ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 3

4கவனம்: நான் இங்கே பேசுவது முன்னாள் எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரனின் செயல்பாடுகளில் உள்ள பலவீனங்கள் குறித்தும் அவர் ஏன் தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டியதில்லை என்பது குறித்துமே. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஒழுக்கம், குடும்பம் குறித்து எனக்குத் தகவல்களை அனுப்பும் சல்லிகள் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. நான் எழுத்துக்கூலி அல்ல. நான் செய்வது தேர்தல் பிரச்சாரமும் அல்ல. நேற்று என் முகநூலில் ராஜேந்திரனை ஒருமையில் அழைத்த varusai omar என்பவரையும் அவர் கருத்துகளையும் நீக்குகிறேன். அறிவார்த்தமான மாற்றுக்கருத்துகளையே வரவேற்கிறேன். ஆதரவுக்குரல் கொடுக்கும் உணர்சிகளைக்காட்டிலும் அவை மேலானவை.

Continue reading

ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 2

cheranநேற்றைய கட்டுரையை வாசித்து பல நண்பர்கள் தொடர்புகொண்டனர். பெரும்பாலும் அறிவுரைகள். சில ஆதரவு கருத்துகள். சில அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள். எடுத்த எடுப்பில் “சார் உங்கள் இலக்கிய பாதையும் அவர்கள் இலக்கியப் பாதையும் வேறு வேறு. ஆனால் இருவருமே தமிழுக்கு முக்கியம்தான்…” என தங்கள் ஞானம் பொருந்திய முகரையை என்  தரிசனத்துக்கு வைத்தனர். நான் அவர்களிடம் கேட்டதெல்லாம் ‘முதலில் கட்டுரையை ஒழுங்காக வாசித்தீர்களா?’ என்பதுதான். எதையும் நிதானமாக வாசிக்காத புரிந்துகொள்ளாதவர்களில் இளம் எழுத்தாளர்களே அதிகம் என நான் நினைத்திருந்தேன். ஆனால் மை.தி.சுல்தான் அவர்கள் என் கட்டுரையை வித்யாசாகர் எழுதியது என எதிர்வினை ஆற்றியதில் இருந்தே இந்தக் கொடிய நோய் மூத்தப்படைப்பாளிகள் மத்தியிலும் உண்டு எனப்புரிந்தது.

Continue reading

ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 1

rajenthiranஅடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை (23.4.2017) மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேர்தல். நானும் அச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்தான். ராஜேந்திரன் தலைமையில் சடங்குகள் செய்ய மட்டுமே தகுதி உள்ளதாக மாறிவிட்ட அவ்வியக்கத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்து ஆண்டுகள் சில ஆகின்றன. இந்நிலையில் விரிவுரையாளர் மன்னார் மன்னன் அவர்களை ஒரு கண்துடைப்புக்காக ஒருதவணை தலைவராக நியமித்தக் கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே. பதவியைத் தக்க வைக்க ஆவல் இல்லாத; தன்னை மீறி புதியத்திட்டங்களை உருவாக்க முயலாத ஒருவரை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் பெ.ராஜேந்திரன். ஒருவர் இரு தவணைக்கு மேல் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்திய திருவிளையாடல் அது என அறிவுள்ளவர்கள் அறிவர்.

Continue reading

சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 3

08

                இந்தியா கேட்

டில்லிக்கு வந்தபின் ஏழு நாட்களுக்கு முன் தங்கிய ஹாட்டலிலேயே மீண்டும் தங்கினேன். அங்கு வேலை செய்யும் சிலர் ஓரளவு நண்பர்களானார்கள். அல்லது டிப்ஸ் கொடுத்து நான் நெருக்கமாகியிருந்தேன். தென்னிந்தியா போல இல்லை. ஹாட்டல்களில் டிப்ஸ் கொடுக்கும்வரை அறையைவிட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். ஹாட்டல் மூலம் டில்லியைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்போகும் என் திட்டத்தைக் கூறினேன். அவர்கள் அது சரியான திட்டமில்லை என்றார்கள். செலவைக் குறைக்க ஒரு உபாயம் கூறினர். அதன்படி அதில் ஒருவரின் நண்பர்  காரை வரவழைத்தார்கள். ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவு. மேலும் முக்கியமான இடங்களையும் காட்டிவிடுவார் எனக்கூறினார்.

