அறியாமையின் அடையாளமாய் நிற்கும் சிலுவையை தன்னை நோக்கி தானே கேட்டுக்கொண்ட வார்த்தையை எழப்போகும் மூன்றாம் நாளை உணர்ந்தபடி உறைந்திருந்தது சிலுவையில் எஞ்சிய ரத்தம் பா.பூபதி
வல்லினத்தின் குறும்படப் பட்டறை
குறும்பட இயக்கமும் அதன் வெளிபாடும் சமகால சமுதாயத்திற்குத் தேவையெனக் கருதி வல்லினம் ‘குறும்பட பட்டறை’யை இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது. மலேசிய இயக்குனர்களோடு தமிழக இயக்குனர்களின் பங்களிப்பும் இந்தப் பட்டறையில் இணையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய இயக்குனர்கள் சஞ்சை குமார் பெருமாள், பிரகாஷ் ராஜாராம், செந்தில் குமரன் முனியாண்டி போன்றோரின் வழிக்காட்டலுடன் நடைபெறும் இப்பட்டறையின் இறுதியில்…
“நம்ம அடையாளங்கள தக்க வச்சிக்கிற முயற்சியா நம்ம திரைப்படங்கள் இருக்கனும்” – ஆர்.பிரகாஷ்
வல்லினத்தின் புதிய முயற்சிகள்…புதிய உற்சாகம்…

கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’…
வெண்ணிற இரவுகள் ஒரு பார்வை: மலேசியத் தமிழ் சினிமாச்சூழலின் புதிய துவக்கம்
கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார்…
ராமசாமி அவர்களுக்கு…

ராமசாமி அவர்களுக்கு,எனக்கு அனுப்பப்பட்ட டிராஃப்டில் உங்கள் பெயர்களைக் காணவில்லை. அது தவிர, ஈழத் தமிழர் தோழமைக் குரலில் பங்கு பெற்ற படைப்பாளிகள் பலர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு , இந்த அறிக்கை சுற்றில் விடப்பட்டிருப்பதாகவும், அதில் நாங்கள் கையழுத்திடவில்லை என்றும் தெரிவித்திருந்ததால், அதை கருத்தில் எடுத்துக்கொண்டேன். இந்த காலகட்டத்தில், படப்பிடிப்பிற்காகவும், திரையிடலுக்காகவும் சுற்றுப்பயணத்தில் இருந்ததால்,…
தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்.

“அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..” -மலர்வதியின் முன்னுரையிலிருந்து மக்களின் மொழியில்…
சொற்களைக் கொல்லும் கலையானது…

யார் அந்த மாயா? ஏன் அவள் மட்டும் இந்த உலகின் ஒழுங்கை எந்த முன்னறிவிப்புமின்றி களைத்துப் போடுகிறாள்? அவளுக்கு மட்டும் உலகம் ஏன் எந்தக் கொள்கையும் எந்த இலட்சியங்களும் இல்லாத ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடுகின்றது? நவீனின் கவிதைகளில் வரும் ஒரு மாயாவாக மாறிவிடுவதைவிட இந்த உலகம் செய்த அனைத்துக் கவிதை கொலைகளையும் வேறெப்படியும் மறக்கவோ…
கே.பாலமுருகனின் ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ கவிதை நூலை முன்வைத்து…

