20.9.2014 – இரவில் எழுதிய கவிதைகள் (wine துணையுடன் )

by navin

by navin

நான்
பிரிவு பற்றி கூறியதை
புரிந்துகொள்ள முடியாத
உன் சூன்யப் பெருவெளிக்கு
சில உதாரணங்கள் காட்டினேன்

Continue reading

ஹி ஹி ஹி ஹி: சாருவுக்கு பதில்

சாரு நிவேதிதா எழுதியுள்ள (http://charuonline.com/blog/?p=1503) கட்டுரையில் குறிப்பிடும் மலேசியப் பொடியன் நான்தான். இரண்டு நாள்களுக்கு முன்புதான் கண்ணாடியில் கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறது என கவனித்துப் பார்த்தேன். சாரு பொடியன் என்றவுடம் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

Continue reading

கடிதம்- நவீன் செல்வங்கலை

நண்பரின் ‘வலி’ எமக்கு புரிகிறது… :) ஆழ்ந்து நோக்கியதன் விளைவாகத்தான் இக்கட்டுரை எழுந்திருக்கும் என நம்புகிறேன்.இந்நூலை நான் வாசித்ததில்லை. இருப்பினும் நண்பரின் இந்நூல் குறித்த பகிர்வினை வாசித்தப் பின்பு, ஒரு வேளை சீ. அருணின் கட்டுரைகள் வரலாறு குறித்த நுட்பமான பார்வை இல்லாதவரால் சான்றுகளாகக் கொள்ளப்பட்டால், எதிர் கால சந்ததியர்கள் பூனையை புலி எனக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆய்வுகள் வேறு, நம்பிக்கைகள் வேறு எனும் நிலைபாட்டினை முதலில் ஆய்வாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.தமிழர் தம் நெடிய வரலாற்றை, அதில் உள்ள நுண்பாக விடயங்கள் எதையும் தாய்மொழி வழியாக முதலில் அறியவில்லை என்பது குற்றமாக இருந்த காலம் போய், சமிபக்காலமாக கள ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் சான்றுகளோடு பல ஆய்வாளர்கள், இதற்கு முன்பு நிறுவப்பட்ட கருத்துகளை தகர்த்து உண்மை சூழலை நிறுவியுள்ளனர் . இவற்றில் ஒன்றைக்கூடவா இவர் சான்றாகக் கொள்ளவில்லை?

வரலாற்றுக் குறிப்புகளை பதிவுச் செய்கையில் கால அளவீட்டு முறை என்பது தனியொரு பகுதியாகவே நிலைத்து நிற்கிறது. பல நூல்களில் ஒரே நிகழ்வானது பல்வேறு காலங்களில் நிகழ்ந்ததைப் போல குறிப்பிட்டிருப்பது, ஆய்வாளர்களால் காலத்தை சரியான முறையில் கணக்கிட இயலாமல் போக்கினைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொறு ஆய்வாளனும் வரலாற்றை பதிவு செய்கையில் காலத்தை உய்த்துணர வேண்டும்.

உலகிலுள்ள தொன்மைச் சமுதாயங்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயம். தொன்மை மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. கடந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயமும் அதன் படைப்பான தமிழ் மொழியும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. சமுதாய மாற்றமானது மொழியில் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத பட்சத்தில் புதிய கருத்துகளும் பொருள்களும் உருவாகும். ஆனால் இம்மாற்றங்களின் கால நிலையையும், அதனால் எற்பட்ட விளைவுகளையும் ஆய்வாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதனை சீ. அருண் உள்ளார உணர்ந்திருந்தால் இந்நூலினை வெளியிடும் எண்ணமே அவருக்கு உதித்திருக்காது.

ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

tamilar_thadangalநான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின் மேல் திணிக்கப்பட்டுள்ள கதைகளின் மேல் எனக்கு எப்போதும் விருப்பம் இல்லை. வரலாற்றுக்கும் வரலாற்றுக்கதைக்குமான வேறுபாடு தெரியாமல் இருப்பதென்பதே இன்றைய அடிப்படை கல்விச்சூழல் முதல் கல்லூரி வரை உள்ள மிகப்பெரிய சிக்கல்.

