மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!

 

HINDRAF MEETS PMஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள்.  அவர்கள் தொணி இவ்வாறு இருந்தது.

Continue reading →

சாட்டை : ஒரு மீள் பார்வையில்…

சாட்டை திரைப்படம் குறித்து நண்பர்கள் பலரும் சொல்லியிருந்தனர். பார்ப்பதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். தாமதமாகத்தான் தொலைக்காட்சியில் தங்கத்திரையில் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்த்த உடனே படம் கவர்ந்தது. தங்கத்திரையில் அம்மாதம் முழுவதும் ஒரே படத்தை ஒளிபரப்புவார்கள் என்பதால் மீண்டும் சில முறை அப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்தடுத்த முறை பார்த்தப் பின்பே நான் அப்படத்தை ஓர் ஆசிரியராக மட்டுமே இருந்து பார்த்ததை அறிந்துகொண்டேன்.
Continue reading →

Park Jae-sang

பணக்கா ரனாகப் பிறந்தால் வாழ்க்கை எவ்வளவு எளிது தெரியுமா? என்பது போன்ற புலம்பல்களைப் பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். என்னைக் கேட்டால் அது ஒருவகையில் கொடுமைதான்.
Continue reading →

சூதாட்டம் ஆடும் காலம்: மேட்டுக்குடிகளின் குரல்

இலக்கிய இயக்கங்களும் பத்திரிகைகளும் எப்போதுமே சில முகமுடிகளைத் தயாரித்து வைத்துள்ளன. அவற்றிற்குத் தங்களைச் சுற்றிப் பலம் பொருந்திய ஆளுமைகள் இருப்பதாக எப்போதுமே பாவனை காட்டும் அவசியம் உள்ளது. தங்களுக்கு ஏற்றவராகவும் அனுசரித்துச் செல்லக் கூடியவராகவும் நடைமுறையில் இருக்கின்ற

உலக நாயகன் கமலும் உள்ளூர் நாயகன் சை.பீரும்…

நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல்.  ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத்  தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.

Continue reading →

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மலேசியா வருகை

ஆதவன் தீட்சண்யா

நண்பர்களுக்கு…

19 மற்றும் 20 ஆம் திகதி வல்லினம் வகுப்பு 3 நடைபெரும். இந்நிகழ்வுக்குப் பின்னர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் உரையும் / உரையாடலும் நடைபெறும்.  முற்றிலும் இலவசமாக நடைபெரும் இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம்.

Continue reading →