
தண்ணீருக்கு அடியிலிருந்த மண்ணை இப்போது அலிசாவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த மண்ணுக்குள் மாட்டிக்கொண்டிருந்த பல வடிவங்களிலான கருங் கற்களையும்; ஓடுகள் – சிற்பிகளையும் அவற்றை மறைத்து வளர்ந்திருந்த தாவரங்களையும் அலிசா மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளத்துத் தண்ணீரைப் போலவே தாத்தாவும் அசைவற்று இருந்தார். இடது முழங்காலில் முட்டுக் கொடுத்து வைத்திருந்த இடது கையும்…










