உலகியல் சார்ந்த அடைவுகள் குறித்த பதிவுகளை நான் பொதுவாகவே எழுதுவதில்லை. அவை பெரும்பாலும் தொழில்திறனோடும் அதன் லாபங்களோடும் தொடர்புடையவை. தொழில் சார்ந்த அடையாளத்தை தனது அடையாளமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவே முதன்மையானது. அரசாங்கக் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது, உயர்பதவிகளை அடைவது, சொத்துகள் வாங்குவது, இயக்கங்களின் செயற்குழுவில் இருப்பது, தொழில் சார்ந்த விருதுகள் வாங்குவது போன்றவற்றை வெற்றிகளாக நம்புபவர்கள் தாங்கள் செய்யும் தொழிலை தங்கள் அடையாளமாகக் கொண்டிருப்பவர்கள். அது தவறும் அல்ல.
Continue readingதிறந்தே கிடக்கும் டைரி
கடிதம்: கருத்துக் குருடர்கள்
ம.நவீனின் பேய்ச்சி நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், அதை விமர்சித்து புலனத்திலும் முகநூலிலும் பதிவுகள் வந்ததால் எல்லாவற்றையும் நிதானமாக வாசித்தேன்.
வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’
அக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து ஏற்க மறுத்தன அந்நாயர் குடும்பங்கள்.தம்புரான் அவளை அரசியாக்க முயலக்கூடும் என்ற நிலை வந்தபோது அவளைக் கைவிடுமாறு மிரட்டினர். குலசேகர தம்புரான் மறுக்கவே அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தனர். உடனே அவர் ரேணுகாவை அழைத்துக் கொண்டு நெல்லைக்கு அருகே உள்ள திருக்கணங்குடிக்குச் சென்று வாழ்ந்து வந்தார். அவள் கருவுற்றபோது குலதெய்வ பூசைக்காக அவளையும் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் வந்தார். இதை ஒற்றறிந்த நாயர் குடும்பத்தினர் சேர்ந்து அவரை வஞ்சகமாக கொன்றனர். நிறைமாத கர்ப்பிணி ஆனதால் அவளைக் கொல்லவில்லை. கணவனைக் கண்ணெதிரில் பறிகொடுத்ததால் அவள் வஞ்சம் உரைத்து அவருடன் சிதையில் எரிந்தாள்.
வாசிப்பும் ரசனையும்: சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை கதைகளை முன்வைத்து.
தீவிர (வணிக) இலக்கியம் – 2
அன்பான சீனு, இந்த உரையாடலைத் தொடங்கியது முதலே வேதசகாயகுமாரின் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்’ எனும் நூலே நினைவுக்கு வருகிறது. சண்முகசிவா என் தொடக்கக் கால வாசிப்புக்கு இந்நூலைக் கொடுத்தார். எல்லோரையும்போல நானும் ஜெயகாந்தன் வழி இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தேன் என்பதால் இந்நூல் என்னை மிகவும் புண்படுத்தியது. அப்போது வேதசகாயகுமார் முக்கியமான திறனாய்வாளர் என்றெல்லாம் தெரியாது. தெரிந்திருந்தால் இன்னும் கலக்கம் அடைந்திருக்கக் கூடும். அதில் வேதசகாயகுமாரின் கருத்துகள் ஜெயகாந்தனை நிராகரிப்பதாகவே உள்வாங்கிக்கொண்டேன். விகடனின் எழுதிய அவரது நிலைபாடு குறித்து கு.அழகிரிசாமி உள்ளிட்ட பலரது கருத்துகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. 1992 அவரது முனைவர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வேடு 2000இல் தமிழினி பதிப்பில் வந்தது. அப்போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான பதில் 20 வருடங்களுக்குப் பின் மலேசிய இலக்கியச் சூழலில் இருந்து கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 15
எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 14
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
நான் ஓர் எழுத்தாளன். மொழியைப் பாதுகாக்க நான் எழுத்தாளனாக இருக்கிறேனா எனக்கேட்டால் திட்டவட்டமாக ‘இல்லை’ என்பதே பதில். Continue reading
எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல், எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
கடகடவென உருவாகியது ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவரது உழைப்பு அபாரமானது. Continue reading
எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 12
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
ரெங்கசாமி அவர்களை மீண்டும் ஆவணப்படத்துக்காகப் பதிவு செய்யலாம் என முடிவானது. இம்முறை சிவா பெரியண்ணன் கொஞ்சம் யோசித்தே திட்டமிட்டார். Continue reading
எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 11
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
ரெங்கசாமி அவர்களின் நேர்காணலுக்குப் பிறகு மனதில் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. இது வெறும் 40 நிமிட ஒளிப்படமாக மட்டும் வர தகுதி கொண்ட நேர்காணல் அல்ல என தோன்றியது. Continue reading