Creativity (படைப்பாற்றல்) மற்றும் Crafting skills (கைவினை திறன்) ஆகியவற்றுக்கான வித்தியாசம் என்ன?
இதன் வித்தியாசம் தெரியாமல்தான் நமது கல்விக்கூடங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதாகச் சொல்லி இயங்குகின்றன. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் நமது கலை இலக்கிய உலகமும் படைப்புத்திறன் எனச் சொல்லிக்கொண்டு இயங்குகிறது. பயன்படுத்தாத பாட்டில்களைக் கொண்டு சிறிய பூச்சாடிகளை உருவாக்குவது, மணிகளைக் கொண்டு ஓவியத்தை அலங்கரிப்பது, அலுமினிய டின்களில் குருவிகள் செய்வது எனப் பள்ளிகளில் போதிக்கப்படுவதையும் அதை திறமையாகச் செய்யும் மாணவனையும் படைப்பாளன் எனச் சொல்ல முடியாது. அவர்கள் கைவினைத்திறன் பெற்றவர்கள் எனலாம்.