உங்களுடன் நிகழ்த்திய உரையாடல் பல அலகுகளில் என்னை தொகுத்துக்கொள்ள உதவியது. ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு எதிராக ஆன்மசுத்தியுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுமையுடன் உரையாடி இருக்கிறேன். அதில் உரையாடல் என்பதையும் கடந்த பொறுப்புணர்வு உண்டு. அந்த பொறுப்புடன்தான் அந்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறேன் என அதை மறுவாசிப்பு செய்த்து அறிந்து கொண்டேன் .
2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
வண்ணங்களைப் பூசி விளையாடிய குழந்தை கைகளைக் கழுவாமல் தூர நின்று ஒழுங்கற்ற ஒழுங்கை ரசிக்கும்போது அதற்குள் ஏற்படும் பரவசம்தான் வருட இறுதியில் நின்றுகொண்டு திட்டுத் திட்டான அவ்வருட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படுகிறது. புதிய கார் வாங்குவது, புது வீடு வாங்குவது, திருமணம் செய்வது என இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூல் முழுக்க லட்சியக்குரல்கள் நிறைந்து கிடந்தபோது ஓர் எழுத்தாளனாக மட்டுமே வாழ்ந்து முடிக்க சித்தமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அர்த்தப்படும் கணங்கள் பொதுவெளியில் வியப்புக்கும் பின் நீடித்த நகைப்புக்குமாக மாறிவிடுகின்றன. அவ்வாறு சவர்க்கார பலூன் விடும் குழந்தையைப்போல எனக்குள் நுரைத்து நுரைத்து இவ்வருடம் மகிழ்ந்த நாட்கள் அதிகம்.
மூதாதையர்களின் நாக்கு – 7: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
காலையிலேயே எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் மாணிக்கவாசகர் திருக்கோயில் சென்றோம். கோயிலை நெருங்கியதுமே அதன் புற வளாகத்தில் இருந்து வேப்ப மரக் காற்று சிலிர்க்க வைத்தது. “இதுதான் நம்ம இடம்” என கோணங்கி கைகளை விரித்து காற்றை உள் வாங்கினார். மாணிக்கவாசகர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் அக்கோயில் மிக எளிமையாக, சிறிய பரப்பளவைக் கொண்டிருந்தது. அங்கிருந்த கிணறு மிகப்பழமையானது எனச் சொன்னார்கள். கோயிலைவிட அதன் சுற்றுப்புறம் அவ்வதிகாலையில் உற்சாகத்தைக் கொடுத்தது. கொஞ்ச நேரம் அவ்வின்பத்தைப் பருகிவிட்டு திருமறைநாதர் கோயில் புறப்பட்டோம்.
இறுதியாக – சீனு
முதலில் இரண்டு விஷயங்களை திட்டவட்டமாக சொல்லி விடுகிறேன் . ஒன்று உரையாடலின் புரிதலின் பொருட்டு மட்டுமே ”இங்கு ” ”அங்கு ” எனும் பதத்தை பயன்படுத்துகிறேனே அன்றி , அது பிரிவினையை சுட்டுவதற்கு அல்ல . [நீங்கள் அதை அறிவீர்கள் ].
இரண்டு தீவிர இலக்கியம் , இலக்கிய செயல்பாடுகள் கைக்கொள்ளும் ஆளுமைகள் மீதான மாளாத காதல் கொண்ட வாசகனாக மட்டுமே நின்று உரையாடுகிறேன் . நிற்க .
தீவிர (வணிக) இலக்கியம் – 2
அன்பான சீனு, இந்த உரையாடலைத் தொடங்கியது முதலே வேதசகாயகுமாரின் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்’ எனும் நூலே நினைவுக்கு வருகிறது. சண்முகசிவா என் தொடக்கக் கால வாசிப்புக்கு இந்நூலைக் கொடுத்தார். எல்லோரையும்போல நானும் ஜெயகாந்தன் வழி இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் என்பதால் இந்நூல் என்னை மிகவும் புண்படுத்தியது. அப்போது வேதசகாயகுமார் முக்கியமான திறனாய்வாளர் என்றெல்லாம் தெரியாது. தெரிந்திருந்தால் இன்னும் கலக்கம் அடைந்திருக்கக் கூடும். அதில் வேதசகாயகுமாரின் கருத்துகள் ஜெயகாந்தனை நிராகரிப்பதாகவே உள்வாங்கிக்கொண்டேன். விகடனின் எழுதிய அவரது நிலைபாடு குறித்து கு.அழகிரிசாமி உள்ளிட்ட பலரது கருத்துகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 1992 அவரது முனைவர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வேடு 2000இல் தமிழினி பதிப்பில் வந்தது. அப்போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான பதில் 20 வருடங்களுக்குப் பின் மலேசிய இலக்கியச் சூழலில் இருந்து கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மூதாதையர்களின் நாக்கு – 6: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
தோழர் அன்புவேந்தனைச் சந்தித்தவுடன் மதுரைக்கு வந்த உற்சாகம் பிறந்துவிட்டது. கடந்த முறை தமிழகப் பயணத்தில் யானை மலையில் உள்ள சமண படுகைகள் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளுக்கு என்னையும் தயாஜியையும் அழைத்துச் சென்றார். பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான தொடர்ந்த ஆய்வில் இருப்பவர். மீனாட்சியம்மன் ஆலயத்தில் அவரைச் சந்தித்தோம். விஜயலட்சுமியை மீனாட்சி தரிசனத்துக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் ‘வல்லினம் 100’ கொடுக்க வேண்டும் என விரும்பினேன். கொடுத்தேன். அவரது அப்போதைய ஆய்வுத்திட்டங்கள் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார். கடும் உழைப்பை கோரும் பணிகள். கோணங்கி எங்களுக்காகப் பசியுடன் காத்துக்கொண்டிருப்பார் என்பதால் சீக்கிரமாகவே புறப்பட்டோம்.
