மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு, உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும் குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம் பலரும் அறிந்திருக்கலாம். பள்ளிக்குச் சென்று நான் சுயமாக வாசிக்கத் தொடங்கிய அனேகமான தினங்களில் ஈசாப் என் உடன் இருந்தார். அழகிய படங்களுடன் அவரது கதைகள் வீட்டில் இருக்கும். அவர் ஓர் அடிமை என்பதோ அவர் கதைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோ எனக்கு அப்போது தெரியாது. அவரது கதைகள் மூலம் அப்போதே விலங்குகளின் மேல் இயல்பாக ஓர் ஈடுபாடு வந்தது எனக்கு.
வண்டி: கடிதங்கள்
‘வண்டி’ சிறுகதையை வாசித்தேன். அருமை! ஈப்போ வாசகி ராஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அத்தனை கருத்துக்கும் உணர்வுக்கும் நானும் உடன்படுகிறேன்! நிறைய இடங்களில்,’வார்த்தைக்குள் வாக்கியம்’ வைத்துள்ளீர்கள்! வாசகனின் ஊகத்துக்கும் சிந்தனைக்கும் – சொல்லாமலே உணர்ந்து கொள்வதற்கும் நிறையவே இடம் கொடுத்துள்ளீர்கள்.
‘சொல்லப்பட்ட வார்த்தைகளைவிட சொல்லாமல்விட்ட வார்த்தைகளுக்கே வலிமை அதிகம்’ என எங்கேயோ படித்ததாக ஞாபகம். சொல்லாமலேயே நிறைய சொல்லி இருந்த இடங்கள் ஏராளம். அந்த இடைவெளியும் வாசகனுடைய சுய சிந்தனைக்கும் முடிவுக்கும் இடங்கொடுக்கும் கதைகள்தானே சிறந்த கதைகளாக அமையும்.
வண்டி – கோ.புண்ணியவான் கடிதம்
நேற்று நவீன் பதிவிட்டவுடன் வண்டி கதையை வாசித்தேன். முதல் வாசிப்பில் கதை பிடிக்குள் வரவில்லை. முதலில் கிருஸ்த்துவ கதை மாந்தர்கள் வருகிறார்கள். அடுத்த மடிப்பில் இந்து கதைமாந்தர்கள் ஏன் வரவேண்டும் என்று குழப்பமாகவே இருந்தது. இந்தப் புரியாமைக்கு ரொம்ப நாட்களாய் இருக்கும் என் கவனச் சிதறல் குறைவு ஒரு காரணம். வயது கூடிப்போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது வாசிப்பில் கதை புரியத் தொடங்கியது. நல்ல வேளையாக எல்லா அடுக்கிலும் கதைப் பொருள் ஒன்றே என்பதால் கொஞ்சமாய்த் தெளிவு உண்டானது. பின்னல் வேலைப்பாடும்தான் குழப்பத்துக்குக் காரணம். மூன்றாவது அடுக்கில்தான் கொஞ்சமாய் வெளிச்சத் தீற்றல் விழுந்தது.
வண்டி: ஈப்போவிலிருந்து மூன்று கடிதங்கள்
வணக்கம் நவீன் நான் விமர்சனம் செய்பவள் அல்ல. ஆனால் ‘வண்டி ‘நிறைய விடயங்களை ஒவ்வொரு வாக்கியத்திற்குப் பின்னாலும் ஒளித்து வைத்திருப்பதாக உணருகிறேன். நீங்கள் திறன்மிக்க கதை சொல்லி என்பதை ஒவ்வொரு முறையும் உணருகிறேன். கதையின் ஆரம்பித்திலேயே மரியதாஸ் எனும் பெயர் இக்காலச் சூழலுக்கான கதை இல்லை என சொல்லாமல் சொல்லி செல்கிறது. இப்பொழுது இந்த பெயர்கள் இளம் பிள்ளைகளுக்கும் இளைஞர்களிடமும் இல்லை. அல்லது மிக மிக அரிது என்பதே அதன் காரணம்.
