Category: பதிவு

வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்

வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர…

இமையத்துடன் இரண்டு மணி நேரம்

அண்மையில் இமையத்துடன் இரண்டு மணி நேரம் எனும் நிகழ்ச்சி ‘வல்லினம்’ மற்றும் ‘தமிழாசியா’ இணைவில் நடைபெற்றது. முதல் அங்கமாக இமையம் அவர்களின் படைப்பு குறித்த நான்கு உரைகள் இடம் பெற்றன. அதன் இணைப்பு இமையம் படைப்புகள் தொடர்ந்து இமையம் அவர்களிடம் உரை இடம்பெற்றது. அதன் இணைப்பு இமையம் உரை

நவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு

“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச்…

நாவல் என்பது… முகாம் அனுபவம்

வல்லினம் நடத்தியுள்ள இரு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளேன். அவை யாவும் ஒருநாள் நிகழ்வாகும். அவற்றில் ஏற்படாத எதிர்பார்ப்பினை இம்முறை கூலிம் கெடாவில் நடந்த மூன்று நாள் நவீன இலக்கிய முகாமானது என்னுள் ஏற்படுத்தியிருந்தது. வல்லினம் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இலக்கியம் பற்றிய தெளிவற்ற பார்வையைக் கொண்ட  எனக்கு, இலக்கியம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொடுத்து…

சு. வேணுகோபாலின் நாட்டார் வழக்காற்றியல் ஒருபார்வை

21.12.2019 அன்று சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்றாம் அமர்வாக நாட்டார் வழக்காற்றியல் பற்றி சு. வேணுகோபால் ஒரு சிறந்த தெளிவுரை வழங்கினார். சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் உரை ஆரம்பித்தது. எழுத்தாளர் சு. வேணுகோபால் அளித்த கடந்த உரைகள் அனைத்தும் கேட்கும் போதே நம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் உராய்ந்து விட்டு செல்வதாகவே…

இன்றைய உலக இலக்கியம்: சில புரிதல்கள்

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறுகதைப் பட்டறையே நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குப்பின் வல்லினக் குழு நடத்திய எந்தக் கலந்துரையாடலையும், நிகழ்ச்சியையும் தவர விட்டதில்லை. அப்படிதான் இந்த முகாமிலும் வல்லினத்துடனான எனது இலக்கியப் பயணம் நான்காவது முறையாகத் தொடர்ந்தது.  சிறுகதைப் பட்டறையில் என்னை ஓர்இலக்கிய வாசகியாக உருவகித்துக் கொண்ட நான் இலக்கியத்தின்…

மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை

வல்லின இலக்கியக் குழுவும் கூலிம் நவீன இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நவீன இலக்கிய முகாம்’ பலவகையிலும் பெருந்திறப்பாக இருக்கும் என்றே ஆவலோடு கலந்துகொண்டேன். நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோரது படைப்புகள் முன்னமே சிறிது வாசித்திருப்பதால், அவர்களை நேரடியாகக் காணும் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருசேரத் தொற்றியிருந்தது. முகாம் நடந்த மூன்று…

உரைவழி உணர்ந்த உண்மை

ம.நவீன் நவீன இலக்கிய முகாமில் இடம்பெற்ற  ஓர் உரைக்கு என்னுடைய புரிதலை எழுதி தர முடியுமா என வினவினார். நான் மறுத்தேன். திரும்பவும் இரண்டாவது முறையாக மதிய அமர்வுக்குக் கேட்கும் பொழுது, மறுக்க முடியாமல் அரை மனத்தோடு சம்மதித்தேன். சம்மதம் தெரிவிக்கும் பொழுது என்ன தலைப்பு? யார் பேச்சாளர்? என எவ்விவரமும் அறியவில்லை. மதிய உணவு…

சுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்

வல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019  சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள்…

சமகால சிறுகதைகளின் செல்நெறிகள் : ஓர் அனுபவம்

கடந்த தடவை வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது, அவ்வறையின் ஒரு பகுதியில் விற்பனைக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் சிலவற்றை வாங்கியும் கொண்டேன். வாங்கிய புத்தகங்களில் நான் விரும்பி வாசித்து என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தியபுத்தகமாக குறிப்பிட விரும்புவது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பாகிய ‘அம்பு படுக்கை’ எனும்…

சமகால சிறுகதைகளின் செல்நெறிகள் (வீடியோ)

  சமகால சிறுகதைகளின் செல்நெறிகள்             சமகால சிறுகதையின் செல்நெறிகள் (கேள்வி – பதில்)             சுனில் கிருஷ்ணனின் புனைவுலகம்

வல்லினத்தின் நாவல் இலக்கிய நிகழ்ச்சி அனுபவம்

வல்லினத்தை முகநூல் வாயிலாகவே அறிவேன். அதன் இணைய இதழ்களை தவறாது வாசிப்பதுடன் வல்லினத்தின் தரம் வாய்ந்த இலக்கிய செயல்பாடுகளினாலும் நேர்மையான விமர்சன தன்மையினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவள் நான். வல்லினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவிற்கு பலமுறை அழைப்பு வந்தும் அலுவல் காரணமாக செல்ல இயலவில்லை. ஆனால் இம்முறை வல்லினத்தின் “நாவல் இலக்கியம் & யாழ்…

வல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட கலை இலக்கிய விழா 2018 ஆம் ஆண்டில் நிறைவு விழாவாக அமையும் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். பத்தாவது கலை இலக்கிய விழாவுக்கான திட்டம் கடந்தாண்டே வரையறுக்கப்பட்டது. அன்றைய நாளிலிருந்து கலை இலக்கிய விழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் 20,000 வெள்ளி செலவை உள்ளடக்கிய கலை இலக்கிய விழா ஆண்டாண்டாக…