ஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது பிணத்தைச் சுமந்து நடப்பதுபோல ஒரு கனமான அனுபவம். ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்ற டயான் ப்ரோகோவன் நாவல் அவ்வாறான ஒரு சுமையை வாசகனிடம் கடத்துகிறது.
‘அப்பா’ : சப்பென்று போன சமையல்!
மலேசிய இலக்கியச் சூழலில் மு.வரதராசன் நாவல்கள் குறித்து விமர்சனம் வைக்கும்போது அதற்கு எதிர்வினையாக நம்முன் வீசப்படுவது அதில் உள்ளடங்கியுள்ள அறநெறி கருத்துகள்தான். கதைமாந்தர்கள் சில கொள்கைகளின் பிரதிநிதிகளாக உருவெடுத்து, வாசகர்கள் முன் வைக்கும் வாதங்கள்தான் அவற்றில் உரையாடல்களாக இருக்கும். மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைக்கருத்துகளும் அதில் உள்ளடங்கியுள்ளதாக வாதிடப்படும். எனவே அது மாபெரும் இலக்கியமாகப் போற்றப்படும்.
சித்தர், தமிழாசிரியர், மற்றும் வணிகம்!
நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஓர் உணவகத்தில் சந்தித்ததில் அறிமுகமாகியிருந்த மருத்துவர் திடீரென அழைத்தார். எனது எண்களை நாளிதழில் பார்த்ததாகக் கூறி சந்திக்க இயலுமா எனக் கேட்டார். மறுநாள் ‘யாழ்’ சந்திப்பை அவர் சொன்ன உணவகத்திற்கு அருகில் ஏற்பாடு செய்தேன். இரு சந்திப்பையும் ஒரே இடத்தில் வைத்துவிட திட்டம். ‘யாழ்’ சந்திப்பு முடியும் சமயம் அவர் வந்தார். நான்கு வருடங்களுக்கு முன் பார்த்தது. எளிதாக அடையாளம் காண முடிந்தது. தீர்க்கமான கண்கள். வளித்துச்சீவிய முடி. தடிமனான வெள்ளை மீசை. அப்போதைக்கு இப்போது அதிகம் வயதாகி விட்டவர் போல காட்சியளித்தார். வயது புலி போன்றது. முதலில் மிக மெதுவாகப் பதுங்கி வரும். பாய்ந்தவுடன் அதன் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து ஆக்கிரமிக்கும். என்னையும் அவர் அடையாளம் கண்டுக்கொண்டதால் வழக்கமான நல விசாரிப்புக்குப் பின்னர் விசயத்துக்கு வந்தார்.
இலக்கிய வட்டம் : ஒரு பார்வை
பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து, தட்டச்சு செய்யப்பட்டதை நகல் எடுத்து அடுத்த கூட்டத்தில் வழங்கி விவாதித்துள்ளனர்.
கவிதை என்பது…
கச்சடா பேச்சு
கெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை. தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்று எப்படியும் அவர்கள் காதுகளுக்குள் புகுந்துவிடும் வல்லமையைக் கொண்டிருந்தன.
சாகாத நாக்குகள் 8 : உலகம் என்பது எளிமை!
கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்”.
சாகாத நாக்குகள் 7: தொன்மங்களைத் தொடுதல்
ஒருவரிகூட படிக்காத ஒருவரால் ராமாயணத்திலிருந்தும் மகா பாரதத்தில் இருந்தும் அல்லது சிலப்பதிகாரத்திலிருந்தும், மணிமேகலையிலிருந்தும்கூட ஏதாவதொரு காட்சியைச் சொல்லிவிட முடியும். செவிவழியாய் கேட்டுத் தொடர்ந்த எளிய கதைகூறல் முறையாலும் செய்திகளை மட்டுமே வாசகனுக்குக் கொடுக்கும் மேடைப்பேச்சாலும் பெரும்பாலும் அது சாத்தியமானது. தேர்ந்த வாசகன் இந்த கதை சொல்லும் நேரடித்தன்மையை விரும்புவதில்லை. அவனுக்குத் தேவை தகவல்களும் அல்ல. தொன்மங்களை வாசிக்கத்தொடங்கும் வாசகன் ஒருவன் அதில் காணப்படும் நுண்குறிப்புகளைத் தன் கற்பனையால் விரித்தெடுக்கவே முதலில் ஆயர்த்தமாவான். புனைவு எழுத்தாளன் அதன்மூலம் அவன் உருவாக்கிக்கொள்ளும் அக உலகில் வரலாற்றில் சொல்லாமல் விடுபட்ட இடைவெளிகளை நிரப்பத்தொடங்குவான்.
Parnab Mukherjee : மௌனம் கொடுக்கும் வதை!
ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. பர்னாப் முகர்ஜி என்பவர் அனுப்பியிருந்தார். கல்கத்தாவைச் சேர்ந்த கலைஞர். நான் அவரை அறிந்திருக்கவில்லை. சிங்கை இளங்கோவன் மூலம் வல்லினத்தையும் என்னையும் அறிந்து, சந்திக்க முடியுமா எனக் கேட்டிருந்தார். கடந்த இருவாரமாக மேற்கல்வி பணிகள் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழலில் எப்படி நேரம் ஒதுக்கி எங்கே சந்திப்பது என்ற குழப்பம் சூழ்ந்தது. இப்படியான சந்திப்புகள் நேரத்தைச் சட்டென அபகரித்துவிடும். அல்லது கலை சார்ந்த மனிதர்களின் சந்திப்பில் நான் அவ்வாறு பிற அத்தனையையும் மறந்துவிட்டு எனது நேரத்தைக் கொடுத்துவிடுவேன்.
சாகாத நாக்குகள் 6 :மௌனமாகப் பேசும் புரட்சி எழுத்துகள்
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது “எனக்கு அரசியலற்ற படைப்புகள் மேல் பெரிய நாட்டம் இல்லை” என்றேன். அதற்கு மறுப்பு சொன்ன நண்பரும் தான் கலை வெளிப்பாட்டில் பிரச்சாரங்களை விரும்புவதில்லை என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அரசியலுக்கும் பிரச்சாரத் தொனிக்கும் என்ன சம்பந்தம் எனக் குழம்பினேன். அரசியல் படைப்புகள் அவ்வாறுதான் இருக்கும் என்பது அவருடைய திட்டவட்டமான முடிவாக இருந்தது. அவர் குறிப்பிடுவது இலக்கியத்தில் உள்ள புரட்சியின் கோஷங்களை எனப்புரிந்துகொண்டேன்.