகளின் நிலை என்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது.
போயாக்: கடிதங்கள் 2
பொதுவாக சொல்லிவிட்ட எதையும் என்னால் எழுத இயலாது. சொல்லியது கடந்து இன்னும் சொல்லாமல் விட்டவை இருந்தால் மட்டுமே பேசியதை எழுத முடியும். போயாக் கதை குறித்து உங்களிடம் உரையாடி விட்டேன் உரையாடலில் .விடுபட்டது ஏதேனும் இருப்பின் அதை எழுதலாம் என எண்ணினேன். இதோ அந்த விடுபடலை எழுது முன் உங்களுடன் உரையாடியவற்றின் மையத்தை தொகுத்து முன் வைத்து அதன் பின் விடுபடலை தொடர்கிறேன் .
போயாக்: கடிதங்கள்
கதை சொல்லும் நவீன் இம்முறையும் நம்மை ஏமாற்றவில்லை. இது அவரின் சுய அனுபவமாக இருக்க முடியாது, ஏனெனில் நவீன் எனக்குத் தெரிந்தவரை பணியிட வேலை மாறி சரவாக் மாநிலத்துக்குப் போனதில்லை. எனவே யாரோ ஆசிரியர் சொல்லக் கேட்டு எழுதியிருக்கலாம். இது என் அனுமானம். இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனால் மட்டுமே தான் செவிமடுத்த ஒன்றை புனைகதையாக்க முடியும். நீட்டல் மழித்தல் இருக்கலாம். அப்படி இதிலும் உண்டு என்று நம்புகிறேன்.
சிறுகதை: போயாக்
டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது. ஓர் ஆற்றின் துறைமுகத்தில் என்னை இறக்கியப்பின் கிளம்பிவிட்டார். சட்டென குளிர் சூழ்ந்துகொண்டது. நான் ஆற்றங்கரையோரம் பள்ளிக்கூடத்தைத் தேடுவதைப் பார்த்த படகோட்டி ‘என்ன’ என்பதுபோல தலையை ஆட்ட கைகள் இரண்டாலும் கூம்புபோல இணைத்துக்காட்டி “ஸ்கோலா” எனக்கத்தினேன். ஏறும்படி சைகை காட்டினார். படகின் ஒரு முனை கயிற்றால் கரையில் இருந்த கட்டையில் பிணைக்கப்பட்டிருந்தது. மிதந்துகொண்டிருந்த படகில் அவர் அவ்வளவு நேரம் உறங்கியதற்கான தடயங்கள் முகத்தில் எஞ்சி இருந்தன.