குடிபெயர்தலைக் குறிக்க மைக்ரேஷன் (migration), டிஸ்ப்ளேஸ்மெண்ட் (displacement) என்னும் இரு சொற்களும் கையாளப்படுகின்றன. மைக்ரேஷன் (migration) என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குக் குடி பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் (displacement) என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்தலாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை.
‘’பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்’ என்ற வரி சிலப்பதிகாரத்தில் பிரபலம். நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயராமல் இருப்பதே சிறப்பாக எண்ணப்பட்ட காலத்தில் நாடுவிட்டு நாடு செல்பவர்களை அக்காலத் தமிழர் மதிக்கவில்லை.