Continue reading

பெண் எழுத்து

jeyamohan21இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின் குரல்களோடு இணைந்திருக்கும். அது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அதுபோன்ற கோஷங்கள் எழுப்ப அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. எதையும் வாசிக்க வேண்டியதும் இல்லை. ஆனால் பொது பார்வையில் அந்தக் கூச்சலும் சர்ச்சையின் ஒரு பகுதியாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கவனம் பெறும்.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 10

எரிமலை வாயு

எரிமலை வாயு

மீண்டும் ஒரு எரிமலை சார்ந்த நிலபரப்புக்கு அழைத்துச் சென்றார் வழிக்காட்டி. இம்12முறை மலைமீது எரிமலையிலிருந்து வெளிவரும் வாயுவைப் பார்க்கப் பயணம். அந்த வாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்றனர். 85 டிகிரி அதன் வெப்பம். அந்த வாயு வெளிவரும் இடத்தில் தேங்கும் நீர் பொல பொல என கொதித்துக்கொண்டிருந்தது. பெரிய பாதுகாப்பெல்லாம் இல்லை. சுற்றி இருந்தவை மூங்கிலிலான தடுப்புகள்தான்.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 9

விவசாயி

விவசாயி

ஜோக்ஜாவில் சோம்பேறிகள் இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? வேற வழி ! ஈராயிரம் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்து ஒருவன் போய்வந்து சொன்னாமல் நம்பாமல் மறுக்க முடியுமா என்ன? உண்மையில் அது உழைப்பவர்களின் தேசம்தான். ஜோக்ஜாவின் நான்கு திசைகளுக்கும் சென்று கண்டதில் என்னால் இதை உறுதியாகவே நம்ப முடிகிறது. உடல் உழைப்புத் தொழிலாளர்கள் எங்குமே காணக்கிடைக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள்  இன்னமும் எருமையைக் கொண்டே உழுகிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பாரம் சுமந்து செல்கிறார்கள். மலேசியாவில் இதையெல்லாம் 10 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கலாம். விவசாயமெல்லாம் அழிந்து இன்று மலேசியத் தொழிற்பேட்டைகளில் புகை மூட்டங்களுக்கு மத்தியில் வேறு விதமான உழைப்பு.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 8

07அன்று காலை மிக உற்சாகமான பொழுது. நாங்கள் எரிமலையைப் பார்க்கப் புறப்பட்டோம்.04 இதற்கு முன்பு பாலித்தீவில் எரிமலையைக் கண்டதுண்டு. அது இறந்துபோன எரிமலை. அதன் அருகே உணவகங்களை அமைத்து சாப்பிட வைத்தார்கள். இறந்து போன புலியின் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எப்படி சுவாரசியம் இல்லாமல் இருக்குமோ அப்படி இருந்தது அந்தச் சூழல். ஆனால் இது அப்படியல்ல. இன்னமும்  உயிருடன் உறுமும் புலி. மத்திய ஜாவா பகுதியில் உள்ள இந்த மெராபி எரிமலை 2010-ஆம் ஆண்டு வெடித்ததில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 7

06நான் ஓர் உணவுப்பிரியன். உணவில் எனக்கு தயவுதாட்சணியம் எல்லாம் இல்லை. மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தடை செய்யப்படும் உணவுகளை வயிற்றினுள் இறக்குவதுதான் முதல் அறம். டாக்டர் சண்முகசிவா என் உணவு பழக்கத்தை அடிக்கடிக் கிண்டல் செய்வார். நான் சைவ உணவு உண்பவனாக மாற வேண்டும் என்பது அவர் ஆவல். எனக்கோ சட்டியில் வேக வைத்த ஆட்டைக்கூட ஒரு புலிபோல சாப்பிட வேண்டும் என்பதே விருப்பம்.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 6

005மகாயனம் பற்றி கூறுவதகாச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கு முன் அடிப்படையான சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். புத்தர் தனக்கு வாரிசு எவரையும் நியமிக்கவில்லை. எனவே அவர் மரணத்துக்குப் பின் மத்திய அதிகாரக் குழு எதுவும் இல்லை என்பதால் இருவகையான குழுக்கள் உருவாயின. ஒரு குழுவினர் ஸ்தவிரர் . மற்றோர் குழு மகா சங்கிகள். இந்த இரு குழுவும் காலப்போக்கில் பல சிறு குழுக்களாகச் சிதறுண்டன. ஸ்தவிரர் பிரிவில் தோன்றிய ‘தெரவாத’த்தைத் தவிர மற்றவை அழிந்தன. அழிந்த இந்த இயக்கங்கள் தங்கள் மரபை விட்டுச்சென்றன. இந்தப் புதிய இயக்கம் ‘மகாயனம்’ என அழைக்கப்பட்டது. மகாயனம் என்றால் மாபெரும் வாகனம் என்று பொருள்.

Continue reading