அந்தரங்கத்தீயும் அணையா சருகும் – கடலூர் சீனு
அன்பு அண்ணா ,
உங்கள் எதிர்வினையை தொடர்ந்து மேலும் என் சிந்தனையை தொகுத்துக்கொள்ள முயல்கிறேன் .
முதல் அலகாக நீங்கள் குறிப்பிட்ட தமிழ் நிலத்தின் சூழலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் . இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாதோருக்காக வைரமுத்து அவர்கள் உருவாக்கி அளிக்கும் மேடைகள், அவர் தனக்கான ஆதரவு வட்டத்தைத் தமிழ் புழங்கும் எல்லா நிலங்களிலும் உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றே. தீவிர இலக்கியத்துடன் எவ்வகையிலும் சம்பத்தம் அற்ற வைரமுத்து ஜெயகாந்தன் எனும் ஆசானுக்கு அளிக்கப்பட ஞான பீடம் விருதை குறி வைத்து கணக்குகள் போட்டுக்கொண்டிருப்பது தமிழ் நிலம் அறிந்த ஒன்றே. அகிலனுக்கு அளிக்கப்பட்டு எய்திய இழிவை,ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டத்தின் வழியே சமன் செய்து கொண்டது அவ் விருது. இதோ மீண்டும் அவ்விருதின் பாதையில் மற்றொரு புதைகுழி . Continue reading
கடிதம் : பனை மட்டையும் பத்திரிகையும்
சீனுவின் கடிதம் சிற்றிதழ் சூழல் குறித்து மேலும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தூண்டியது. புறத்தோற்றம், வணிகமற்ற போக்கு, குரல் நசுக்கப்பட்டவர்களுக்கான தளம் என்கிற மாதிரியான வரையறைகள் சில முன்வைக்கப்படுவதைப் போலவே சிற்றிதழை மற்றுமொரு ஊடகமாகவும் (another medium) அல்லது குறிப்பிடத்தக்க ஒரு குறுங்குழுவுக்கானதாகவும் பார்ப்பதும் மிகக் குறுகலான பார்வை என்றே நினைக்கிறேன். அப்படியான வகைபாட்டு சிந்தனையினூடேதான் சீனுவின் கடிதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
தீவிர (வணிக) இலக்கியம்
அன்பான சீனு. மலேசிய இலக்கிய வரலாற்றை பலரும் திணற திணற மேடைகளில் பேசுவதை நான் கேட்டுள்ளேன். வருடங்களையும் சம்பவங்களையும் சரியாக ஒப்பிப்பதன் மூலம் தத்தம் ஞாபக சக்தியின் பளபளப்பைப் பொதுவில் காட்டி கண்ணைக் கூசச்செய்யும் திறன் வாய்ந்த நிபுணர்கள் எங்கும் உள்ளதுபோல மலேசியாவிலும் உண்டு. இப்படி ஒப்புவிக்கப்படும் இலக்கிய வரலாறுகள் பெரும் நிகழ்வுகளாகவோ சூழலை மாற்றியமைத்ததாகவோ சலனத்தை ஏற்படுத்தியதாகவோ தரவுகளின் பட்டியலாகவோ மட்டுமே இருந்துவிடுகிறது. வரலாற்றில் மாற்றங்களை நிகழ்த்தும் தனி மனிதர்களின் அந்தரங்க மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போதே மொத்த வரலாற்றின் வரைபடம் ஓரளவு பூர்த்தியாகிறது என்று நினைக்கிறேன். இதை வாய்மொழி வரலாறு மூலமே தொகுப்பது சாத்தியம். அவ்வாறான முயற்சியில் இறங்கியபோதுதான் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நவீன இலக்கியத்தில் இயங்கிய பலருக்கும் ஜெயகாந்தனின் தாக்கம் இருந்தது புரியவந்தது. அவர் வழியே அவர்கள் இலக்கியத்தின் காத்திரமான ஒரு பகுதியை அடைந்தனர். ஆனால் அந்தத் தாக்கம் ஜனரஞ்சக இதழ்கள் வழி கிடைக்கப்பெற்ற நகைமுரணே மலேசிய இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ள சரியான பாதை என நினைக்கிறேன்.
பனை மட்டையும் பத்திரிகையும் – கடலூர் சீனு
இக்கடிதம் அவ்வப்போது இலக்கு விலகி அலைய சாத்தியம் உண்டு . உங்கள் வினா வழியே நான் சிந்தித்தவற்றை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன் எனக்கொள்ளலாம் .
முதலில் உங்கள் வினாவை தமிழ் நிலத்தில், இந்த வினா உருவாகி வந்த கலாச்சார பின்புலத்தில் வைத்து அணுகிப் பார்க்கிறேன்.