Author: ம.நவீன்

சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா குறித்து நான் இதுவரை எனது எந்தச் சிறுகதையிலும் நாவலிலும் குறிப்பிட்டதில்லை. அவ்வளவு ஏன்… அனுபவங்கள் குறித்து மாங்கு மாங்கென்று எழுதிய எந்தக் கட்டுரையிலும் கூட அவள் தொலைதூரமாய் நிற்கும் மங்கிய பாத்திரமாகக் கூட வெளிபட்டதில்லை. சண்முகப்பிரியாவை நான் எப்படி அவ்வளவு எளிதாக மறந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது. என் மூன்று வயது மகளை…

சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது.…

ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை…

Wiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்

விக்கி இம்பேக்ட் ஆய்வு முடிவுகள் மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில்  34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக்…

அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி

2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.…

வல்லினம் & GTLF: மூன்று நாள் இலக்கியப் பெருவிழா

நான் கடைசி நேரத்து பணிக்குவியல்களை விரும்பாதவன். அரக்கபரக்க பூர்த்தியாகும் செயல்பாடுகள், நேர்த்தியற்ற விளைபயன்களையே கொடுக்கும் என உறுதியாக நம்புபவன். இவ்வருட இலக்கிய விழா, பிரம்மாண்டமானது என்றும் அதை ஒட்டிய பணிகள் வலுவானவை என்பதையும் நான் அப்பேச்சு தொடங்கப்பட்ட காலத்திலேயே அறிவேன். எனவே, மே மாதமே அதன் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருந்தோம். என்னளவில் விழா என்பது…

வல்லினம் & GTLF இலக்கிய விழா சிறப்பு வருகையாளர்கள்

இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது. பி. கிருஷ்ணனின் வருகை அந்த…

தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.…

கனவுகள் குவியும் களம்

கடந்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் அனைத்துலக இலக்கிய சங்கமமான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (George Town Literary Festival) கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படும் இவ்விழா குறித்துத் தமிழ்ச் சூழலில் அறிமுகம் குறைவுதான். அதற்குத் தமிழ்ச்…

சு. கமலா சிறுகதைகள்: விதைகளை மட்டுமே உற்பத்திச் செய்யும் பூ மரங்கள்

மலேசியச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து விமர்சனக் கட்டுரைகள் எழுதும் முன், அக்கதைகள் குறித்த அபிப்பிராயங்கள் எதன் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன என்பதை விளக்க வேண்டியுள்ளது. இங்கு ரசனை விமர்சனத்திற்கான மரபு என ஒன்று வலுவாக உருவாகாத சூழலில் இவ்வகை விளக்கங்கள் அவசியமாகின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை கல்வியாளர்களின் விமர்சனங்கள் வழியாகவே இலக்கியத்தின் தரம் நெடுங்காலமாக அளவிடப்படுகிறது. நவீன இலக்கிய…

நாவல் முகாம்: ஒரு பதிவு

செப்டம்பர் 2020இல் நாவல் முகாமுடன் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ரஷ்ய இலக்கியங்கள் குறித்து உரையாடலாம் என்ற எண்ணம் இருந்ததால் நகர சூழலை விட்டு ஒதுங்கிய இடமாகத் தேடினோம். அது கனமான தலைப்பாக இருக்கும் என்பதால் நகர இரைச்சல் ஏற்றதல்ல என்பது அனுமானம். முகாமுக்காக நண்பர் கங்காதுரை கண்டடைந்த இடம்தான் தைப்பிங்…

வல்லினம் விருது விழா 2022: சில நினைவுகள்

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. அ. ரெங்கசாமிக்கு முதல் வல்லினம் விருது வழங்கப்பட்டதோடு வல்லினத்தின் முதல் ஆவணப்பட முயற்சியும் அவரது வாழ்வைப் பதிவு செய்யும் திட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. அவ்விருது விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகக் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை கலந்து கொண்டார். பின்னர், 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதின் வழி ‘வல்லினம் விருது’ தனக்கான…

ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள் கூட இல்லை என்றே…

ஒளியாலான கதைகள்

சித்துராஜ் பொன்ராஜ் என்ற எழுத்தாளரை நான் அறிந்துகொண்டது 2016இல். சிங்கப்பூர் இலக்கியங்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொடர் விமர்சனக் கட்டுரைகளின் வழி சித்துராஜின் ‘மாறிலிகள்’ தொகுப்பு கவனம் பெற்றது. ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரை முக்கியமானது. தொகுப்பில் இருந்த சிறுகதைகளை ஒட்டிய ரசனை விமர்சனம் அன்றி, சித்துராஜ் என்கிற எழுத்தாளரின் வருகை சிங்கப்பூர் இலக்கியத்தில் எவ்வகையில்…

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது…