சிகண்டி

சிகண்டி: கித்தாகாட்டு மண்ணின் இருளுலகம் – துரை.அறிவழகன்

“தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தின் 3-ஆம் தேதி. மலேசிய வாழ்கை முடிவடைந்து ‘கிரீன் ப்ளாண்டேசன் சர்வீஷ்” விசாவில் தாயகம் திரும்பியது, 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இக்காலகட்டத்தில், மலேசிய இலக்கிய உலகுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அங்கிருந்த கடைசி ஆண்டுககளில்தான். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர் கோணங்கி அவர்கள். மலேசியாவின் சுண்ணாம்பு மலையை திருடிப்போக வந்திருந்தார் கோணங்கி. ம.நவீன் அப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.

Continue reading

இருளெழுத்து எனும் கலை – சிகண்டியை முன்வைத்து சுனில் கிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு ம. நவீன் தனது முதல் நாவலான ‘பேய்ச்சியை’ வெளியிட்டார். மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் நிகழ்ந்த சாராய சாவு எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்ட நாவல். முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வு தொடங்கி தோட்ட வாழ்வு வரை முன்னும் பின்னுமாக ஊடாடும் கதை. பேய்ச்சியின் மையம் என்பது தாய்மைதான். ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதையில் வரும் பகவதி, மூத்தம்மை இளையம்மை என இரண்டு வடிவில் இருப்பாள். பிள்ளையை இடுப்பில் சுமந்தவளாகவும் வாயில் கவ்வி கடித்து உண்பவளாகவும் காட்சியளிப்பாள். பேய்ச்சி நாவலும் இதையொட்டி தாய்மையின் இரு வடிவங்களையம் காட்டுகிறது. ஒரே அன்னையே கௌரியாகவும் காளியாகவும் ஆகிறாள். நவீனின் இரண்டாவது நாவலான சிகண்டியின் மைய பேசுபொருளும் தாய்மைதான். தாய்மையை பால் அடையாளத்திலிருந்து துண்டிக்கிறது சிகண்டி. தாய்மையையும் பெண்மையையும் எய்தத்தக்க ஒரு நிலையாக முன்வைக்கிறது. இந்த தரிசனம் தமிழுக்கு புதிதல்ல. சு. வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ சட்டென நினைவுக்கு வருகிறது.

Continue reading

இருள்சூழ் உலகில் தேவஒளியின் நடனம் – அழகுநிலா

நம் இந்திய மனங்களுக்கு மகாபாரதம் வழியாக அறிமுகமாகும் சிகண்டி என்ற கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பீஷ்மர் என்ற ஆளுமையால் மட்டுமே நிலைகொள்கிறது. இந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டால் நாம் அருவருப்புடன் முகம் சுளிக்கும் அல்லது அவமானப்படுத்தும் ஒருவனாகத்தான் சிகண்டிஇருந்திருப்பான். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ வாசிக்கும் வரை நானும் தினசரி வாழ்வில் சிகண்டிகளைச் சந்திக்க நேர்ந்தால் ஒருவித அசூயையுடன் ஒதுங்கிச் சென்றவள்தான். ஆனால் வாசித்த பிறகு, தனது அன்னைக்காக ஒற்றை இலக்குடன் வாழ்ந்து வென்றவள் அவளென அறிந்தபோது மகாபாரத சிகண்டி மீதும் தனது பால் அடையாளத்தை சமூகத்தில் நிலை நிறுத்துவதைஒற்றை இலக்காகக் கொண்டு போராடும் மற்ற சிகண்டிகள் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.

Continue reading

மலேசியத் தமிழ் வாழ்க்கையின் அடர்வண்ணங்கள் – சரவணன் மாணிக்கவாசகம்

ம.நவீன் மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவருடைய முதல் நாவலான பேய்ச்சியைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே மலேசியப் பின்னணியில் நடைபெறும் கதை. அதைப் போலவே இந்த நாவலும் கோவிலிலேயே ஆரம்பிக்கிறது.

தீபன் என்னும் சிறுவனின், பதின்ம வயதில் இருந்து இருபது வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராமல் ஒரு நிகழ்வினால் திடீரென ஆண்மைக்குறைவு நோய்க்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்க சகலவிதமான முயற்சிகளையும் எடுக்கின்றான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையில் இருந்து பாலியல் உறவுகள் அபரிதமாகக் கிடைக்கும் இடத்திற்குப் போய் சேர்ந்தது, அவனது ஆண்மைக்குறைவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. பாட்டனைப் போலவே வயதுக்கு மிஞ்சி ஆஜானுபாகுவான தோற்றத்தில், எல்லோரையும் பயமுறுத்தும் வேலையில் இருப்பவனுக்கு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத குறைபாடு.

Continue reading

சிகண்டி- ஒரு தேவதையின் கதை

ம. நவீனின் சிகண்டி நாவல் திருநங்கையரைப் பற்றிய முதன்மையான நாவல் என்றும் மலேசியாவின் இருண்ட நிழல் உலகத்தைப் பற்றி நுட்பமாக விவரிக்கும் நாவலென்றும்  அறிமுகக் கூட்டங்களில் கூறப்படுகிறது. ஆனால் இந்நாவல் ஒரு தேவதையின் கதை என எனக்குத் தோன்றுகிறது.

