அண்மையில் ஒரு புலனச் செய்தி வாசித்தேன். மொரீசியஸுக்கு மலேசியாவின் உள்ள ஓர் இலக்கிய அமைப்பு பயண ஏற்பாடு செய்கிறது. அங்கு சென்று ‘எழுத்தாளர் பயணிகள்’ சில குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டு சில மணி நேரம் பழக விடுவார்கள். பின்னர் நாடு திரும்பிய பின் ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் அவர்களிடம் புலனத்தில் தமிழில் உரையாட வேண்டும். இதன் மூலம் அங்குள்ள இளம் தலைமுறையினரின் தமிழை வளர்க்கலாம். இதை வாசிக்கும்போதே இதுபோன்ற அபரிமிதமான அறிவுஜீவிதத் திட்டத்தை மலேசியாவில் வாழும் ஒருவர் மட்டுமே உருவாக்க முடியும் என பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதாலும் புலனத் தகவல் சம்பந்தப்பட்டவரிடமிருந்து எனக்கு நேரடியாக வராததாலும் ஆறாவது மாதம் வரை காத்திருந்து யார் அந்த ‘ஆளுமை’ என்றும் 6000 ரிங்கிட் செலுத்தி இந்த உன்னதத் திட்டத்தில் பங்கெடுக்கும் சிந்தனையாளர்கள் யார் என்றும் தெரிந்துகொள்ளலாம்.
சிறுகதை : மசாஜ்
மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன.
எல்லா பந்தும் அடிப்பதற்கல்ல: M.S.Dhoni: Untold story
மலேசியாவில் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றல்ல. ஆனால், சச்சின், தோனி போன்ற பெயர்கள் பலரும் அறிந்ததுதான். இன்று தொலைக்காட்சியில் M.S.Dhoni திரைப்படம் பார்த்தேன்.
வெற்றியடைந்தவர்களின் வாழ்வை வாசிப்பதிலும் திரைப்படமாகப் பார்ப்பதிலும் எனக்கு நிறையவே விருப்பம் உண்டு. அதில் வெளியில் தெரியாத அவ்வளவு தோல்விகளும் அவ்வளவு ரணங்களும் இருப்பதுதான் முக்கியக்காரணம். அவர்களின் தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் நமது நிகழ்கால ரணங்களை சாதாரணமாக்கிவிடும் வல்லமை உண்டு.
சம்ஸ்காரா : அகங்காரத்தின் மௌனம்
ஒரு நாவலை வாசித்தல் என்பது ஒரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பது. ஒரு வாழ்வு ஓரர்த்தைதான் கொடுக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. சிறந்த நாவல்கள் ஒரு கதையைத் தன்னியல்பில் சொல்லிச் செல்கின்றன. ஆனால் ஒரு வாசகன் அந்த எழுத்தாளன் சொல்லாத அர்த்தங்களையும் அவன் சொற்களில் விடும் இடைவெளி மூலம் புரிந்துகொள்ள முடியும். ஒரு புகைப்பட கலைஞன் பிடித்தக் குழுப்படத்தில், மூலையில் நிற்கும் தன்னந்தனியான சிறுமியின் கண்களில் தெரியும் மெல்லிய சோகத்தை அறிந்து கொள்வதில் இருக்கிறது நுட்பமான வாசகனின் சவால்.
இமையம் எழுதிய ‘ஆறுமுகம்’ நாவலில் திருமணமாகியும் தன்னிடம் கூடாமல் பதுங்கி பதுங்கி ஓடும் தனபாக்கியத்தை பிடித்த ராமன் அவள் காதுகளையும் மூக்கையும் கடிக்கிறான்; அவளிடம் உறவு கொள்கிறான். அவன் பின்னர் ஒருசமயம் இறந்தும் போகிறான். அவர்களுக்குப் பிறந்த பையன் ஆறுமுகம். சிறுவனாக இருக்கும்போது தனபாக்கியத்தின் காதுகளையும் மூக்கையும் கடிக்கிறான். “அந்தச் சதிகாரன் செஞ்சதயே இந்தச் சதிகாரன் செய்றான் பாரு” என தனபாக்கியம் சொல்வதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை. அது ஒரு எதார்த்தமான சித்தரிப்பு மட்டுமே. ஆனால் எதார்த்தங்களை உற்றுநோக்கும்போதுதான் மனித மனதின் பல்லாயிரம் ஆண்டுகளாக உரைந்துபோய்கிடக்கும் படிமங்களை தேடிக்கண்டடைய முடிகிறது.
காற்றுசெல்லும் பாதை – ஜெயமோகன்
சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நவீனைச் சந்தித்தேன். 2006ல் நானும் அருண்மொழியும் சிங்கப்பூருக்குச் சென்றோம். சிங்கப்புர் எழுத்தாளர் சங்கம் சார்பில் என் நண்பர் சித்ரா ரமேஷ் அழைத்திருந்தார். அங்கிருக்கையில் மலேசியா வருகிறீர்களா என ஓர் அழைப்பு வந்தது. மலேசிய நவீன இலக்கியத்தின் மையமாகிய டாக்டர் சண்முக சிவா அழைத்திருந்தார் ஆனால் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக மலேசியா செல்ல விசா கிடைக்காது என்னும் நிலை.
