
எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு…