சிறுகதை: வண்டி
பாட்டிவீட்டுக்குப் போகவேண்டும். காலையிலேயே அப்பாவிடம் ஞாபகப்படுத்திவிட்டான் தோமஸ். மரியதாஸ் ஒன்றும் சொல்லாமல் விட்டத்தைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். தன் அம்மா வீட்டுக்குச் செல்வதென்றாலே அவருக்குப் பிடிக்காது. ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுவார். பாட்டி மட்டும் அவ்வப்போது தோமஸைப்பார்க்க வருவாள். வாசலிலேயே அமர்ந்திருப்பாள். தோமஸ் எவ்வளவு அழைத்தாலும் உள்ளே வராமல் “வெத்தல எச்சி துப்பனுமய்யா” என்பாள். மரியதாஸ் “வாங்க” என்பதோடு நிறுத்திக்கொள்வான். அம்மா பாட்டியிடம் பேசி அவன் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர் இறந்ததை நேற்று தமிழ்ச்செய்தியில் கேட்டது முதல், அவர்கள் வீட்டில் கிருஸ்மஸ் கொண்டாட்ட உற்சாகம் கலை இழந்து போயிருந்தது.
நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க
ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை. வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் என அம்மா சொல்வதுண்டு. அம்மாவுக்காக இல்லாமல் அந்தப்பாடல்களைப் பாடும்போது எனக்குத் திக்காததால் நான் அவற்றை விரும்பிப் பாடுவதுண்டு. நாக்கு உளராத என்னை நான் சாமி அறையில்தான் அந்த வயதில் பார்த்தேன். என் உலகம் வீட்டுக்குள்ளேயே மையமிட்டிருந்தது. எனவே முதன்முறையாக ஒன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்தபோது பெரும் கலாச்சார அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.
அரு.சு.ஜீவானந்தன் சிறுகதைகள்: முற்போக்கு அழகியலின் தொடக்கம்
ரசனை விமர்சனம் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டதல்ல. அது வாசிப்பை மையப்படுத்துவது. வாசிப்பின் மூலம் ஒரு பிரதிக்கும் வாசகனுக்குமான தொடர்பாடலே ஓர் இலக்கியத்தின் தன்மையை ஆராய்கிறது. ‘வாசிக்கும் அனைவரும் வாசகனா?’ எனக்கேட்டால் இல்லை என்பதே பதில். பல முக்கியமான இலக்கியப்பிரதிகளை வாசித்த நண்பர்கள் எனக்கு உண்டு. ஒரு சிறுகதையை வாசித்து முடித்தபின் அவர்களால் அதில் உள்ள தகவல்களை மட்டுமே சொல்ல முடிவதைப் பார்க்கிறேன். தொடக்கத்தில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர்களால் மொழிவழியாகக் கற்பனைசெய்ய முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவர்களால் சொற்களில் இருந்து ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கான பயிற்சியும் இல்லை. சொற்கள் வழியாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே செய்தனர். தெரிந்துகொண்டதைத் தகவல்களாகச் சேமித்து ஓரிரு வாக்கியங்களில் கூறினர். அதையே விமர்சனமாகவும் நம்பினர். கடைசிவரை அவர்களால் ஒரு சிறுகதையினுள் நுழைந்து அதன் நுட்பத்தை தரிசிக்கவே முடியாது.
கொஞ்சம் வெளிச்சமும் நிறைய மின்மினிகளும்
2.5.2017 – ஆன இன்று…
இறுதியாய்
இறுதியாய் பேசி முடிந்துவிட்டது.
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
கொடுக்கப்பட்ட நம்பிக்கைகள்
கொடுக்கப்பட்ட திட்டங்கள்
கொடுக்கப்பட்ட முத்தங்கள்
எல்லாமே எல்லாமே
இந்த நிமிடம்
இல்லையென ஆகிவிட்டது
ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 4
இந்தக் கட்டுரையை எழுதத்தொடங்கியது முதல் புளோக்கைப் படிப்போர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. பல்வேறுவிதமான கடிதங்களும் அழைப்புகளும் வருகின்றன. மகிழ்ச்சிதான். ஆனால், சில சங்கடமான கடிதங்களையும் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சோரம்போன தலைமைத்துவத்தையும் எழுத்தாளர்களையும் பார்த்துப் பார்த்து பழகிவிட்டவர்களுக்கு அனைத்துமே சந்தேகத்திற்குறியவைதான். வந்திருக்கும் கடிதங்கள், புலனப்பதிவுகள், அழைப்புகள் அடிப்படையில் சில விடயங்களைத் தெளிவு படுத்திவிடலாம் என நினைக்கிறேன்.