அழகான குடும்பம் எழுத்தாளர் தூயனது. சற்று நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். விஷ்ணுபுரம் கலந்துரையாடலில் இளம் படைப்பாளிகளை நோக்கி ‘இப்படி எழுதக் காரணம் என்ன?’ எனும் அர்த்தத்தில் கேள்விகள் தொடர்ந்து எழுவதைக் காண முடிந்தது. தூயனை நோக்கி அவ்வாறான கேள்விகள் அதிகமே எழுந்தன. உண்மையில் அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதில்லை. அல்லது படைப்பாளிகளும் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிக்கின்றனர்.
மூதாதையர்களின் நாக்கு – 4: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், மண்டபம் எனும் ஊரில் அமைந்திருந்தது. முந்தையநாள் தோழர் தமிழ்மணி கூறிய மீன் அறுவடை செயல்திட்டத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தோம். Cobia மற்றும் pompano ரக மீன்களைப் பராமரித்து அவை உற்பத்தி செய்யும் குஞ்சுகளைக் கூண்டுகளில் வளர்க்கும் தொழில்நுட்ப முறையை இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்கின்றனர். 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவைக்கூண்டுகள் பல்வேறு அளவு துவாரங்கள் கொண்ட வலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு முறையாக உணவிட்டு வளர்ச்சி அடைந்தவுடன் அதை அறுவடை செய்கின்றனர்.
மூதாதையர்களின் நாக்கு – 3: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
பாம்பன் பாலத்தில் பயணிக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. 2,340 மீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் முதல் கடல் பாலம். 1914இல் சேவையைத் தொடங்கி 100 வருடங்கள் கடந்துவிட்ட இப்பாலம் பெரிய கப்பல்கள் கடக்கும்போது நடுவில் தூக்கி வழிவிடும். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து காத்திருந்தோம். இடையில் இரயில் பரமகுடி நிறுத்தத்தில் நின்றவும் தயாஜி பரவசமாகி அந்தப் பூமியில் கால்பதித்தார். கமலஹாசன் பிறந்த ஊரின் அருளால் தான் ஒரு சிறந்த நடிகனாக வரலாம் என்ற ஏக்கம் தெரிந்தது. அரை மணி நேரத்தில் பாம்பன் பாலத்தில் ரயில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. நாங்கள் கடலைப் பார்த்துக்கொண்டே வந்தோம். காலைக் குளிரைச் சுமந்திருந்த காற்று சிலிர்க்க வைத்தது. கீழே தண்டவாளத்தையோ அதை தாங்கியுள்ள தூண்களையோ பார்க்க முடியவில்லை. அகன்ற ரயில் கடலுக்கு மேல் அந்தரத்தில் மிதப்பது போன்றதொரு உற்சாகம். பக்கத்தில் வாகனம் செல்லும் பாலத்தில் நின்றபடி நிறைய பேர் எங்களைப் பார்த்துக் கையசைத்துக் கூச்சலிட்டனர். அது ரயிலுக்கான கையசைப்பு. அவர்கள் பார்வையில் நாங்கள் ரயிலின் உயிருள்ள உபரிப் பாகங்கள்.
மூதாதையர்களின் நாக்கு – 2: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
கீழே இறங்கியபோது ஜெயமோகன் தன் பயணக்குழுவின் நண்பர் ஒருவரைக் கலாய்த்துக்கொண்டிருந்தார். சிரிப்பும் கேலியுமாகக் காலையிலேயே தொடங்கிவிட்டிருந்தனர். உடல் நலம் கொஞ்சம் தேறியிருந்தது. நான் அந்த வட்டத்தில் நுழைந்தவுடன் கவனம் என்னை நோக்கி திரும்பியது. மலேசிய எழுத்தாளர்கள் மத்தியில் உள்ள பூசல்கள் பற்றிய கலாய்ப்புகளாக அந்தப் பேச்சு பரிணாமம் எடுத்தது. ஏதும் பதில் பேசினால் கிண்டல்கள் தொடரலாம் என மௌனமாகச் சிரித்தபடி இருந்தேன். இதற்கு முன் சிக்கிக்கொண்டவரும் அதே உத்தியைத்தான் கையாண்டார். ஜெயமோகன் கிண்டல்களில் சிக்கும் ஒருவர் இறந்ததுபோல நடித்தால் கரடி முகர்ந்து பார்த்து போய்விடும் எனும் நீதிக்கதையின் காட்சியை நினைவில் வைத்திருப்பது நலம். தம்பிடித்து இறந்தவன் போல இருந்ததால் ஜெயமோகன் கவனம் விஜயலட்சுமி பக்கம் தாவியது. “நீங்க பெண்ணிய எழுத்தாளரா?” என ஆரம்பித்தார். விஜயலட்சுமி என்ன சொல்வதென தெரியாமல் குத்துமதிப்பாக தலையை நேராகவும் பக்கவாட்டிலும் ஆட்ட நான் கழண்டுகொண்டேன்.
