மலேசியத் தமிழ் விக்கி : சில தெளிவுகள் ‘கட்டுரை எழுதுவதால் கற்பனையாற்றல் மழுங்கி விடுமா? படைப்பூக்கம் மங்கிவிடுமா?’ தமிழ் விக்கிக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் பரவலாக பேசப்பட்ட விவாதங்களில் ஒன்று இது. இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில்தான் மலேசியாவிலும் தமிழ் விக்கி அறிமுகம் கண்டது. ஏறக்குறைய இருநூறு கட்டுரைகள் பதிவேற்றம் கண்டு அதை விரிவான தளத்துக்கு அறிமுகம்…
வல்லினம் & GTLF இலக்கிய விழா காணொளிகள்
தமிழ் விக்கி அறிமுக விழா காணொளிகள் வரவேற்புரை ம.நவீன்தலைமை உரை அருண் மகிழ்நன் தமிழ் விக்கி கலந்துரையாடல் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை தமிழ் விக்கி பங்களிப்பாளர்களுக்கு நினைவு பரிசு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஹேம்லட் ரோமியோ ஜூலியட் ஒத்தெல்லோ வழக்கறிஞர் சி. பசுபதி உரை பி. கிருஷ்ணன் உரை நாடக இயக்குனர் விஸ்வநாதன் உரை பி. கிருஷ்ணன்…
GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்
Jeyamohan: The Free and Ferocious Elephant of Tamil Literature
The Parallel Journey of Malaysian and Singopore Tamil Literature
வல்லினம் & GTLF இலக்கிய விழா சிறப்பு வருகையாளர்கள்
இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது. பி. கிருஷ்ணனின் வருகை அந்த…
தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?
இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.…
தமிழ்மாறன்: ஆளுமைகளை உருவாக்கும் ஆசான்
(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை ) மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய…
கோ. சாமிநாதன்: தந்தையாகும் குரு
(கோ. சாமிநாதன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) கற்றலென்பது கற்றலால் மட்டுமே நிரம்பும் தருணம் அல்ல. கற்றலுக்கு அப்பால் அகம் சார்ந்த, உணர்வு சார்ந்த சூழலைக் கட்டியெழுப்பி அதனுடன் இயைந்து நீள்வது கற்றலின் ஆயுள் நீளம் என சாமிநாதன் அவர்களின் வகுப்புகளின் வழி…
முனைவர் முனீஸ்வரன் குமார்: மொழியியலை முன்னெடுக்கும் ஆளுமை
(முனைவர் முனீஸ்வரன் குமார் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) 2011-ஆம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வரும் முனைவர் முனீஸ்வரன் குமார் 1984-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில்…
முனைவர் கிங்ஸ்டன்: நாட்டுப்புற கலை, பண்பாட்டு அடையாளங்களைச் சேகரிக்கும் கல்வியாளர்
(முனைவர் கிங்ஸ்டன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) வாழ்க்கையில் சிலரை நாம் சந்திக்கும் தருணங்கள் நொடிப்பொழுதில் நடந்துவிடக்கூடியவை. எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகள் நமது வாழ்க்கைக்குச் செறிவான பாதை அமைக்குமென்றால் அவற்றைத் தரிசனங்கள் என்றே குறிப்பிடுதல் தகும். மலேசியத் தமிழ் நாட்டுப்புறவியல் ஆராயும் நோக்கத்தோடு…