Category: பதிவு

இலக்கியத்தில் அரசியல்

மலேசிய சோசியலிஸ கட்சியுடன் இணைந்து வல்லினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஈப்போவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா ஆகியோர் ‘இலக்கியத்தில் அரசியல்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் நாகேந்திரன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் மு.சரஸ்வதி…

பங்கோரில் வல்லினம் குழு: ஓர் அனுபவப் பகிர்வு

1.5.2015 (வெள்ளி) பங்கோர் தீவில் வல்லின இலக்கியச் சந்திப்புக்குக் கங்காதுரைதான் முழு பொறுப்பு ஏற்றிருந்தார். உணவு மற்றும் தங்குமிடம் என நேர்த்தியான ஏற்பாடுகள். தொழிலாளர் தினத்துடன்  விசாக தின விடுமுறையும் இணைந்திருந்ததாலும் தலைநகரில் அன்று ஜி.எஸ்.தி வரிக்கு எதிராக ஆங்காங்கு எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்ததாலும் மூன்று மணி நேர பயணம் சாலை நெரிசலால் எட்டு மணியாக…

குறையொன்றுமில்லை: நூல் வெளியீடு

கடந்த 15/03/2015 அன்று, சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலான ‘குறையொன்றுமில்லை’ என்ற நூலை வல்லினம் வெளியீடு செய்தது. பிரம்மானந்தாவின் நூலை வல்லினம் வெளியிடுகிறது என்றவுடன் ஏற்பட்ட பல்வேறு தரப்பட்ட குழப்பங்களுக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்த எழுத்தாளர் தயாஜி பதில் கூறினார். வல்லினம் எந்த இசங்களையும் சார்ந்து இயங்கவில்லை என்றும் அது முற்றிலும்…

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு கோலாகலமாக தொடங்கியது என்று சொல்வதற்கு எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. காரணம், ‘வரலாற்றைத் தேடி’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தழுவிய நிலையில் ஒரு மாபெரும்  மாநாடு நடக்கிறது என்ற காரணத்தினால், அதன் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வுக்கு மக்கள் தொண்டாளரான மதிமுக தலைவர் வைகோ கலந்து கொள்கிறார்…

கலை இலக்கிய விழா சிறப்பிதழ்

This slideshow requires JavaScript.


வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கிய விழா 2.11.2014ல் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை அரங்கத்தினருக்குப் புரிய வைத்தது. அடுத்ததாக ‘வல்லினம் விருது’ பெறப்போகும் எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் வாழ்வைச் சொல்லும் படக்காட்சியும் திரையில் ஒளிபரப்பானது. இவ்விரு படத்தொகுப்பையும் எழுத்தாளர் நவீன் செல்வங்கலை அவர்கள் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 – 2014: வல்லினம் நிகழ்வுகள் ஒரு பார்வை

அ. ரெங்கசாமி காணொளி

நிகழ்வை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் வல்லினம் மற்றும் பறை இதழ் ஆசிரியர் ம. நவீன் உரையாற்றினார். வல்லினம் குறித்த முன்முடிவுகளை அவர் தனது உரையில் முற்றாக மறுத்தார். வல்லினம் மொழியைக் காப்பதற்காகவோ, பெரியாரியத்தை வளர்ப்பதற்காகவோ, மார்க்ஸியத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமல்ல எனக்கூறிய அவர் சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கவே வல்லினம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். சிந்திப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது எனவும், அதை எவ்வாறு கடந்து செல்வது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

ம. நவீன் உரை

அ. ரெங்கசாமியின் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ நூலை மா. சண்முகசிவா வெளியீடு செய்தார். இயக்குனர் லீனா மணிமேகலை முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீடு

தனது உரையில் ரெங்கசாமியின் அந்நூல் குறித்து சண்முகசிவா விரிவாகப் பேசினார். ஒரு சுயவரலாறு நூல் எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் உரை இருந்தது. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் மா. சண்முகசிவா அ. ரெங்கசாமியின் சுயவரலாறு நூல் குறித்து பேசினார்.

மா. சண்முகசிவா உரை

அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து பேச கெடாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அ. ரெங்கசாமிக்கு தமது தியான மன்றம் மூலம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ எனும் விருது கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் அவரது இதர நூல்களை வாசித்தவர் என்ற முறையிலும் அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து விளக்கினார். இதற்கு முந்தைய மூத்த தலைமுறையின் தியாகத்தில் இருந்தே இன்றைய தலைமுறை மேலோங்கி செல்கிறது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.

சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி உரை

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அ. ரெங்கசாமிக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வழக்கறிஞர் சி. பசுபதி அவர்கள் அ. ரெங்கசாமிக்கு விருது கோப்பை, விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காலோசை, வெளியிடப்பட்ட நூலுக்கான ராயல்டி தொகை இரண்டாயிரம் என வழங்கி சிறப்பு செய்தார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் சி.பசுபதி, மாற்று சிந்தனைகள் சமூகத்துக்கு உயரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என கூறினார். அதோடு, வல்லினம் ஓர் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக மாறுவதன் வழி நாடு முழுக்கவும் அதன் தீவிரமான மாற்று சிந்தனை பரவும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வழக்கறிஞர் சி. பசுபதி உரை

முதல் அங்கத்தின் நிறைவாக, விருதைப் பெற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமி பேசினார். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வல்லினம் தன்னை அடையாளம் கண்டு விருது கொடுத்ததை மகிழ்ச்சியான தருணமாகப் பகிர்ந்துகொண்டார். தமிழர் எனும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அ. ரெங்கசாமி உரை

முதல் அங்கம் ஏறக்குறைய நிறைவு பெற இரண்டாம் அங்கம் தொடங்கியது.

