
என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை.…