
‘முக்கோண கதைகள்’ நிகழ்ச்சிக்கு முதல் நாளே (31.5.2025) அ. பாண்டியன், தேவகுமார் ஆகியோர் கோலாலம்பூர் வந்து சேர்ந்திருந்தனர். YMCA கட்டடத்தில் தங்கும் வசதியும் இருப்பதால் அவர்களுக்கான அறையை அங்கேயே பதிவு செய்திருந்தேன். முதல் நாள் இரவே மண்டபத்தைத் தயார் செய்யத் திட்டமிட்டிருந்தோம். பதாகை பொருத்துவது, நாற்காலிகளை அடுக்குவது எனச் சில பணிகளை முன்னமே செய்து வைப்பது…