வணக்கம் டாக்டர்,
நீங்கள் ம.நவீனுக்கு எழுதிய கடிதம் வல்லினம் 100ஐ தொட்டிருப்பதால் அதன் பதிப்பாசிரியர் எனும் அடிப்படையில் என் எதிர்வினையை முன்வைக்கிறேன்.
வணக்கம் டாக்டர்,
நீங்கள் ம.நவீனுக்கு எழுதிய கடிதம் வல்லினம் 100ஐ தொட்டிருப்பதால் அதன் பதிப்பாசிரியர் எனும் அடிப்படையில் என் எதிர்வினையை முன்வைக்கிறேன்.
நவீன் வணக்கம். இந்த மாத புது விசை இதழில் உங்களின் சிறுகதை ‘வண்டி’ படித்தேன். மிகவும் நுட்பமான தனித்துவம் கொண்ட கதை அது.உடனே ஆதவனிடம் பேசியபோது உங்கள் எழுத்துக்கள் பற்றி சொன்னார். உங்கள் கதை தன்னளவிலேயே எல்லாவிதமான கூறுகளையும் கொண்டு இயங்குகிறது.எழுதுகிறவனின் ஒரு சின்ன தொந்தரவோ, குழப்பமோ இல்லை.அதிகப்படியான எதுவுமில்லை.அத்தனை நேர்த்தி. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.மலேய அனுபவங்களை. இன்னும் பலவற்றை.
-அழகிய பெரியவன்.
என்னிடம் சிங்கப்பூர் பற்றிக் கட்டுரை கேட்டல் கூடக் கொடுத்திருப்பேன். ஆனால் மலேசியப்பெண் எழுத்தாளர்கள் (நாவலாசிரியர்கள்) பற்றிய கட்டுரையை அச்சிடுவதாகக் கூறிய தாங்கள் அவ்வாறு செய்யவில்லையே. அச்சிடுவதற்கு வாசகர்வட்டத்தைப்போலப் பணம் எதிர்பார்த்திருந்தால்கூடத் தந்திருப்பேன்.வாக்குத் தவறலாமா? தங்களின் குணம் மாறிப்போனதில் வருத்தம்தான்.
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி.
திருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான்.
26.5.2017 – வெள்ளி
முதலில் நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று. நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில் ‘வைட் காப்பி’ உணவகங்களில் கிடைக்கிறது. நாஞ்சில் நாடன் சுவைத்துச் சாப்பிட்டார். இதற்கு முன் அ.மார்க்ஸை அவ்வுணவு கவர்ந்திருந்தது.
மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வானபோதும் தங்களுக்கு மனமுவந்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். உங்கள் மூலம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என நம்பினேன்.
இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை
எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை
கண்கள்வழி புகுந்து
வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது
தோல்களை உரசிய காற்று
இரவைக் கிழித்து
காட்சிகளைப் படிமங்களாக்கியது
இப்போதுதான் எரியத்தொடங்கிய
பிணத்தின் சாம்பல்வாடை
இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது
நான் கங்கையைப் பருகியபோது
கறுமை தனது ஆடைகளைக் களைந்து
இந்த இரவை அத்தனை கருமை இல்லாததாக்கியது.
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம்
மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கக் கட்ட நகர்ச்சிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது. ஆனால், ரெ.கார்த்திகேசு முன்னின்று உருவாக்கிய இவ்விதழ்கள் குறித்து ரெ.கார்த்திகேசு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பலரும் எளிய வாக்கியங்களோடு கடந்துபோவதுதான் ஆச்சரியம். ‘மணிமன்றம்’ அல்லது ‘முத்தமிழ் படிப்பகம்’ போன்ற பிரமாண்டமான தொடர் முயற்சிகளில் மொழி சார்ந்த அக்கறைகளுக்கும் ‘கதை வகுப்பு’, ‘ரசனை வகுப்பு’ போன்ற சிறுகதை புனைவுக்கான அடிப்படை முன்னெடுப்புகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு என்றாலும் இவற்றிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு பரிச்சார்த்தமான முயற்சிகளுக்கு என்றே தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ சிறு குழுவில் உள்ளவர்களின் எளிய முயற்சிதான் எனினும் அதுவே நவீன இலக்கியத்தின் பாணி என யாரும் உணர்ந்ததாய் தெரியவில்லை.