Continue reading

சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 2

41படித்துறையின் மேலே ஒரு மரநிழலில் இருந்து கீழே நடப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கும் பெரிய அர்த்தம் இல்லாததுபோல தோன்றியது. மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு விதமான நடை. எனக்கும் நடக்க வேண்டும் போல தோன்றியது.  வழிகாட்டிச்சொன்ன தசவசுவமேத படித்துறைக்குச் செல்லலாம் என எழுந்தபோது மனம் அவ்வளவு நிதானமாக இருந்தது. உடல் காற்றுபோலாகிவிட்டதை உணர்ந்தேன். நான் அடிப்படையில் கொஞ்சம் வேகமாக நடக்கக் கூடியவன். ஆனால் அன்று என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு லாலான் புல்லின் பூவைப்போல கொஞ்சம் கொஞ்சமாக மிதக்கத்தொடங்கினேன். சிந்தனையில் எவ்வித குழப்பமும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தேன். தசவசுவமேதம் சென்றப்பின்னர் மீதம் இருந்த அரை உருண்டையையும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தேன். எனக்குள் என்ன நடக்கிறது என கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

Continue reading

சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 1

28காசியை நோக்கி பயணமாகும் முன் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன், தனியாகச் செல்வதாக. உள்ளூர ஒரு சிறு தயக்கம். ‘தனியாகவா?’ என நண்பர்கள் யாராவது கேட்டுவைத்தால் ‘அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை’ என அவர்களிடம் சொல்லும்போதே எனக்குள் நானே சொல்லி சமாதானப்படுத்திக்கொண்டேன். என் வாழ்வில் நெருக்கடியான காலக்கட்டம் இது.  நீண்ட பயணம் முக்கியமாகப் பட்டது. உண்மையில் எனக்கு எப்போது பசிக்கும்? எப்போது உறக்கம் வரும்? எனது துணிச்சலின் எல்லை எது? இப்படி என்னை நான் கொஞ்சம் சோதித்துக்கொள்ளலாம் என்றும் நினைத்திருந்தேன். முக்கியமாக நான் செல்லும் இடம் சுற்றுலாதளமாக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். காசி அதற்கு ஏற்ற இடமாகத் தோன்றியது.  அடிப்படையான சில முன்னேற்பாடுகளை மட்டும் செய்து வைத்தேன். காசி குறித்த அடிப்படை சித்திரங்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் சில கட்டுரைகள் மூலம் எனக்குக் கிடைத்துள்ளன. முக்கியமாக அக்னி நதி கட்டுரையின் முன்பகுதி. எனவே போவதற்கு முன் அவரை அழைத்தேன். காசி குறித்த சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘திரும்பியதும் அழைக்கிறேன்’ என்றேன். ‘திரும்பினால் அழையுங்கள்’ எனக்கூறி சிரித்தார்.

Continue reading

சிறுகதை : ஜமால்

Untitled-15“இந்த விரலை இனி நோண்ட பயன்படுத்தலாம்…” நடுவிரலை நீட்டியும் மடக்கியும் ஜமால் செய்த ஆபாசமான கையசைவையும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாத என் முகபாவனையையும் மேற்பார்வையாளர் அமீர் கவனிக்கிறார் என எங்கள் இருவருக்குமே தெரியும். பதிலுக்கு நான் ஏதும் சொல்வேன் என ஜமால் காத்திருக்கலாம்.