மறைந்த நண்பர் ஈழநாதன் விசா ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சிலநாட்களிலேயே விசா வந்தது. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கினோம். கொலாலம்பூர் பேருந்துநிலையத்திற்கு நண்பர் அகிலனுடன் ஒரு காரில் நவீன் வந்து வரவேற்றார். கரிய உருவம் சிறுவனைப்போன்ற அழகிய முகம். முகத்தில் சரியும் மயிக்கற்றை. செல்லப்பிள்ளைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட பேச்சு.
இரு கவிதைகள்
மரணத்தை
இறுதியென நம்பி அழுதுக்கொண்டிருந்தவர்களை
துக்கம் கசிந்த அமாவாசையில்
சந்தித்தேன்
பதுக்கி எடுத்துச்சென்ற
ஒளிவீசும்
கால டைரிக்குள்
கையை நுழைத்து
ஒவ்வொன்றாக வெளியே எடுத்தேன்
சென்னை புத்தகக் கண்காட்சி 40 : ஓர் அனுபவம்
இது நான்காவது தமிழகப்பயணம். ஒவ்வொருமுறையும் அதிகப் புகார்களுடன் பயணமாகும் தேசம். ஆனாலும் அங்கு மீண்டும் செல்லும் வேட்கை குறைந்தபாடில்லை. எல்லா புகார்களையும் மீறி தமிழ்ச்சூழலில் அங்கு நடக்கும் அறிவியக்கம் அவ்வளவு எளிதாக மறுக்க இயலாதது.
இம்முறை இப்பயணத்தை வல்லினம் மூலம் ஏற்பாடு செய்தோம். ஏற்பாடு செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். கலை இலக்கிய விழாவின் போது கடுமையாகப் பணிபுரியும் வல்லினம் இலக்கியக் குழுவினருக்கு (என்னையும் சேர்த்துதான்) நன்றி சொல்லும் வகையில் விமான டிக்கெட் செலவில் 400 ரிங்கிட்டும் நூல் வாங்கும் செலவில் 100 ரிங்கிட்டும் என வல்லினம் சேமிப்பில் இருந்து வழங்கப்பட்டது.
‘உலகின் நாக்கு’ நூலின் முன்னுரை
16 வயதில் சுஜாதாவிலிருந்துதான் நான் தமிழக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். அதுவரை மலேசிய இலக்கியங்களை வாசித்ததோடு சரி. எம்.ஏ.இளஞ்செல்வன்தான் முதன் முதலாக என் வாசிப்பின் போதாமையைச் சுட்டிக்காட்டினார். வாசிப்பு எத்தனை சுவையானது என புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ சிறுகதையைச் சொல்லி புரிய வைத்தார். அப்போது லுனாஸில் செயல்பட்ட புத்தகக் கடையையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது வித்தியாசமான புத்தகக் கடை.
மெனிஞ்சியோமா : வலியைத் தின்று வாழ்தல்
இதுவரை எந்த மரணத்துக்காகவும் அழுததாக நினைவில்லை. மரணம் ஒரு முற்றுப்புள்ளி. அதனிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை. ‘காலனும் கிழவியும்’ சிறுகதையில் அழைத்துப்போக வந்த எமனிடம் கிழவியைச் சண்டைப்பிடிக்க வைத்த புதுமைப்பித்தன்தான் ‘செல்லம்மாள்’ சிறுகதையில் செல்லம்மாளின் மரணத்தைக் பிரமநாயகம் ஒரு சாட்சியாக காண்பதைக் காட்டியுள்ளார். புதுமைப்பித்தன் அப்படித்தான். அவர் வாழ்வின் எல்லா சாத்தியங்களையும் புனைவில் உருவாக்கிப்பார்ப்பவர். ஆனால் வாழ்வு மனிதனுக்கு அத்தகைய சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. பிரமநாயகம்போல மரணத்திடம் அதிகபட்சம் சாட்சியாக இருக்கும் உறவே சாத்தியம். மரணம், மரணித்தவரின் அன்புக்குறியவரையே அதிகம் வதைக்கக் கூடியது. ஆனால் விபத்தில் துடிக்கும் ஒரு இளைஞன் , தனது உறுப்பில் ஒன்றை இழந்து கதறும் ஒருவரின் அவலம், நோய்மையின் சுமை படுத்தும் பாட்டின் பதற்றம் என ஒருவரின் வலியே என்னை அவஸ்தையுற வைக்கும்.
வாரிஸ் டைரி : பாலைவனத்தில் உதிர்ந்த பூ
பிறப்புக்குரிய உறுப்பு வெட்டி எடுக்கப்படுவதை உணர்ந்தேன். மொன்னையான பிளேடு முன்னும் பின்னும் என் தசையினூடே சென்றுவரும் சத்தம் கேட்டப்படியிருந்தது. யாரோ உங்கள் தொடையிலிருந்து தசையைத் துண்டாக அறுத்தெடுப்பதுபோல அல்லது உங்கள் கையை வெட்டியெடுப்பது போலானது அவ்வலி. தவிர, இது உங்கள் உடம்பில் மிக முக்கியமான உணர்ச்சிப் பூர்வமான பகுதி. – waris dirie