அண்ணா, வாசித்தேன். நல்ல மொழிநடை. வாசிபின்பம் அமைந்த கதை. ஆனால் கதையின் மைய முடிச்சு வலிமையாக உருவாகி வர வில்லை. புராணகதை அதில் ஒன்றினை மாற்றி அமைக்கும் ஆளுமை. அது மிஸ்டிக் உரு கொண்டு மண்ணில் இறங்கி வரலாற்று தருணம் ஒன்றினை மாற்றி அமைக்கும் இந்த தொடர் பின்னல் வலிமையாக உருவாகி இல்லை. காரணம் புராண கதையில் அந்தக் குதிரைக்கு எந்த role ம் இல்லை. கத்ரு அவள் பொறாமை மற்றும் அவள் ஏவும் பாம்புகள் சதி இவைதான் அங்கே வினையாற்றிக் கொண்டிருக்கிறது.
Continue readingபேய்ச்சி: தமிழ்ப்பிரபா
ஒரு நல்ல நாவலுக்குள் நுழைந்து விட்டோம் என்கிற உணர்வென்பது தூரத்து அருவியின் சலசலப்பு ஏற்படுத்தும் பரவசத்திற்கு ஒப்பானது. ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ என்கிற இந்நாவல் படிக்கத் துவங்கிய முதல் சில பக்கங்களிலேயே அவ்வுணர்வை எனக்களித்தது.
எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள்: பாலுணர்வின் கிளர்ச்சி
1
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை வலுவானது. மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை (நெருப்புப் பூக்கள் – 1979) வெளியிட்டவர். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை (1979) நடத்தியவர். அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து (புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் – 1979) நவீன இலக்கியச் சிந்தனை மூலம் வெளியிட்டார். மலேசியாவில் புதுக்கவிதை வளரத்தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தவர். ஆம்! இளஞ்செல்வனிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என கோ.புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது (மறக்கப்பட்ட ஆளுமை).
Continue readingரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்
பொழுதுபோக்கு இலக்கியம் இருப்பதை விமர்சிக்கவில்லை. அவற்றை உயர்வாக மதிப்பிடுவது, அவற்றைச் சார்ந்த சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது – இந்த அணுகுமுறையைத்தான் நான் விமர்சிக்கிறேன் – சுந்தர ராமசாமி
பறை இரண்டாவது இதழுக்காக ‘கூலிம் நவீன இலக்கிய களம்’ 2014இல் ஓர் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விதழின் முன்னுரையில் மலேசிய இலக்கிய உலகம் ரெ.கார்த்திகேசு போன்ற ‘மீடியோக்கர்’களை (mediocre) முன்னிலைப்படுத்துவதன் அபத்தங்களை எழுதியிருந்தேன். அக்கட்டுரை குறித்து மேடையில் தனது கருத்தைக் கூறிய எழுத்தாளர் கோ.புண்ணியவான், ‘ரெ.கார்த்திகேசு வணிக இலக்கியவாதிதான். அவர் தன்னை தீவிர இலக்கியவாதியென எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. அப்படியிருக்க அதை ஏன் மறுபடி மறுபடி பதிவு செய்யவேண்டும்?’ எனக்கேட்டார்.
Continue readingபேய்ச்சி விமர்சனம் (சிவானந்தம் நீலகண்டன்)
‘அமைவது’ என்ற ஏதோ ஒரு மாயத்தன்மை ஒவ்வொரு சிறப்பான இலக்கிய ஆக்கத்திற்குள்ளும் நிகழ்கிறது. அதைத் தெளிவான ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடிவதில்லை. இத்தனை ஆண்டுக்கால இலக்கிய விமர்சனத்துறை அதைப்பிடிக்க முயலும்போதெல்லாம் அது நழுவிக்கொண்டே வந்திருக்கிறது. அந்த மாயத்தன்மையே இலக்கியத்தில் போலிகள் மறைந்துகொள்வதற்கான இடத்தை அளிக்கிறது. அந்த வகையில் அது சாபமாக இருக்கிறது என்றாலும் அந்த மாயம்தான் எழுத்தை ஒரு தொழில்நுட்பமாகக் கற்றுத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளோரிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்றிக்கொண்டுவரும் வரமாகவும் இருக்கிறது.
Continue readingபேய்ச்சி: கதையல்ல வாழ்க்கை
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நாவலைக் கைகளில் ஏந்தி அதை வைக்க மணமில்லாமல் வாசித்து முடித்தேன்.
பிரபஞ்சன் சொல்வார் – கதை என்பது கதையே அல்ல, கதைவிடுவதும் அல்ல, நிகழ்ச்சிகளின் தொகுப்பும் அல்ல.. நிகழ்விற்குக் கீழே நிகழ்விற்கு வெளிப்படையாகத் தெரியாமல், நிகழ்வோடு அந்தரங்கமாக ஒரு நிகழ்வு நிகழ்கிறதல்லவா, அதுதான் கதை.
Continue readingசெலாஞ்சார் அம்பாட் : புனைவின் துர்க்கனவு
நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.
கழுகு: கடிதம்
மிஸ்டிக் ஆன கதை.
ப்ரமாதம்.
கழுகாக தோற்றம் தரும் அமிர்தலிங்கத்தில் துவங்கி…பிணங்களை உண்ண கழுகு போல காத்திருக்கும் நிலைக்கு
சிவா வருவது (அல்லது வரப்போவது) வரை…
கழுகு (சிறுகதை)
“மொதல்ல அத நுப்பாட்டு!”
நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன்.
Continue readingபேய்ச்சி ஒரு வாசிப்பு – ‘மகிழம்பூ’ கலைசேகர்
வழக்கமாக நவீனின் படைப்புகள் என்றாலே வாசிக்க தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை வேறெதிலும் ஆர்வம் திரும்பாது. ஆனால் பேய்ச்சியை பல இடங்களில் நிறுத்தி எடுத்து வைக்க நேர்ந்தது. மீண்டும் வாசிப்பை தொடர சற்று கால அவகாசமும் தேவையாக இருந்தது எனக்கு.
ஒருவேளை நாவலில் இடம்பெற்ற சில காட்சியமைப்புகளின் சாயல்களை முன்னமே அவர் படைப்புகளில் வாசித்துள்ளது காரணமாக இருக்கலாம். அது ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஒரு நிலத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் இருந்து அறிமுகம் செய்வதால் உண்டாகும் ‘பழகிவிட்ட’ மனநிலையாகவும் இருக்கலாம்.