நாங்கள் இன்னும் நத்தை மாதிரி நகர்ந்து மேலே ஏறி கொண்டிருந்தோம். மெல்ல அடி வைத்து சென்று கொண்டிருந்த போது எங்களை தாண்டி சிறு கூட்டம் செனறது. ஒரு ஆண், ஒரு பெண், 7 வயது என அணுமானிக்க கூடிய சிறுமி, பெண்ணின் இடுப்பில் 3 வயது மதிக்கதக்க சிறுக்குழந்தை. இது தான் அந்த சின்ன குடும்பம்.…
முதுமையின் குளியலறை
இளமைக்காலங்களின் அழுக்குகளை துவைத்தெடுப்பதற்கு முதுமைக்குக் கிடைத்த “புனித நதி” குளியலறைகள்.. மீண்டும் மீண்டும் வந்துப் போகுது இந்தக் குளியலறைக்கு பகிரங்கப் படுத்தாமலேயே கழுவி எழுக்கமுடியாத அழுக்குகளை சுமந்துகொண்டு நதியும் முதுமையும் இதுவரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது யாரோ பேச்சைகேட்டு
மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்
மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன் இருபத்தி நான்காம் அறை நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில். புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண் அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு. மருத்துவத் தாதி என்பது சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில் கனிந்த மலர் என்பதுவா உதிர்ந்த மலர் என்பதுவா என்றறிய விரும்பிய மனதில் கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.…
கடற்கரையில் நான் நின்ற பின்னேரம்
ஒரு பின்னேரம் பாழடைந்து போனதைக் கண்டு தலைகுத்தி விழுந்தேன் கண்ணீருக்குள். என்ன வஞ்சமென்று தெரியவில்லை ஒரு காக்கையுமில்லை அந்த மாலையில் கரைந்து கரைந்து அதை மெருகேற்ற கடல் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் தளம்பிக் கொண்டிருந்தது என்முன்னால். என் முகம் பார்க்கத் திராணியற்று வெம்பியது அது. கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது எனக்கு. அது பின்னேரமாக…
பாலாவின் மனைவி :ஒரு மறைக்கப்பட்ட உண்மை…
அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும் ஆரம்பமானது. ஆனால், மரணம் அவர் சொல்ல…
13 ஆவது பொது தேர்தல் – நம் கோழைத்தனத்தை வரலாறு மன்னிக்காது
எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை ஆகையால் எனக்கு அது தொடர்பாகக் கருத்தில்லை எனச் சொல்பவர்களைக் கண்டித்தே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நம் வாழ்க்கையை, நம் நிலத்தை, நம் மூளையை ஆண்டு கொண்டிருப்பதே இந்த அரசியலாக இருக்கும்போது எப்படி தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என ஒருவர் கூற முடியும்? அரசியலில் களம் இறங்கி தனக்கொரு அடையாளத்தை உருவாக்கிக்…
மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!
ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும் படுபிசியில் அரசியல்வாதிகள். ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும்…
மலேசிய அரசியலும் பணமுடிப்புகளும்
“புலவர்கள் யாரேனும் நம்மை புகழ்ந்து பாட வல்லீரேல் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்” என்று அரசர்கள் அறிவிப்பதும் அந்த அறிவிப்பை கேட்ட புலவர்கள், அரசர்களை நாடிச் சென்று இனிய கவி பல பாடி (அரசனை வீரதீர சூரன் என்று புகழ்ந்து) பரிசில்கள் பெருவதும் நாம் சங்க இலக்கியச் சூழலில் பல காலம் அறிந்த ஒன்றுதான். ஆட்சியாளர்களை மகிழ்விக்கும்…
Ini Kalilah: தேர்தலுக்கு முன்பான இறுதி கேள்விகள்
தேர்தல் நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் நான் பல நண்பர்களிடம் தொடர்ந்து தேர்தல் குறித்தே உரையாடி வருகிறேன். எனது நோக்கம் யாரையும் வலிந்து குறிப்பிட்டு ஒரு கட்சிக்கு ஓட்டைப் போட வைப்பதல்ல. அவ்வாறு செய்வதும் ஒரு வன்முறைதான். பாரிசான் எப்படி மக்களைச் சிந்திக்க வேண்டாம்…சொல்லும் இடத்தில் ஓட்டைப் பதிவு செய் என அரசு ஊழியர்களை மிரட்டி வைத்துள்ளதோ…
தேர்தலில் யாருக்கு முதல் மதியாதை?
மலேசிய வரலாற்றில் இதுவரைக் காணக்கிடைக்காத அற்புத காட்சிகளோடு நாட்டின் 13-வது பொதுத்தேர்தல் களைக்கட்டியிருக்கிறது. நான் வாக்களிக்கப்போகும் இரண்டாவது தேர்தல் இது. எப்போதும் கட்டிக்கே (தேசிய முன்னணி) வாக்களிக்க வேண்டும் என்றிருந்த ஒரு தலைமுறையின் சத்தியத்தை உடைத்து நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவை கையில் வைத்திருக்கும் இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன். மிக அண்மையில் நான்…
ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்
பாயா பெசார் (கூலிம், கெடா) ஹிண்ட்ராப் இயக்கத்தின் முக்கிய தளமாகச் செயல்பட்டது. `வெட்டிப் போட்டாலும் ‘கட்டி’க்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று வாழ்ந்த இந்தியர்கள் மொத்தமாக மாறிய தருணம் அது. எப்படி அந்த மனமாற்றம் சாத்தியமானது? அளவற்ற விரக்தியுடன் இருந்த ஒரு சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக, குரலற்று வாழ்ந்தவர்களுக்கு வலிமையான, ஒரு சிலுவைச் சுமப்பவர் அடையாளத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம்…