Continue reading

பெ.ராஜேந்திரன் : சொல்ல மறந்த கதை…

13015308_1157397710972286_8632267970700475905_nDear Navin, Why are you always condemning Rajendran in your articles? He has done a lot of good thinks. He had helped many people. He has risen from the bottom to this level. He may have flaws but one should not always been criticized. We should always look at the both sides. Look in a broader view. He had helped you in many ways, personally too. You never talked about that. Hope you have not forgotten all the help he rendered to you. If you’re not thankful to people who have helped you then there is no point in being a writer. Don’t be an opportunist.
– Anbalagan.M

Continue reading

கடிதம்: நான் மணி மன்றத்தின் எதிரியல்ல!


bell-3-261x300நவீன். உன் அகப்பத்தில் நீயும் வல்லினம் குழுமத்தாரும் அடுக்கடுக்காய் சொன்ன பொய்களைப் பார்த்தேன். எழுத்துக்கூலியான உன் போன்றவர்கள் செய்யும் வேலை இது என நாங்கள் அறிவோம். காய்த்த மரம் கல்லடிப்படும். நாங்கள் காய்த்த மரம். மற்றவர்களைக் குறை சொல்லும் முன், நீ சமுதாயத்துக்கு என்ன செய்தாய்? ஆசிரியர் பணியில் இருக்கும் நீ, போதிப்பதால் மட்டும் சேவை செய்வதாகுமா? கவிதை எழுதுவது மட்டும் சமூக சேவையா? ஏன் உன்னால் மற்ற இயக்கங்கள் குறித்து பேச முடியவில்லை? பயமா? அவர்கள் நண்பர்கள் என்பதாலா?  பொங்கல் கொண்டாடுவதில் உனக்கு என்ன தடை உள்ளது? பின் நவீனத்துவவாதிகள் நீயும் உன் வல்லினம் நண்பர்களும் என அறிவோம். உங்கள் கொள்கைகளை மலேசியத் தமிழர்கள் அனைவரும் பின் பற்ற வேண்டும் என நினைப்பது பேராசை. அவதூறும் பொய்யும் சொல்வதை நிறுத்து. மானியம் வாங்காமல் எப்படி அமைப்பை நடத்துவது? நீங்களெல்லாம் மானியம் வாங்குவதே இல்லையோ? மணிமன்றம் எதையுமே செய்யவில்லை என உன்னால் நிரூபிக்க இயலுமா? ஏன் மலாய்க்காரர்களின் இயக்கத்தில் உள்ளவர்கள் அரசியலில் இல்லையா? தமிழர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? ஏன் இந்த நண்டு வேலை?

                                                                                                                                                                                                                                                                                      விசுவாசி

Continue reading

gong xi fa cai Agnes Wong

mவருடத்துவக்கத்தில் ‘பூலாவ் பெசார்’ செல்வதென்பது உற்சாகமானது. ஏற்கனவே அத்தீவு குறித்து விரிவாக எழுதியுள்ளேன். இப்பயணத்தில் என்னுடன் தயாஜி, மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் வந்தனர். இம்முறை ‘பூலாவ் பெசார்’ செல்ல எனக்கு அடிப்படையான வேறொரு காரணம் இருந்தது. கடந்த ஆண்டும் நாங்கள் நான்கு பேர்தான் சென்றிருந்தோம்.  ஒருமுதியவர் எங்களிடம் பேச்சுக்கொடுத்தார். கருமை நிறம். மலாய்க்காரர். மெலிந்த ஆனால் திடமான தேகம். திடீரென என் கையில் நான்கு எண்களைத் திணித்து அந்த எண்களை லாட்டரியில் எடுக்கச் சொன்னார். “ஏறினால் எனக்கும் கொஞ்சம் கொடு” என்றார். நான் அதுநாள்வரையில் நான்கு நம்பர்களை எடுத்ததில்லை. அதுபோன்ற கடைகள் பக்கம் கூட போவதில்லை. உறவினர்கள்  நண்பர்கள் பலர் எண்களுக்கு அடிமையாக இருப்பதைப் பார்த்ததுண்டு. எனக்கு அவ்வாறு எதாவது ஒன்றிடம் அடிமையாக இருப்பதில் உடன்பாடில்லை. அதிஷ்டம் போன்ற விடயங்களையும் நம்புவதில்லை.

Continue reading