பயணம்

குமாரிகள் கோட்டம் – 14

டேவிஸ் அருவி

மலைகளினூடாகவே எங்கள் பயணம் தொடங்கியது. எனவே அட்டகாசமான வளைவுப்பாதைகள். அரவினுக்கு வளைவுப்பாதை ஒத்துவரவில்லை. இரண்டு முறை வாந்தியெடுத்தார். வேனிலும் பையை வைத்துக்கொண்டு வாந்தி எடுத்தபடியே வந்தார். இடையில் கோகிலாவும் சிவலட்சுமியும் கூட வாந்தியெடுத்தனர். சிவலட்சுமிதான் கழிப்பறையன்றி வேறு எங்குமே வாந்தியெடுக்க மாட்டேன் என உக்கிரமாகக் காத்திருந்தது படையப்பா நீலாம்பரியை நினைவூட்டியது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 13

இன்னொரு குழுவினர் வரும் வரைக்கும் பொக்கராவைச் சுற்ற போதுமான அவகாசம் இருந்தது. தங்கும் விடுதியிலேயே கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு முதலில் சென்ற இடம் பும்டிகோட்டில் உள்ள சிவன் ஆலயம். நேபாளத்திவ் கைலாசநாத் மகாதேவ் சிலைக்குப் பிறகு  இரண்டாவது மிக உயரமான சிவன் சிலை இங்குதான் உள்ளது. சிலை 51 அடி உயரம். சிவன் அமர்ந்திருக்கும் வெள்ளை ஸ்தூபி 57 அடி உயரம். ஆக 108 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் சிவனைக் காண ஆசைப்பட்டது தவறாகிப் போனது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 12

அன்னபூர்ணாவில் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இருந்தோம். பின்னர் ஒவ்வொருவராகக் கீழே இறங்கத் தொடங்கினோம். நான் தனியாகவே நடக்கத் தொடங்கினேன். கை வலித்ததால் என்னால் குழுவின் வேகத்திற்கு நடக்க முடியவில்லை.

கொஞ்ச தூரம் கடந்து திரும்பிப் பார்த்தேன். உலகின் பத்தாவது உயர்ந்த மலையான அன்னபூர்ணா வெண்ணொளி பிரகாசிக்க  சிரித்தது. இமையமலைத் தொடரில் ஒரு சிகரம். ஒருவகையில் இம்மலை அன்னபூரணி எனும் கடவுளின் வடிவாகவும் கருதப்படுகிறது. பார்வதி தேவியின் அவதாரம் அன்னபூரணி.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 11

அன்னபூர்ணாவில் வல்லினம்

சில பதற்றமான சூழல்களை எதிர்கொண்டதால் எங்கள் பயணம் சற்றுத் தாமதமாகி அதிகாலை 4.00 அளவில் தொடங்கியது. யாரும் பசியாறவில்லை. குளிரும் உறக்கமும் கௌவியிருந்தன. அன்னபூர்ணாவை நோக்கிய பயணம் அது. உச்சக்கட்டமான தருணம்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 10

நேற்றுபோலவே இன்றும் மச்சாபுச்சாரே உணவகத்தில் தங்கிடத் திட்டமிட்டோம். மாலைக்குப் பிறகு மச்சாபுச்சாரேவில் இருந்து அன்னபூர்ணா செல்வது ஆபத்தானது.  உயிர்வளி குறைபாடு ஏற்படலாம் என்பது சுரேஷின் கவலையாக இருந்தது. மேலும் இம்முறை 400 மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். மலையில் 400 மீட்டர் என்பது 40 கிலோ மீட்டர் போன்றது. மேலும் இரவு பாதகமான விளைவுகளை  உண்டாக்கலாம். எனவே தொடர் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 9

மேசைப் படுக்கை

ஹிமாலயாவில் தங்குவது குறித்து முன் திட்டம் இல்லாததால் மூவர் தங்கும் ஓர் அறை மட்டுமே கிடைத்தது. எனக்கும் சுரேஷுக்கும் ஒதுக்கப்பட்ட அறை போதுமான பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகிக் கிடந்தது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 8

பாசிக் காடு

காலைக் குளிரை உதறிக்கொண்டு  எழுந்தபோது அரவின் ஓர் அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். நேற்று அவர் குளிக்க எடுத்துச் சென்றது என்னுடைய துண்டாம். இருவருமே Decathlonஇல் வாங்கியதால் ஒன்று போலவே இருந்தன. நேற்று இரவு என்னையே நான் சந்தேகப்பட்டதை எண்ணி நொந்துகொண்டேன். அரவின் வைத்திருந்த புதிய துண்டை எடுத்துக்கொண்டு பல் துலக்கச் சென்றேன். அந்த அதிகாலை குளிரில் யாரும் குளிப்பதில்லை என்பது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் எங்கள் குழுவில் இருந்த கோமளா குளிரையும் பொருட்படுத்தாமல் குளித்துக் கிளம்பினார் என்பது நேபாளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அச்சாதனையைச் செய்த கோமளா தன்னடக்கத்துடனேயே காணப்பட்டார்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 7

எங்கள் பயணம் தொடங்கியது. பச்சை போர்த்திய பெருமலைகள் வெயிலில் ஒளிர்ந்துகொண்டிருந்தன. காற்றில் குழுமை. மெல்ல மெல்ல மலைகளுக்குள் நுழைந்தோம். சரிவான பாதையில் பிரத்தியேகமாக வாங்கிய காலணிகள் அபாரமாக ஒத்துழைத்தன. கைத்தடிகள் வசம் வர தாமதமாகின.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 6

குங்குமச் சாமியார் அரவினுக்கு என்ன சாபம் கொடுத்தார் என்பது ஒருநாளைக்குப் பிறகுதான் தெரிந்தது. காலையிலேயே பித்த வாந்திக்கான மருந்து உள்ளதா எனக் கேட்டார். பின்னர் வயிற்றுப்போக்கு அவரை வாட்டத் தொடங்கியது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 5

சுரேஷுடன் ஸ்டார் கணேசன்

அன்று போக்ரா (Pokhara) நகரம் செல்ல வேண்டும். ஏறக்குறைய ஆறு மணி நேர பேருந்துப் பயணம்.

போக்கராவுக்குச் செல்லத் தயார் செய்துகொண்டு ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவை உண்டபோதுதான் தற்செயலாக ஸ்டார் கணேசனைச் சந்தித்தேன். அவரும் அன்னபூர்ணா மலை ஏற பினாங்கு குழுவுடன் வந்திருந்தார். சந்தித்து நெடுநாளாகிவிட்ட நிலையில் அவரை அங்குச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

Continue reading