புதிய ஆண்டு என்பது உற்சாகம் கொடுப்பது. என்னை நெருக்கமாக அறியும் நண்பர்களுக்குத் தெரியும் ஒரு புதிய தொடக்கத்தை நான் எவ்வளவு விரும்புபவன் என. பாம்பு தன் சட்டையைக் கலற்றுவதுபோல அது அந்தரங்கமான ஒரு தோலுரிப்பு. அவ்வாறு புத்தம் புதிதாய் தொடங்க, கடந்த ஆண்டு வாழ்வை நினைத்துப்பார்ப்பதும் உற்சாகம் தரக்கூடியதுதான். எதையெல்லாம் செய்து அந்த ஆண்டை முழுமை செய்திருக்கிறோம் என்பதற்கான பார்வை அது. இந்த ‘எதையெல்லாம்’ என்பதில் பலவும் இருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமாகச் சில மட்டுமே இருக்கும். நாம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கண்டடையும் மிகச் சில மட்டுமே அவை.
மாடறுக்கும் சிவம்
ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்
வாசிக்கும் முன்பு: இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த வசைகள் உதவலாம்.
வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!
கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி முன்மாதிரி என அடிக்கடி சொல்வதுண்டு. தந்தையின் மடியில் படுக்கலாம், கோபித்துக்கொள்ளலாம். திட்டலாம். ஆனால், முன்மாதிரி ஆளுமையைத் தள்ளி நின்று கவனித்தபடியே இருக்கவேண்டும். அவர்கள் செயல்களை கவனிப்பதன் மூலமே கற்றல் நடக்கும்.
கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை
நேற்றுப்போல் இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை வரலாம் என, ‘கறார்’ முகத்துடன் இருந்தேன். பின்னர் பெயரைக் ‘கலை இலக்கிய விழா’ என மாற்றி அமைத்தேன். ஆனால், கொண்டாட்டமும் குதூகலமும் இல்லாமல் இலக்கியமும் கலையும் உருவாகும் மனநிலை வாய்க்காது என அடுத்த வந்த சில வருடங்களிலேயே அறிந்துகொண்டேன்.
கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!
அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் கூறியது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை எப்படி அவ்வாறு கூற இயலும் என நமது அக்னிக் குஞ்சுகள் கொதித்து எழுந்தன.
சாகாத நாக்குகள் 10: சாதலும் புதுவது அன்றே!
இலக்கியத்தின் பயன்பாடு என்ன? கேள்வி மிகப்பழமையானதுதான். முகநூல், புலனம் போன்றவற்றில் மிக எளிதாகத் தகவல்களைப் பெற முடியும் என்றும் அதன் மூலம் எத்தனை பெரிய விடயங்களையும் ஓரிருவரிகளில் சுருக்கமாக வாசிக்கவும் பதிவிடவும் முடியும் என நம்பும் படித்த இன்றைய இளைஞர்கள் இக்கேள்வியைக் கேட்பதற்கும் பாமரர்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. என்னிடம் அதற்கு ஒரு பதில்தான் உள்ளது. நாம் யாராக இருந்து ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கிறோமோ அதன் பொருட்டே நம்மை இலக்கியம் வந்தடைகிறது.
சாகாத நாக்குகள் 9: உள்ளிருந்து உடற்றும் பசி!
நிறைவேற்ற வேண்டுமாயின்
காளியைத்தான் புணரவேண்டும்
அவளுக்குத்தான்
ஆயிரம் கைகள்… – வசுமித்ர
2013இல் மலேசிய இலக்கியச் சூழலில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற தயாஜி எழுதிய சிறுகதை குறித்து மலேசிய நாளிதழ்கள் அனைத்தும் கண்டனங்களைத் தெரிவித்தன. மனநோயினால் பீடிக்கப்பட்ட ஒருவன் தனது தாய் உள்ளிட்ட பல பெண்கள்மீது காமம் கொள்வதாக எழுதப்பட்ட அக்கதை கலாச்சார சீரழிவை உண்டாக்கும் என மலேசியாவில் பல இயக்கத்தினரும் அறிக்கை விட்டனர். குறிப்பாக அக்கதையில் வரும் மையப்பாத்திரம் காளியின்மீது காமம் கொள்வதாகச் சித்தரித்தது சமய இயக்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டு செய்து தயாஜி தன் வானொலி அறிவிப்பாளர் வேலையை இழந்தார். எழுத்தினால் வேலையை இழந்த ஒரே மலேசியத் தமிழ் எழுத்தாளர் தயாஜியாகத்தான் இருக்க முடியும்.
வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்
எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு என்று கூறுவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. தொகுப்பில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. கொள்கைகளை, கோட்பாடுகளை, தத்துவங்களை, முழக்கங்களை முன்னிருத்தி எழுதப்பட்ட கதை என்று ஒன்றையும் சொல்ல முடியாது. எளிய மனிதர்களுடைய வாழ்வில் அன்றாடம் நிகழும் சில கணங்களை இக்கதைகள் காட்சிப்படுத்தியுள்ளன. மனிதர்களுடைய வலியை, காயத்தை, கண்ணீரை, இயலாமையை, மேன்மைகளை, கீழ்மைத்தனங்களை, முழக்கமாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக எழுதப்பட்ட கதைகள்.
சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை
ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்.
ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும் அவ்வப்போது மாற்றியமைப்பார். பெரும்பாலும் அவர் சொல்லும் கதைகளில் நன்னெறிப்பண்புகள் இருக்காது. எல்லா பாத்திரங்களும் அதனதன் போக்கில் வரும் – போகும்.