
2008 ஆம் ஆண்டின் இறுதி அது. புருவங்களிலும் மீசையிலும் உரோமம் அடர்ந்திருந்த ஒருவர் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார். அவர் கையில் அவ்வருட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக நான் தயாரித்த பயிற்சி நூல் (module) இருந்தது. “இதைத் தயாரித்தவர் நீங்களா?” என்றார். “ஆம்” என்றேன். தன்னைத் தேர்வு வாரிய அதிகாரி என அறிமுகம் செய்து…