மூதாதையர்களின் நாக்கு – 1: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்
2011இல் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது எழுதிய சிறு குறிப்பில் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களைவிட ஓர் எழுத்தாளரே பூமணியை கௌரவிக்க பொறுத்தமானவர் என எழுதியிருந்தேன். அது பாரதிராஜாவையோ விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தையோ அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல. தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவின் அழுத்தமான இடத்தை அறிவேன். ஆனால் பூமணியின் நாவலை வாசித்திருக்கும் எழுத்தாளர் ஒருவரால் அவர் ஆளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடியும் என நம்பினேன். விருது வழங்கும் கரங்கள் பெறுபவரின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அது என் விருப்பம் மட்டுமே. இவ்வாண்டு மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு புலிநகக்கொன்றை, கலங்கிய நதி போன்ற நாவல்களுடன் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுத்திய பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் விஷ்ணுபுரம் விருதை வழங்குவதை அறிந்ததும் பயணத்துக்கான உற்சாகம் முழுமை பெற்றது.
மேஜிக் பையுடன் சுண்ணாம்பு மலை திருடன்!
15.9.2017 – வெள்ளி
வழக்கம்போல தயாஜியும் நானும்தான் விமான நிலையத்தில் எழுத்தாளர் கோணங்கிக்காகக் காத்திருந்தோம். முதல் சந்திப்புதான். ஆனால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஐந்து மணிக்குள் சாலை நெரிசலாகும் பகுதிகளைக் கடந்துவிட வேண்டுமென அவசர நல விசாரிப்புகளுடன் காரை அடைந்தோம். தயாஜி காரில் காந்திருந்தார். காரிலேயே ‘வல்லினம் 100’ புத்தகத்தைக் கொடுத்தேன். பொதுவாக ‘வல்லினம்’ குறித்தும் ‘கல் குதிரை’ குறித்தும் பேச்சு போனது. திடீரென கோணங்கி கார் ஓட்டுவது யார் எனக்கேட்டார். ‘தயாஜி’ எனக்கூறியவுடன் உற்சாகமாக இரண்டு குத்து விட்டார் தயாஜியின் கையில். ‘கல் குதிரை’ இதழில் தயாஜியின் ‘இன்னொரு கிளை முளைக்கிறது’ எனும் சிறுகதை முன்பு பிரசுரமாகியிருந்தது. புனைவுகள் வழி அறிமுகமானவரை பாதிதூர பயணத்துக்குப்பின் அடையாளம் காணும் உற்சாகம் அவர் குரலில். “நிறைவா இருக்கு. எழுத்தாளர்கள் என்னை விமான நிலையத்திலிருந்து இரட்டை பறவைகள் போல தூக்கிச் செல்வது சந்தோஷமா இருக்கிறது…” என்றார்.
எதிர்வினை: அபோதத்தின் அலறல்
வல்லினம் 100 களஞ்சியத்தில் சிங்கை பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் குறித்து நான் எழுதியிருந்த ‘இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி’ எனும் விமர்சனக்கட்டுரையை ஒட்டி நண்பர் சிவானந்தம் நீலகண்டன் சில மாற்றுக்கருத்துகளை முன்வைத்திருந்ததை வாசித்தேன். என் விமர்சனக் கட்டுரையில் பல இடங்களில் தவறான அணுகுமுறைகளும் மேலோட்டமான பார்வைகளும் உள்ளதால் அதை விமர்சனத்திற்குள்ளாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதைப் பாராட்ட வேண்டும். சிவானந்தன் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் எனது சில மாற்றுக் கருத்துகளை முன்வைக்க நினைத்தேன். Continue reading
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி!
மலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் ‘பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் அவரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான சிறுகதைகள் தவிர்க்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயந்தி சங்கர் தனது முகநூலில் தெரிவித்திருந்தார். அந்த விமர்சனத்திற்குப் பிறகு வாசகர்களுக்காக அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த அவரது 10 முக்கியமான சிறுகதைகளை வாசித்தேன். அதற்கு முன்பும் பொதுவான அவரது சில சிறுகதைகளை வாசித்து அடைந்த மனச்சோர்வே இம்முறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிறுகதை : நாகம்
பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான்.
கடிதம்: நாகம்
எனக்கு கதைகள் வாசிப்பது பிடிக்கும். ஆனால் அதிகமாக வாசிக்கும் நேர விஸ்தாரம் இல்லை. எப்போதாவது வாசிப்பதில் சில மனதில் இருக்கும். சில பல வருடங்கள் ஆகியும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போகும். தமிழில் மட்டுமல்ல மலாய் மற்றும் ஆங்கில நாவல்களை வாசிப்பேன். அப்படி வாசித்ததில் இன்றளவும் நான் பல முறை படித்து புரிந்து கொள்ள முடியாமல் போய் பல முறை வாசிப்புக்கு பிறகு புரிதலை உண்டாக்கிய கதைகளில் ஒன்றுதான் உங்கள் ‘நாகம்’. பார்க்க ஏதோ கோயில் குளம் நாகம் என பழைய இச்சாதாரி நாகம் பற்றியது போன்ற பீடிகை இருந்தாலும் கதை சரியா இல்லையே என்ற அத்திருப்தியோடுதான் கணிசமான மறுவாசிப்பை செய்தேன்.