Continue reading

சிகண்டி: ஈரத்தீயில் நனையும் மனிதர்கள் – மணிமாறன்

ம.நவீனின் ‘பேய்ச்சி’ மற்றும் ‘சிகண்டி’ நாவல்களை வாங்கி படித்துள்ளேன். வல்லினம் இணையப்பக்கத்தையும் அதன் இலக்கியச் சேவைகளையும் ஓரளவு அறிவேன். ‘திறந்தே கிடக்கும் டைரி’ படித்த காலத்திலேயே ஆசிரியர் எழுத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்றைய எனது வாழ்வியல் சூழல்களால் வல்லினத்தோடும் ம.நவீனோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அது வல்லினத்தின் ஆரம்பகாலம் என்றே நினைக்கின்றேன். எப்போதாவது எது மூலமாகவோ, யார் மூலமாகவோ வல்லினச் செய்திகள் கண்ணில் காதில் படும். அவ்வகையில் எனக்கு வல்லினத்தை அறிமுகம் செய்த தோழி கலைமணிக்கு நன்றிகள்.

Continue reading

சிகண்டி: இரு வேறு துருவங்களையும் இணைத்துச் செல்லும் வாழ்க்கை – அருணா காத்தவராயன்

வாசிப்பின்போது எனக்குள் எந்த தேடலும் இல்லை, கேள்விகளும் இல்லை. விடைத் தெரியாத பல புதிர்களுக்குள் நடுவே நம் மனித வாழ்க்கை அதன் போக்கில் நகர்வது போல, நான் அறிந்திராத ஒரு புதுமையான வாழ்க்கைக்குள் அடி எடுத்துவைத்த உணர்வோடு சிகண்டி முழுதும் பயணித்தேன். இது சரி அது தவறு என அசலிப்பார்க்கும் அவசியம் எனக்குள் ஏற்படவில்லை. ஒவ்வொரு பக்கமும் வெவ்வெறு விடியலோடு பிரகாசிக்க,மனமோ கயிறறுந்த காற்றாடியாக பறந்தது.

Continue reading

என் வாசிப்பில் சிகண்டி – புஷ்பவள்ளி

சிகண்டி நாவலை வாசிக்கத் தொடங்கியபோது ம. நவீன் எழுதிய பல சிறுகதைகள் என் கண்முன் வந்தன. தொடர்ந்து அந்நாவலை வாசித்தபோது அறிந்த அக்கதைகள் வழி அறியாத வேறொரு அத்தியாயத்திற்குச் செல்வது போல் ஓர் உள்உணர்வு.

Continue reading

சிகண்டி: மன்னிப்பதற்காக படைக்கப்பட்டவள் அன்னை – மு. சுப்புலட்சுமி

இன்றும் நம்மிடையே பேசப்படாத அல்லது தவிர்க்கப்படும் திருநங்கைகளைக் கதைமாந்தராகக் கொண்டிருக்கும் சிகண்டி, இருளுக்குள் அடைபட்டு வாழும் அவர்களின் அவலங்களையும் அவஸ்தைகளயும் பேசுகிறது. இவ்வளவு விரிவாக இந்த வாழ்க்கை வேறெந்த மலேசிய தமிழ் நாவலிலும் பதிவாகயிருக்கின்றதாவென்று தெரியவில்லை.

Continue reading

சிகண்டி: இருமையின் கூண்டை கடக்கும் சிறகுகள் – விக்னேஷ் ஹரிஹரன்

மனிதச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படிநிலை மனிதன் உலகை இருமைகளாக புரிந்துகொள்ளத் தொடங்கியதே என்று நினைக்கிறேன். நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் மிக நிச்சயமாக எந்த மனிதனையும் அச்சுறுத்தக்கூடியதே. அந்த பிரம்மாண்டத்தை ஏதோ ஒரு வகையில் தன் எல்லைகளுக்குள் சுருக்கி மட்டுமே மனிதனால் புரிந்துகொள்ள முடியும். அப்படிச் சுருக்கமுடியாமல் போனால் அந்த பிரம்மாண்டத்தைப் பற்றிய பிரஞையே நம் சிந்தையை அழித்துவிடும். அந்த நிலைக்கு நாம் சூட்டும் பெயர் ஞானமா, மனப்பிறழ்வா என்பது நம் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அது நம் உலகியல் வாழ்வுக்கு ஏற்ற நிலை அல்ல என்பதை மட்டும் நிச்சயமாக கூறமுடியும். இப்படியான பிரம்மாண்டத்தை மனிதனின் எல்லைகளுக்குள் சுருக்கும் மிகச் சிறந்த கருவியாக இருமைகள் இருக்கின்றன. இருளென்றும் ஒளியென்றும் தனியே அறிந்தவற்றை இருமைகளாக தொகுப்பதன் வழியே மனிதர்கள் தங்கள் சிந்தனையின் புதிய சாத்தியங்களை கண்டடைந்தனர். அந்த இருமை விளையாட்டிலிருந்தே இறைவனும் சாத்தானும், நன்மையையும் தீமையும், ஆணும் பெண்ணும், தானும் பிறரும், தோன்றினர். மனிதச் சிந்தனையின் அடிப்படையாக அமைந்த இந்த இருமை தர்க்கத்தின் காரணமாகவே நாம் இருமைகளின் கட்டுக்குள் வராதவற்றை அஞ்சுகிறோம்.

Continue reading