கதை சொல்லும் நவீன் இம்முறையும் நம்மை ஏமாற்றவில்லை. இது அவரின் சுய அனுபவமாக இருக்க முடியாது, ஏனெனில் நவீன் எனக்குத் தெரிந்தவரை பணியிட வேலை மாறி சரவாக் மாநிலத்துக்குப் போனதில்லை. எனவே யாரோ ஆசிரியர் சொல்லக் கேட்டு எழுதியிருக்கலாம். இது என் அனுமானம். இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனால் மட்டுமே தான் செவிமடுத்த ஒன்றை புனைகதையாக்க முடியும். நீட்டல் மழித்தல் இருக்கலாம். அப்படி இதிலும் உண்டு என்று நம்புகிறேன்.
கடிதம்/எதிர்வினை
தர வரிசை – சீனு
உங்களுடன் நிகழ்த்திய உரையாடல் பல அலகுகளில் என்னை தொகுத்துக்கொள்ள உதவியது. ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு எதிராக ஆன்மசுத்தியுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுமையுடன் உரையாடி இருக்கிறேன். அதில் உரையாடல் என்பதையும் கடந்த பொறுப்புணர்வு உண்டு. அந்த பொறுப்புடன்தான் அந்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறேன் என அதை மறுவாசிப்பு செய்த்து அறிந்து கொண்டேன் .
இறுதியாக – சீனு
முதலில் இரண்டு விஷயங்களை திட்டவட்டமாக சொல்லி விடுகிறேன் . ஒன்று உரையாடலின் புரிதலின் பொருட்டு மட்டுமே ”இங்கு ” ”அங்கு ” எனும் பதத்தை பயன்படுத்துகிறேனே அன்றி , அது பிரிவினையை சுட்டுவதற்கு அல்ல . [நீங்கள் அதை அறிவீர்கள் ].
இரண்டு தீவிர இலக்கியம் , இலக்கிய செயல்பாடுகள் கைக்கொள்ளும் ஆளுமைகள் மீதான மாளாத காதல் கொண்ட வாசகனாக மட்டுமே நின்று உரையாடுகிறேன் . நிற்க .
அந்தரங்கத்தீயும் அணையா சருகும் – கடலூர் சீனு
அன்பு அண்ணா ,
உங்கள் எதிர்வினையை தொடர்ந்து மேலும் என் சிந்தனையை தொகுத்துக்கொள்ள முயல்கிறேன் .
முதல் அலகாக நீங்கள் குறிப்பிட்ட தமிழ் நிலத்தின் சூழலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் . இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாதோருக்காக வைரமுத்து அவர்கள் உருவாக்கி அளிக்கும் மேடைகள், அவர் தனக்கான ஆதரவு வட்டத்தைத் தமிழ் புழங்கும் எல்லா நிலங்களிலும் உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றே. தீவிர இலக்கியத்துடன் எவ்வகையிலும் சம்பத்தம் அற்ற வைரமுத்து ஜெயகாந்தன் எனும் ஆசானுக்கு அளிக்கப்பட ஞான பீடம் விருதை குறி வைத்து கணக்குகள் போட்டுக்கொண்டிருப்பது தமிழ் நிலம் அறிந்த ஒன்றே. அகிலனுக்கு அளிக்கப்பட்டு எய்திய இழிவை,ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டத்தின் வழியே சமன் செய்து கொண்டது அவ் விருது. இதோ மீண்டும் அவ்விருதின் பாதையில் மற்றொரு புதைகுழி . Continue reading
கடிதம் : பனை மட்டையும் பத்திரிகையும்
சீனுவின் கடிதம் சிற்றிதழ் சூழல் குறித்து மேலும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தூண்டியது. புறத்தோற்றம், வணிகமற்ற போக்கு, குரல் நசுக்கப்பட்டவர்களுக்கான தளம் என்கிற மாதிரியான வரையறைகள் சில முன்வைக்கப்படுவதைப் போலவே சிற்றிதழை மற்றுமொரு ஊடகமாகவும் (another medium) அல்லது குறிப்பிடத்தக்க ஒரு குறுங்குழுவுக்கானதாகவும் பார்ப்பதும் மிகக் குறுகலான பார்வை என்றே நினைக்கிறேன். அப்படியான வகைபாட்டு சிந்தனையினூடேதான் சீனுவின் கடிதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
தீவிர (வணிக) இலக்கியம்
