சரவணதீர்த்தா: தொடக்கத்தில் வெகுஜன இலக்கிய ரசனை கொண்ட உங்களுக்கு, தீவிர இலக்கியம் குறித்த ஆர்வம் எவ்வாறு தொடங்கியது? விஜயலட்சுமி: எனக்கு எப்போதுமே அதன் பேதம் புரிந்ததில்லை. எனது வாசிப்பும் பொதுவாக ஆய்வுகள் தொடர்பானதுதான். வல்லினம் நண்பர்கள் மூலமாகவே வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத்தின் பேதம் புரிந்தது. ‘கடக்க முடியாத காலம்’ எனும் ம.நவீனின் நூல் மூலமாக…
Category: நேர்காணல்
“எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.” – ம.நவீன்
கேள்வி : சிறுகதையில் இருந்துதான் உங்கள் இலக்கியப் பயணம் தொடங்கியதாக அறிகிறேன். ஆனால் உங்களின் ஆறாவது நூலாகத்தான் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது, காரணம் என்ன? ம.நவீன் : எனது சிறுகதைகள் குறித்த எவ்வித உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இல்லாதது ஒரு காரணம் என்றால் அவ்வுணர்வு ஏற்பட நான் தேடித்தேடி வாசித்த நல்ல சிறுகதைகள் மற்றுமொரு…
மலேசிய இந்தியர்களுக்கான தொல்காட்சியகம் கனவாகவே கரையுமா?
மலாக்கா மலேசியாவின் வரலாற்று மாநிலம். மலேசிய வரலாற்றை மலாக்காவிலிருந்து தொடங்குவதுதான் அரசைப் பொறுத்தவரை உவப்பானது. அதற்கு முன்பே பழமையான சுவடுகளைக்கொண்ட பூஜாங் பள்ளத்தாக்கெல்லாம் மேம்பாட்டுத் திட்டத்துக்காக அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க, வரலாறு குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் மலேசியாவில் தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லும் பிற்போக்குவாதிகள் ‘தமிழர் தேசியம்’ எனத் தமிழக அரசியல் கோமாளிகளின் பாதங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.…
“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை” – பகுதி 2
பகுதி 2 இதே காலத்தில் தமிழ்நாட்டிலும் இதே மாற்றம் ஏற்படுகிறது. இன்று தமிழ்நாடு. இலங்கை மலேசியா, தமிழர்கள்வாழ் புலம்பெயர் நாடு என்ற வேடுபாறின்றி ‘தமிழ்கவிதை’ பொதுத் தளத்தை வந்தடைந்திருக்கிறது. இதில் எங்கு தேக்கம் வந்ததெனக் கருதுகிறீர்கள்? நான் அப்படி எண்ணவில்லை. நான் எப்போதும் அதைத் துரத்துபவனாகவே இருக்கிறேன். அப்படி தேக்கமிருந்தாலும் ஏதோ ஒரு திசையில் உடைத்துப்…
“தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை”
இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை…
வென்றவன் அரசன்; தோற்றவன் பயங்கரவாதி!
இரண்டாம் பாகம் இன்றைய நிலையில் பிபி நாராயணனை பற்றி மிகையாக சிலர் சொல்கிறார்கள்? அவர் எம்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்? சிலர் அந்த காலத்தில் பிபி நாராயணன் போன்றவர்கள் மிக ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்தார்கள்? அவர்கள் தோட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நாராயணன் தோட்ட மக்களுக்காகவே வாழ்ந்தார் எனச் சொல்கிறார்கள்? உங்கள்…
மலேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை
திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து…
வென்றவன் அரசன்; தோற்றவன் பயங்கரவாதி!
அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூக செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியான ஜீவி காத்தையா கடந்த 2005 ஆண்டு வரையில் வாரத்தில் ஐந்து நாட்களில் நாளொன்றுக்கு 10,000 மீட்டர் தூரத்தை 28லிருந்து 30 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்கும் பயிற்சியில் திளைத்திருந்தவர். இப்போது இவர் தமது 76 ஆவது அகவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்! இவர்…
“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சிச்செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்குத் தேவை இல்லை!”
நூருல் இசா அன்வார் தனது அரசியல் வாழ்க்கையை 1998-ல் தொடங்கினார். மலேசிய அரசியல் அமைப்பைச் சீரமைக்க ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி இவரது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். ஆதலால், மக்கள் இவரை ‘Princess Of Reformation’ என அழைக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிலுள்ள ஊழல் செயல்பாடுகளையும்…
“கண்ணகியைப் பத்தினிக்கடவுளாக மாற்றுவது என்பது ஒரு செயல் திட்டம்”
கடந்த மாதத் தொடர்ச்சி… சினிமா மக்கள் மத்தியில் செய்தியை கொண்டுபோய் சேர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கும் போது 100 பேர் பார்க்கக்கூடிய நாடகத்தின் தேவை என்னவாக இருக்கும் என்ற கேள்வி பரவலாக உள்ளதே. பிரளயன்: சினிமா ஒரு தொழில்நுட்ப ஊடகம். ஆகவே சினிமாவையும் நாடகத்தையும் ஒப்பிடமுடியாது. புகைப்படம் வந்த பிறகு எதற்கு ஓவியம், என்று…
“தமிழ்ப் பாரம்பரியம் பேசுபவர்கள் கடைசியில் சாதியெனும் கழனிப்பானையில் கையை விடுவதைத்தான் நாம் பார்க்கமுடிகிறது”
சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்டவர், பிரளயனாக அறியப்பட்டது வானம்பாடி இயக்கத்தின் தொடர்பறாத நீட்சியினால்தான். மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முயற்சிக்குப் பயிற்சி வழங்கவே தமிழகத்திலிருந்து குறுகியகால வருகையளித்திருந்தார் பிரளயன். அந்தக் குறுகியகால நட்பில் அவரது தத்துவக்கூர்மையையும் வரலாற்று அறிவையும் ஆய்வுத்தெளிவையும் அறிய முடிந்தது. பத்தாண்டு…
படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன் – ஜேம்ஸ் லீ
சுதந்திரத்திற்கு எல்லா நேரங்களிலும் சுதந்திரம் இருப்பதில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரத்தின் வரையறையை ஆளும் அதிகாரங்களே நிர்ணயிக்கின்றன. அதிகாரங்களையும் அதன் வரையறைகளையும் கடந்து தனது கருத்துகளை படைப்பின் வாயிலாக வெளியிடவே ஒவ்வொரு கலைஞனும் முயல்கிறான். ஆனால் பல நேரங்களில் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு தன்னை சமரசரம் செய்துகொள்வது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அவர்களது…
“தமிழ் எழுத்தாளர் சங்கம் தக்க விழிப்புணர்வை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை”- உதயசங்கர் எஸ்பி
உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB)- மலேசிய தேசிய இலக்கிய வெளியிலும் தமிழ் இலக்கிய வெளியிலும் புகழ்பெற்ற பெயர். ‘அவ்லோங்’ தைப்பிங்கில் (Aulong,Taiping) பிறந்து வளர்ந்த இவர், தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைக்கும் இவர் ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.
ஆரம்பக் கல்வியை S.R.K Convent Aulongகிலும் இடைநிலைக் கல்வியை S.M.K Darul Ridwanனிலும் முடித்த இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். ஆரம்பப் பள்ளியிலேயே கதைகளை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களின் பக்கங்களை இவரின் எழுத்துக்கள் அலங்கரித்துள்ளது.