இலக்கியம் என்பது பிற கலை வடிவங்களைப் போன்றே படைப்பாளியின் உள கொந்தளிப்பையும் அழகியல் ஈர்ப்பையும் சாரமாக கொண்ட வெளிப்பாடாகும். ஓவியம் சிற்பம் போன்ற கலைகளுக்கு நிறமும் வடிவமும் ஊடகமாக இருப்பது போல் இலக்கியத்தின் ஊடகம் மொழியே. அவ்வகையில் ஒரு மொழியின் உச்சபச்ச திறனையும் மேன்மையையும் கொண்டு செயல்படுவது கவிதைத் துறையே. கவிதையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும்…
கே.பாலமுருகன் கவிதை
தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் இதற்கு முன் இங்கே தூக்கிலிடப்பட்டவர்களின் கதைகள் இவை. குற்றங்களை விலைக்கு வாங்கத் தெரியாமல் தூக்கில் தொங்கியவர்களின் எளிய மக்களின் வசனங்கள் இவை. கயிற்றில் தொங்கியவனின் தடித்த நாக்கிலிருந்து வடியும் எச்சிலில் ஊறிக்கிடக்கின்றன வாழமுடியாத ஆயிரம் ஏக்கங்களின் வரைப்படங்கள். ஆண்டான் எத்தி உதைத்த விலை உயர்ந்த காலணிகளின் அச்சு கரையாத நாக்குகள்…
நவீன் மனோகரன் கவிதை
வெறி நாய்களுடன் விளையாடுதல் வெறி நாயுடன் விளையாட முடிவெடுத்தான் வாசகனின்றி திரிந்த ஒரு நகரத்து கவிஞன் வெறிநாய்கள் எதையாவது பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கும் இடபேதம் தெரியாமல் கால்தூக்கி நனைக்கும் நகரத்து இரைச்சல் எல்லாம் தனக்கான வசையென்று தறிகெட்டு ஓடும் தாய் மகள் தெரியாமல் கடிக்கும் கலவி கொள்ளும் வாசகர்களில்லாதவர்கள் வாழும் நகரத்தில்…
முன்னுரை : கே.பாலமுருகன் கவிதை நூலிலிருந்து…
என் கவிதைக்குள்ளிருந்து எனக்கும் அரசியலுக்குமான தொடர்பு என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அரசியல் உணர்வைத் தூண்டிவிடவே இந்தக் கவிதைகளைத் தொகுத்துள்ளேன். என் நோக்கம் மக்களின் சிந்தனையை அதிகார மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் ; ஓர் அரசியல் உரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றபடி கவிதைகள் என்பது அதற்கொரு சாக்குத்தான். குறிப்பிட்ட ஒரு…
முன்னுரை : வெறிநாய்கள் கவிதை தொகுப்பிலிருந்து…
காமம் செப்பாது கண்டது மொழிவோம் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு இது. எனது கவிதைகள் குறித்து ஒரு வரிகூட நான் பேசப்போவதில்லை. அதை வாசகர்கள்தான் பேச வேண்டும். ஆனால், ஓர் இதழாளனாக , கவிஞனாக நான் சந்திக்கும் பல்வேறு வாசகர்களின் வாசிப்பு மனநிலை குறித்தும் அதன் போதாமைகள் குறித்தும் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். ‘எனக்கு…
வெள்ளை வேன் வளர்ந்த கதை

லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. ‘வெள்ளை வேன் கதைகள்’ ஆவணப்படம் உருவான கதை இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத காதலும் கட்டற்ற தீவிரமும் கொண்ட ஒருவரால் மட்டுமே…
தமிழ் தேசியம். ஏன்? எப்படி?

உலக தமிழர் அரசியலோடும் பண்பாட்டு அசைவுகளோடும் அணுக்கமான தொடர்பு கொண்டிருக்கும் பலரின் சமகால சிந்தனை, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து விவாதித்து வருவதை அறியமுடிகிறது. இன்றைய நிலையில் தமிழ் தேசியம், தமிழ் ஆர்வளர்கள் என்று தங்களை முன்னிருத்தும் பலரின் பாடுபொருளாக இருப்பது கண்கூடு. தீவிர ஆதரவுக்கும் பலத்த எதிர்ப்புக்கும் நடுவில் சிக்கி மக்களின் கவனத்தை…
ISBN மற்றும் CIP மாற்றங்களும் தேவைகளும்

வியாபார தேவைக்கேற்பவும் நூல் வர்த்தகத் துறையின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் கடந்த நாற்பது ஆண்டுகளில் மட்டும் புத்தகங்களின் ‘title-page’- நூல் முகப்பு பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது நூல் முகப்பு பக்கத்தில் இடம்பெறும் ISBN (International Standard Book Numbering) எனும் சர்வதேச புத்தக தர எண் மற்றும்…
விண்மீன்களற்ற இரவு
மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை (மூலம் : ஏ. சமாட் சைட் | தமிழில் : சல்மா தினேசுவரி) அன்றைய இரவு, வானத்தில் விண்மீன்களே இல்லை. கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. தொட்டு வருடியும் மூர்க்கமாகவும் மோதிச் சென்ற காற்று நிச்சயம் கனத்த மழை பெய்யும் என்பதை அடையாளப்படுத்தியது. பகலின் வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. தகிக்கும் வெயிலால்…