அன்பான சீனு. மலேசிய இலக்கிய வரலாற்றை பலரும் திணற திணற மேடைகளில் பேசுவதை நான் கேட்டுள்ளேன். வருடங்களையும் சம்பவங்களையும் சரியாக ஒப்பிப்பதன் மூலம் தத்தம் ஞாபக சக்தியின் பளபளப்பைப் பொதுவில் காட்டி கண்ணைக் கூசச்செய்யும் திறன் வாய்ந்த நிபுணர்கள் எங்கும் உள்ளதுபோல மலேசியாவிலும் உண்டு. இப்படி ஒப்புவிக்கப்படும் இலக்கிய வரலாறுகள் பெரும் நிகழ்வுகளாகவோ சூழலை மாற்றியமைத்ததாகவோ சலனத்தை ஏற்படுத்தியதாகவோ தரவுகளின் பட்டியலாகவோ மட்டுமே இருந்துவிடுகிறது. வரலாற்றில் மாற்றங்களை நிகழ்த்தும் தனி மனிதர்களின் அந்தரங்க மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போதே மொத்த வரலாற்றின் வரைபடம் ஓரளவு பூர்த்தியாகிறது என்று நினைக்கிறேன். இதை வாய்மொழி வரலாறு மூலமே தொகுப்பது சாத்தியம். அவ்வாறான முயற்சியில் இறங்கியபோதுதான் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நவீன இலக்கியத்தில் இயங்கிய பலருக்கும் ஜெயகாந்தனின் தாக்கம் இருந்தது புரியவந்தது. அவர் வழியே அவர்கள் இலக்கியத்தின் காத்திரமான ஒரு பகுதியை அடைந்தனர். ஆனால் அந்தத் தாக்கம் ஜனரஞ்சக இதழ்கள் வழி கிடைக்கப்பெற்ற நகைமுரணே மலேசிய இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ள சரியான பாதை என நினைக்கிறேன்.
பனை மட்டையும் பத்திரிகையும் – கடலூர் சீனு
இக்கடிதம் அவ்வப்போது இலக்கு விலகி அலைய சாத்தியம் உண்டு . உங்கள் வினா வழியே நான் சிந்தித்தவற்றை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன் எனக்கொள்ளலாம் .
முதலில் உங்கள் வினாவை தமிழ் நிலத்தில், இந்த வினா உருவாகி வந்த கலாச்சார பின்புலத்தில் வைத்து அணுகிப் பார்க்கிறேன்.
எதிர்வினை: அபோதத்தின் அலறல்
வல்லினம் 100 களஞ்சியத்தில் சிங்கை பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் குறித்து நான் எழுதியிருந்த ‘இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி’ எனும் விமர்சனக்கட்டுரையை ஒட்டி நண்பர் சிவானந்தம் நீலகண்டன் சில மாற்றுக்கருத்துகளை முன்வைத்திருந்ததை வாசித்தேன். என் விமர்சனக் கட்டுரையில் பல இடங்களில் தவறான அணுகுமுறைகளும் மேலோட்டமான பார்வைகளும் உள்ளதால் அதை விமர்சனத்திற்குள்ளாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதைப் பாராட்ட வேண்டும். சிவானந்தன் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் எனது சில மாற்றுக் கருத்துகளை முன்வைக்க நினைத்தேன். Continue reading
கடிதம்: நாகம்
எனக்கு கதைகள் வாசிப்பது பிடிக்கும். ஆனால் அதிகமாக வாசிக்கும் நேர விஸ்தாரம் இல்லை. எப்போதாவது வாசிப்பதில் சில மனதில் இருக்கும். சில பல வருடங்கள் ஆகியும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போகும். தமிழில் மட்டுமல்ல மலாய் மற்றும் ஆங்கில நாவல்களை வாசிப்பேன். அப்படி வாசித்ததில் இன்றளவும் நான் பல முறை படித்து புரிந்து கொள்ள முடியாமல் போய் பல முறை வாசிப்புக்கு பிறகு புரிதலை உண்டாக்கிய கதைகளில் ஒன்றுதான் உங்கள் ‘நாகம்’. பார்க்க ஏதோ கோயில் குளம் நாகம் என பழைய இச்சாதாரி நாகம் பற்றியது போன்ற பீடிகை இருந்தாலும் கதை சரியா இல்லையே என்ற அத்திருப்தியோடுதான் கணிசமான மறுவாசிப்பை செய்தேன்.
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்களுக்கு எதிர்வினை: விஜயலட்சுமி
வணக்கம் டாக்டர்,
நீங்கள் ம.நவீனுக்கு எழுதிய கடிதம் வல்லினம் 100ஐ தொட்டிருப்பதால் அதன் பதிப்பாசிரியர் எனும் அடிப்படையில் என் எதிர்வினையை முன்வைக்கிறேன்.



