சிங்கப்பூரில் பெண்கள் எழுதியுள்ள நாவல்கள் பக்கம் என் பார்வையை சற்றுத் திருப்பலாம் என்ற எண்ணம் எழுந்தபோது என் கைக்குக் கிடைத்தது திருமதி.நூர்ஜஹான் சுலைமான் எழுதியுள்ள ‘வேர்கள்’ என்ற நூலாகும். தங்கமீன் பதிப்பகத்தால் பதிக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்தக் குறுநாவல் இருபத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் முஸ்லீம்களின் புலம்பெயர்தல் தொடங்கிவிட்டது.…
பாதசாரியின் “மீனுக்குள் கடல்” தொகுதியை முன்வைத்து…
அவன் அவளை தன்னைக் காட்டிலும் அதிகமாய் நேசிக்கிறான். ஆனால் மற்றொருவன் மீதாக தனதன்பைப் பொழிபவளாய் இருக்கிறாள் அவள். எப்படியேனும் தனக்கானவளாய் அவளை மாற்றிட எதையும் செய்யத் தயாராயிருப்பவன் அத்தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். தன்னிலை மறந்து மனதின் மிருகம் விழித்துக் கொண்டதொரு சமயம் தடம் புரளும் அவள் வாழ்க்கை. வேறெங்கும் நகலவியலா சூழல். நம்பிக்கையின் அத்தனை சாத்தியங்களும்…
பாரியின் ‘சத்து ரிங்கிட்` :வறுமையின் குறியீடு
என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லாப் பின்னடைவுகளுக்கும் காரணமாக இருந்துவந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக்கல்வி பொருளாதாரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை…
உயிர்க்காடு – 2
வேறு வழியில்லை, தான் கிளம்பித்தான் ஆகவேண்டும்’ என்று முடிவுசெய்தவுடனே, மனதளவில், யு.எஸ்.எஸ் ட்ரூமேனை, அவனேகூடத் தேற்றிக்கொள்ள முடியாதிருந்தான். இந்தவாழ்க்கையை சில மாதங்களுக்காகவது வாழ்ந்துபார்க்க வேண்டும் என்றுதான் அங்கு வந்திருந்தான் அவன். அங்கு வந்து, மூன்று வாரங்களாகிவிட்டன. மூன்று வாரங்களுக்குள் நான்கு மூத்த மருத்துவர்களும் ஆறு பயிற்சிமருத்துவர்களும் எட்டு செவிலியர்களும் அவனைச் செய்யாத பரிசோதனை எல்லாம் செய்து…
நீயின்றி அமையாது உலகு -10
அன்று காலை அலுவலகத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அழகியொருத்தி வேலை கேட்டு வந்திருந்தாள். பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலை என்பதால் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சுற்றை முடிக்கும்போது அலுவலக வாசல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த யுவதியைப் பார்க்க நேர்ந்தது. யுவதியைக் கண்டதும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் போல ஏதோ ஒன்று காதில்…
நவீன் மனோகரன் கவிதைகள்
வீடு
செல்வசேகர். அவர் தந்த முகவரி அட்டையில் இந்தப் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. பெயரின் மேல் கருப்பு கோட் அணிந்தபடி புன்னகைக்கும் முகம், வெள்ளை அட்டையில் மேலும் கருப்பாக தெரிந்தது. முதுகுக்குப் பின்னால் பளபளக்கும் கட்டிடங்கள், அவர் செய்யும் தொழிலைத் தெளிவாக காட்ட. செல்வசேகர் முகவரி அட்டை ஏன் தந்தார் என பாலாவிற்கு புரியவில்லை. அவரின் கைபேசி எண்…
நாஞ்சில் நாடன் பதில்கள்
இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன? மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், சாதி அரசியல் நடத்தும் அரசியல்.…
சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் நூல்கள்
இனவரைவியல் நோக்கில் சிறுமலைப் பளியர்
இந்தியாவில் காணப்படும் பல்வேறு இனக்குழுக்களில், பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவுதான். தனித்த அடையாளங்களும், மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் குணமும் இப்பழங்குடியின மக்களுக்குண்டு. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும்பகுதி நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும், அண்மைக்காலம்வரை இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கல்விகற்றவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற…
உயிர்க்காடு
ரானே திகைத்தான். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. தலையை பெரிய உருளைக்குள்ளே விட்டு மாட்டிக்கொண்டது போல உடலும் மனமும் வலித்துக்கிடந்தன. இந்தநாள், நல்ல நாளாக விடியவில்லை. லேசாகத் தூறிக்கொண்டிருந்த வானம், மென்புழுக்கத்தை ஏற்றியதும் வியர்வையும் அதிகமாகியது. ‘எப்படி இதைச் சரிசெய்யப்போகிறோனோ’ என்று மிகவும் பதட்டமானான். மனதின் உள்ளுக்குள் ஒரு சுடுநீராவிக்குடிலுக்குள் அமர்ந்துள்ளது போலிருக்க, ’நான் யாருக்கும்…