கேள்வி : ‘இலக்கிய ரௌடி’ என மாற்றுச் சிந்தனையுடையவர்களை அடையாளமிட்டு விளிப்பதாக நீங்கள் ஒருமுறை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியொரு அடையாளம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? அம்மாதிரியான ஓர் அடையாளத்தைக் கொடுத்தவர்களின் பிரச்சினை என்ன?
பதில் : நான் ‘லும்பன் பக்கங்கள்’ எனும் தலைப்பில் தொடர் எழுதியதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியச் சொல்லான Lumpenproletariat என்பதை முதலில் அறிமுகப்படுத்துகிறார். ஒழுங்குபடுத்தப்பட்ட உழைப்புடன் தொடர்பற்ற, வர்க்க உணர்வை நோக்கி நகராத உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளை ஆரம்பத்தில் அவர் அவ்வாறு அழைத்தார். ரௌடிகளும் அதில் அடக்கம்தான். சமூக நன்னெறிகளை இறுக்கப் பிடிப்பவர்கள் அந்த அடையாளத்தால் வருந்தலாம். எனக்கு என்ன கவலை. பின்நவீனத்துவம் இந்த உதிரி மனிதர்களின் வாழ்வையும் பேசுகிறது. ஆனால், ‘ரௌடி’ எனும் அடையாளத்தை வசைச்சொல்லாகப் பயன்படுத்துபவர்கள் மேல்தான் எனக்குக் கோபமே. ‘மீடியகர்’ எழுத்தாளர்களுக்கு மத்தியில் தனது கருத்தை சமரசமின்றி நிருபுபவன் ‘ரௌடி’ என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பல ஆண்டுகளாக கொட்டைப்போட்ட எழுத்தாளர்களாக இருந்தவர்களின் இலக்கியத் தரத்தையும் அரசியல் நிலைபாட்டையும் கேள்விக்குட்படுத்தும்போது பிரச்னையாகிறது. அவர்களிடம் அதற்கான பதில் இல்லை. கருத்துநிலையில் எதிர்வினையாற்ற வக்கற்றவர்கள் வசைப்பதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்…பாவம்.

ம. நவீன் ! மலேசிய மண்ணிலிருந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. ‘வல்லினம்’ எனும் சிறுசஞ்சிகையின் ஆசிரியர். இன்று அவ்விதழ் இணையச் சஞ்சிகையாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
செல்வது உற்சாகம் தரக்கூடியது. ‘கெந்திங் மலை’ போன்று வருபவர்களின் பணத்தைக் கறக்கும் எவ்வித முன்திட்டங்களும் அங்கு இல்லை. ஒரு மணிகூண்டு. அதைச் சுற்றிலும் ஓரிரு கடைகள், கிளினிக், தபால் நிலையம் இவ்வளவுதான் பிரேசர் நகரம். எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து அலுக்கும் வரை காட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் பிரேசர் இந்நாட்டின் முக்கிய பறவைகளின் சரணாலயமாக இருப்பதைப் பலரும் அறிவதில்லை.