எழுத்தாளர் கே.பாலமுருகன் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் கவிதை, திரைப்படம் என விரிவாக தனது ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்தார்.

கே. பாலமுருகன் உரை

அதன் பின்னர் இரண்டாவது அங்கத்தை கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை வழி நடத்தினார். முதலில் அவரது ஆவணப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. தனது திரைப்பட முயற்சி குறித்து சுருக்கமாகப் பேசியவர், அவையினரிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். திரைப்படம், சமூகம், அரசியல், ஈழம் என அவர் பதில்கள் விரிவாகவும் ஆழமாகவும் இருந்தன.

லீனா மணிமேகலை உரை & கலந்துரையாடல்

மாலை 5.30க்கு அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


வல்லினம் கலை, இலக்கிய விழா 6 புகைப்பட தொகுப்பு

செலாஞ்சார் அம்பாட் நாவல் அறிமுக நிகழ்வும் வெளியீடும்

வரலாறு தொடர்பான செய்திகளைப் பதிவு செய்தல் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களின் வரலாறு தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி வைத்தல் என்பது பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஒரு நாட்டினுடைய வரலாறுகள் பொதுவாகவே அதிகார வர்கத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பவையாகவும் அவர்களைச் சார்ந்து ஆவனப்படுத்தப்படுபவையாகவுமே இருக்கும். அது…

வல்லினத்தின் குறும்படப் பட்டறை

26.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர். நாட்டில் குறும்படப்போட்டிகள்  அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும், அதன் பயன்பாடு மட்டுமே கலையாவதில்லை என்பதை…

பறை 2 – வெளியீடும் அறிமுகமும்

கடந்த ஜீலை திங்கள் 6ஆம் நாள், பறை 2 பாயா பெசார் தியான மன்றத்தில் வெளியீடு கண்டது.  வாசகர்கள், எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் என இந்நிகழ்வில் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு நவீன இலக்கிய களத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வை தயாஜி சிறப்பாக வழிநடத்தினார். ‘பறை’ இதழ் உருவான விதத்தை அதன் ஆசிரியர்…

மலேசிய இலக்கியத்தின் மற்றுமொரு நகர்ச்சி: பறை

DSC_830616.3.2014ல் ‘புத்தகச் சிறகு’ நிறுவனம், இலக்கிய நிகழ்வொன்றை கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நிகழ்த்தியது. இணையம் எவ்வகையான விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை அறிய ‘புத்தகச் சிறகு’ இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் அனைத்தையும் இணையம் மூலமே செய்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை 100 பேரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய முகாம்

கடந்த 6 வருடங்களாகக் கூலிம் தியான ஆசிரமத்தில் இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கி வரும் நவீன இலக்கிய சிந்தனைக்களம் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் சாமியார்கள் மலேசியாவில் சமயம், வியாபாரம் என மட்டுமே சமூகத்தை முன்னெடுப்பார்கள். ஆனால் பிரம்மானந்த சரவஸ்வதி அவர்கள் மிக முக்கியமான படைப்பாளியாக இலக்கிய வாசிப்பு சார்ந்து சமூகத்தையும்…

2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு : ஒரு பதிவு

2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு ஜனவரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வல்லினம் குடும்பத்தைச் சேர்ந்த 30 நண்பர்கள் கலந்துகொண்டனர். முதல் அங்கமாக மலாய் இலக்கியம் குறித்துத் தினேசுவரி விவரித்தார். அ.பாண்டியனும் மலாய் இலக்கியம் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்தார். தமிழ் இலக்கியத்தில் உள்ள சுதந்திரங்களையும் மலாய் படைப்பாளிக்கு உள்ள கட்டுப்பாடுகளும் இவ்வமர்வில் விரிவாகப்பேசப்பட்டன. தொடர்ந்து கங்காதுரை சீன…

அய்யா வே. ஆனைமுத்துவுடன் கலந்துரையாடல்

அண்மையில் ஆனைமுத்து அவர்கள் மலேசியா வந்திருந்தார். மலேசிய தன்மான இயக்கமும் வல்லினமும் இணைந்து 19/1/2014 அன்று அவருடனான ஓர் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. கோலாலும்பூர், தான் ஶ்ரீ சோமாவில் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் வந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியைக் கொடுத்தது. மிகத் தெளிவாகப் பெரியார் குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும்…

‘குவர்னிகா’வும் ஷோபாசக்தியுடனான கலந்துரையாடலும்

முதன் முறையாக மலேசியப் படைப்பாளர்களில் எழுத்துகளும் 41-வது இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலான ‘குவர்னிகாவில்’ சேர்க்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. குவர்னிகா தொகுப்பில் இடம்பெற்ற மலேசிய படைப்புகள் குறித்து பேசவும் இங்கே குவர்னிகா குறித்த அறிமுகத்தை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். ‘புத்தகச்சிறகுகள்’ ஏற்பாட்டில் ‘வல்லினம்’ இணைய இதழ் ஆதரவில் ஷோபாசக்தியுடன் கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. சில நாட்களுக்கு…

வல்லினம் கலை இலக்கிய விழா 5

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) நிகழ்வை தொடர்ந்து செப்டம்பர்  15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் இம்முறை கலை இலக்கிய விழாவில் பங்கு கொண்டனர். நிகழ்வின் முதல் அங்கமாக நவீன்…

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) மற்றும் 5-வது கலை இலக்கிய விழாவிற்கான வேலைகள் இம்முறை கூடுதல் உற்சாகத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தந்திருந்தது. வல்லினம் குழுவின் மிக முக்கிய தொடர் நிகழ்வான இலக்கிய வகுப்போடு இம்முறை 5-வது கலை இலக்கிய விழாவும் சேர்ந்து கொண்டது கூடுதல் கனத்தைத் தந்திருந்தது. வழக்கம்போல பட்டறை…