Author: அரவின் குமார்

தாவாய்: இயற்கையுடனான ஒத்திசைவு

இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த…

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம்

நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய,…

தருக்கத்தால் நிலைக்கொள்ளும் படைப்புலகம்

அ. பாண்டியனின் இலக்கியப் பங்களிப்பைப் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என மூன்று முக்கியமான புலத்திலிருந்து அணுகலாம். அவரது புனைவுகள் வரலாற்றின் நுணுக்கமான இடைவெளிகளை நிரப்புவதாலும்; அ-புனைவுகள் கொண்டுள்ள சீரான தருக்கப்பார்வையாலும் வலுவான தனித்த இடங்களை நிறுவிக்கொண்டவை. ஒரு குறுநாவல் சில சிறுகதைகதைகள் எழுதியுள்ள அ. பாண்டியனின் கட்டுரைகள் பலவும் மலேசிய…

நட்சத்திரவாசிகள்: நுண் அதிகார மையங்கள்

வரலாறு முழுவதும் மனிதர்கள் தங்கள் இயல்பைக் கல்வி, தொழில், அரசியல் போன்ற அமைப்புகளின் ஒழுங்குக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்திருக்கின்றது. அவ்வாறு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்குள் பழகும்போது மனித இயல்புகள் அடையும் மாற்றங்களை இலக்கியங்கள் நிகர் வாழ்க்கையனுபவமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் நாவலும் ஒருவகையில் தொழில் சார்ந்த அமைப்பின்…

தைலம்

ஹசான் வந்த சில வாரத்தில் “அடுத்த ஆளுக்குத் தயாராயிட்டா போலிருக்கு… இவன வச்சு இங்கயே ஐ.சி எடுக்கலாம்னு நெனக்குறா… இவுங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டோம்…’’ என ஜேக் இரண்டு மூன்று கடைக்காரப் பையன்களிடம் பேசத் தொடங்கியிருந்தார். “அது அவளோட ரெசெக்கி பாக்சிக்… அவளுக்குன்னு இருந்தா நிச்சயம் கெடக்கும். நமக்கு நம்மோட” என ஜேக்கின் அருகில் வியாபாரம்…

சிகண்டி : திட்டமிடப்பட்ட விதியின் கதை

இலக்கியத்திலும் திரைப்படத்திலும் பால் புதுமையினர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடிகள் என மையச் சமூகத்துக்கு வெளியே அதிகமும் அறியப்படாமல் இருக்கும் விளிம்பு நிலையினரை முன்வைத்துப் புனையப்படும் படைப்புகள், தாம் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்காகவே சிறந்த படைப்பு எனும் தகுதியைப் பெறுவதைக் காண முடிகிறது. ஆனால், படைப்பின் கலை ரீதியிலான வெற்றி என்பது அந்தப் பிரதி முன்வைக்கும் களத்தையும்…

யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான்.  “அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன். “அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே…

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல: வாசிப்பனுபவம்

தமிழில் உரைநடை இலக்கியத்தின் தொடக்கம் முதலே நீதிகளை உணர்த்துவதற்காக அளவில் சிறிதாக எழுதப்படும் கதைகளான நீதிகதைகள், ஈசாப் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவை இருந்து வருகின்றன. அதைப் போன்று, சமூக ஊடகத்தளங்களான முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் சிறிய பதிவுகளாகப் பதிவிடப்படும் அனுபவப்பதிவுகள், கதைகளும் அளவில் சிறியவையே. இந்த இரண்டுமே, தற்போது எழுதப்பட்டுவரும் குறுங்கதைகளில் அதிகமான…

அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம்…

வாடாமல் வாழும் வாழைமரங்கள்

சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார்.…

ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…

எலி

வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமல் என்னையும் எதிரிலிருந்த மணி அண்ணனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெலிசியா. அவள் கண்களின் கீழே விழுந்திருந்த அழுத்தமான கரிய ரேகைகள் கணினித் திரையில் விழுந்த கோடுகளாகத் தெரிந்தன. அறையில் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று சாமிபடங்கள் எண்ணெய் படிந்ததைப்போல இருந்தன. சாம்பிராணி புகையின் நெடி காட்டமாக இருந்தது. காவி…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…

சிண்டாய்

“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது,  கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது  எனக்கு ஒருவித எரிச்சலாக…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…