2016இல் கீழவளவு மலையில் சமண படுகைகளைக் கண்டுவிட்டு இறங்க முயன்றபோது ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட பாதைகள் சரிந்துசெல்வதைக் கண்டேன். எந்த வழியில் ஏறிவந்தேன் என்று கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன். என்னை அழைத்துச்சென்ற நண்பர் அன்புவேந்தனும் இறங்கும் வழியைக் கணிக்கச் சிரமப்பட்டார். ஏறிவரும்போது அந்தச் சிக்கல் இல்லை. உச்சி மட்டுமே கவனத்தில் இருந்தது. சிறுகதை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசம் என மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சியைப் பார்ப்பதையும் உச்சியில் இருந்து பல்வேறு திசைகளில் பிரிந்து செல்லும் வழிதடங்களைப் பார்ப்பதையும் சொல்லலாம். சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துகொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.
Continue readingசியர்ஸ் : கடிதம் 3
பிரியமுள்ள எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு,
சியர்ஸ் கதை வாசித்தேன். ‘சியர்ஸ்’ களித்திருக்கும் சந்திப்பு. இனிய சந்திப்பு ஒன்றின் முடிவு. இந்த இரண்டு தருணங்களிலும் அதை துவங்கி வைக்க முடித்து வைக்க கையாளப்பட்ட உவகைச் சொல். கதையின் உறவும் பிரிவுமான உணர்வுநிலைக்கு அதன் துவக்கத்துக்கும் முடிவுக்குமான சரியான சொல்லும் கூட சியர்ஸ்.
சியர்ஸ் : கடிதம் 2
சியர்ஸ் சிறுகதையை வாசித்தேன். தாயைத் தேடிச் செல்லும் அலைவு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தத் தேடலை அலைவை எந்த விசை உந்தி தள்ளுகிறது எனும் கேள்வியை இச்சிறுகதை எழுப்புகிறது. தாய்மை என்கிற உணர்வு. தாயை இழந்து போகின்ற தருணத்தில் யாருமே அருகில் இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்.
Continue readingசியர்ஸ்: கடிதங்கள் 1
சியர்ஸ் வாசித்தேன். மிகக் கச்சிதமாக சிறுகதை வடிவம் கை கூடி வந்த கதை. அந்தக் கனவில் வரும் முகம் ஒரு புகைப் படம் என அவிழும் இடம் துணுக்குற வைத்தது. விவரிப்பின் ஊடே ஒரு கேமராவின் நோக்கில் பர்மாவை காட்சிப்படுத்துவது ஒரு அபாரமான யுக்தி. இது craft மேம்பட்டு creation னை உரசும் இடம். புகைப் படத்தையும் ஒரு சொல்லையும் வைத்துக் கொண்டு துவங்கும் மூர்த்தியின் பர்மா பயணம் ஒரு துப்பறியும் கதை போல வளர்ந்தது.
பேய்ச்சி: காலம் கடந்து வாழ்வாள் – ப.விஜயலெட்சுமி
எழுத்துத் துறையில் இதுகாறும் நவீன் எனும் எழுத்தாளரின் பல முகங்களைக் கண்ட நான், ‘பேய்ச்சி’ நாவலின் வழி வேறுபட்டு காண்கிறேன். எழுத்தாளரின் புதிய பரிணாமத்தை என்னால் 283 பக்கங்களைக் கொண்ட பேய்ச்சியின் மூலம் காண இயல்கிறது. எப்பொழுது, இந்நாவலைக் கையில் ஏந்தினோம் என, எண்ணி பார்ப்பதற்குள் இதன் இறுதிப் பக்கத்தைக் கடந்து விட்டேன்.
சிறுகதை: உச்சை
கொட்டகைக்கு அருகில் நிழலசைவு தெரிந்தவுடன் முத்தண்ணன் திடுக்கிட்டு எழுந்தான். உச்சையின் நெடுநேர கனைப்பு கனவின் தொலைதூரத்தில் கேட்பதுபோல இருந்ததால் அயர்ந்துவிட்டிருந்தான். சமீப காலமாக அவன் கனவுகளில் மனிதர்களே வருவதில்லை. சிறு தீப்பொறி கனன்று கம்முவது தெரிந்தது. கண்களை கசக்கிப்பார்த்தான். நின்றிருக்கும் மனிதரின் தலைக்கு மேல் தொப்பியின் நிழல்வடிவம். துரைதான் என்று தெரிந்தவுடன் பயம் அதிகரித்தது.
Continue readingசெம்மண்ணும் நீலமலர்களும்: முதல் சுடர்
மலேசிய நாவல்களை வாசிக்கும்போது பெரும்பாலானவை ஏற்படுத்தும் சலிப்புக்குக் காரணம் அதன் அடிப்படை சாரமாக மறுபடி மறுபடி வரக்கூடிய இரண்டு அம்சங்கள்தான். முதலாவது படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ள நீதியுணர்வு சார்ந்த கோபம். இரண்டாவது மானுட உறவுகள் சார்ந்த குழப்பம்.
Continue readingஉச்சை: கடிதங்கள் (4)
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவின் ரப்பர் தோட்டத்திற்கு ஒரு குதிரை வந்து சேர்வதும் அதன் பின் நிகழும் சம்பவங்களுமே கதை.
முத்தண்ணன் தீண்டத்தகாத ஜாதியை சேர்ந்தவன், மிக இள வயதிலேயே அனாதை யானவன், குதிரை மேல் கொண்ட பித்தின் காரணமாக, கிராமத்தில் கோவேறு கழுதையை குதிரை என்று நம்பி அது குட்டி போடும் தனக்கு ஒரு குதிரை கிடைக்கும் என்ற ஆசையில் ஆண்டுக்கணக்கில் கடுமையாக உழைக்கிறான்,அது இறந்துவிடுகிறது அவன் கையாலேயே அடக்கம் செய்துவிட்டு, ரப்பர் தோட்ட வேலைக்கு வந்து சேர்கிறான்.
Continue readingஉச்சை: கடிதங்கள் (3)
இந்திரனின் வாகனமான உச்சைசரவஸ் தொன்மத்தில் அதன் மேல் யாரமர்ந்தாலும் அவரே இந்திரன் எனக் கொள்ளப்படும். அத்தொன்மத்தை ஆட்சி அதிகாரத்துடன் இணைத்து புனைந்திருப்பது ஒரு தொன்மம் அரசியல் என புது வித வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது. இந்திரனால் தன் உச்சைசர்வஸில் யாரையும் அனுமதிக்க முடியாதது போலவே துரையாலும் முத்தண்ணனிடம் அதனை குடுக்க இயலவில்லை ஆனால் அதனை விட்டுச் செல்லும் தருணத்திலும் அவரால் கொல்லவும் இயலவில்லை.
உச்சை: கடிதங்கள் (2)
நேற்று நீலகண்டம் குறித்து திரு. காளி பிரசாத் பேசியதை கேட்டேன். அதில் நஞ்சிற்கும் அமுதத்திற்கும் இடையே தோன்றிய சில உயிர்களை பற்றி கூறினார். இன்று தான் தெரிந்து கொண்டேன் உச்சை சிரவஸ் என்ற வெள்ளை குதிரையும் சமுத்திர மந்தனத்தின் போது பாற்கடலில் இருந்து தோன்றியது என.
பந்தய குதிரைகள் செயல்பட இயலாத நிலை வரும் போது அவை சுட்டு கொல்லப்படுவதே வழக்கம் என்று கேள்விபட்டிருக்கிறேன். தகுதிக்கு மீறியதாக தோன்றும் உறவுமுறைகள் ஏற்படுவதை தடுக்க செய்யப்படுவதாக அறியப்படும் கவுரவ / ஆணவக்கொலைகள் நினைவிற்கு வந்தது.