பதிப்புரிமை: சில கேள்விகள் சில விளக்கங்கள்

Copyright – தமிழில் பதிப்புரிமை என்று அழைக்கப்படும் சொல் பரவலாக அனைவராலும் குறிப்பாக பதிப்புத்துறையை சார்ந்தவர்களால் அதிகம் உச்சரிக்கபடும் சொல்லாக இருக்கிறது. பெரும்பாலும் copyright தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அவ்வப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அரங்கிலும் நடந்த வண்ணமாகவே இருந்தாலும்கூட இது தொடர்பான புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக, பெரும்பான்மையானோர் பதிப்புரிமையை…

தாயகம் பெயர்தல் : வாழ்வும் வலியும்

(மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அதன் பதிவுகள்) 20,21,22 தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை   ‘இடப் பெயர்வு’ என்பது பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்த போதிலும்கூட அதில் பறவைகளுக்குச் சுதந்திரம் இருந்தது. ஏனெனில் வானம் பறவைகளுக்குப் பொதுவானதாக இருந்தது. ஆனால், நிலம் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கடல்…

கருவில் வளரும் அணு ஆயுதம்

மலேசிய மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் அனுவார் ரிட்வான் ( Anwar Ridhwan). 1949 ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இவர், 1970 களில் இருந்து சிறுகதை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறுகதை தவிர சில நாவல்கள், கட்டுரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நவீன மேடை நாடகங்களில் இவரது பணி…

யஸ்மின் அமாட் : அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

யஸ்மின் அமாட் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருந்து, அவர்களின் மனத்தில் வெறுப்பையும் அதே சமயம் புதிய இரசனையையும் கொண்டு சேர்த்த திரைப்பட இயக்குனர். ‘தீவிர மதச் சார்புடைய மக்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் மலேசிய மக்களின் மனத்தை ஆழமாகத் தொட்டவர்’ என ஸ்டார் நாளிதழ் ஒருமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் யஸ்மின் அமாட்டுக்கு…

கவிதையும் கவிதையல்லாததும் : அன்று போல் அன்று

தன்னைப் புரட்டிப் போட்ட வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்கு, அது தந்த இன்பத்தையும் வலியையும் சேர்த்தே அனுபவிப்பதற்குக் கவிஞனுக்கு இருக்கிற ஒரே வழி கவிதை எழுதுவது மட்டும்தான். அதன்வழிதான் அவன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். அதே வழியில்தான் அவன் மரணத்தை நோக்கியும் செல்கிறான். நாம் கடந்து வந்த வாழ்வில் கடந்து போன நிகழ்வுகள் ஏதோ ஒரு கணத்தில்…

பிடிக்கலைன்னா மூடிட்டு போங்க…

பார்த்து, படித்து பிடித்த புகைப்படங்களையும் கருத்துகளையும் முகநூலில் பகிர்வது வழக்கம். பலருக்கு இது பழக்கம். அப்படி பகிர்வது எல்லோருக்கும் பிடிக்கும் என சொல்வதற்கில்லை. பிடிக்காதவர்களைன் நாம் பொருட்படுத்துவதும் பொருட்படுத்தாமல் போவதும் அவர் செய்யும் பின்னூட்டத்தில்தான் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்திருந்தேன். ‘நீங்கள் யாரோடும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையென்றால்; நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று…

விரலிடுக்கில் சிக்கும் வார்த்தைகள் – அ.வெண்ணிலாவின் கவிதைகள்

எல்லைகளற்று வரைமுறைகளற்று நீண்டு விரிந்திருக்கும் சிந்தனையையும் மனதையும் போல் கவிதையும் தனது சிறகை எல்லைகளற்று விரித்தபடியே இருக்கிறது. தனக்கான வெளியை கவிதையே கட்டமைக்கிறது. அந்த வெளியைத் தகர்த்து புது புது வெளிகளையும் தொடர்ந்து கட்டமைக்கும் பணியையும் கவிதை செய்கின்றது. வெறும் அழகியலையும் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் மேல்பூச்சுகளோடு பேசி வந்த கவிதைகள் இன்று கட்டுகள் உடைத்து தன்மொழியில்…

போலி அறிவுவாதமும் மலேசிய கலை உலகமும்!

மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே  (Pseudo Intellectuals) உள்ளன.  இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது மிகக் கடினம். காரணம், அவர்கள் சமூகத்தால்…

சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’

1886 ஆம் ஆண்டு மேற்கத்திய மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனந்தி கோபால் ஜோஷி. மார்ச் 31ம் நாள் 1865ஆம் ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் சிறு பட்டணத்தில் பிறந்தவரான இவர், ஒன்பது வயதில் அஞ்சல் குமாஸ்தாவாக பணியாற்றிய கோபால் ஜோஷிக்கு மணமுடிக்கப்பட்டார். முற்போக்குவாதியான கோபால் ஜோஷி பெண் கல்வியை ஆதரிப்பவராக…

“தமிழ் எழுத்தாளர் சங்கம் தக்க விழிப்புணர்வை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை”- உதயசங்கர் எஸ்பி

utaya 03உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB)- மலேசிய தேசிய இலக்கிய வெளியிலும் தமிழ் இலக்கிய வெளியிலும் புகழ்பெற்ற பெயர். ‘அவ்லோங்’ தைப்பிங்கில் (Aulong,Taiping) பிறந்து வளர்ந்த இவர், தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைக்கும் இவர் ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.

ஆரம்பக் கல்வியை S.R.K Convent Aulongகிலும் இடைநிலைக் கல்வியை S.M.K Darul Ridwanனிலும் முடித்த இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். ஆரம்பப் பள்ளியிலேயே கதைகளை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களின் பக்கங்களை இவரின் எழுத்துக்கள் அலங்கரித்துள்ளது.

மண்டை ஓடி

சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு…

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை.

என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை.…

கொசு

நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக்…

லியோ டால்ஸ்டாயின் ‘Three Questions’

தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அநபாயன் என்ற மன்னனுக்கு மூன்று கேள்விகள் பிறந்தன. அவனது கேள்விகள்: உலகை விட பெரியது எது? கடலை விடப் பெரியது எது? மலையை விடப் பெரியது எது? அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளைக் காணமுடியாததால் ஓர் ஓலையில் எழுதி அதைத் தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி பதிலைத் தெரிவிக்கும்…

தொப்பையைக் குறைப்பது எப்படி?

தொப்பையை குறைப்பது பற்றி இணையத்தில் தேடும்போது இங்கே வந்திருக்கலாம். நானும் எவ்வளவோ செய்து பார்த்தாச்சி இது வேறயா என வாய்விட்டு பேசி, யாருக்கும் தெரியாமல் இதனை நீங்கள் படிக்கத்தொடங்களாம். ஒவ்வொரு மாதமும் இந்த பக்கத்தில் எந்த சர்ச்சயை கண்டுக்கொள்ளலாம் என இங்கு வந்திருக்கலாம். நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் பயற்சியோ, செய்துக்கொண்டிருக்கும் முயற்சியோ இத்தலைப்பில் ஒத்துப்போகிறதா என பார்க்க…

லூய் யோக் தோ சீனக்கவிதைகள்

தமிழில் : கி.இ.உதயகுமார் , பூங்குழலி வீரன் பிரியாவிடை ‘சி’ என் இருப்பு இங்குதான் என முடிவெடுத்திருக்கிறேன் நம்பிக்கைகள் மக்கிப்போகும் பொழுதுகளில் மீதி வாழ்வின் எதிர்ப்பார்ப்புகள் தகுதியற்றுப் போகின்றன… புலப்படாத ஏக்கங்களின் மையமிது “பார்… தூரங்கள் மெதுவாக மறைந்து போகின்றன…” ஆனால் இந்தக் கிரகத்தை விட்டுச்செல்ல அடம் பிடிக்கிறேன் படிப்பது, எழுதுவது, இசையமைப்பது, வரைவது, நேரத்துடன்…