செலாஞ்சார் அம்பாட் நாவல் அறிமுக நிகழ்வும் வெளியீடும்

வரலாறு தொடர்பான செய்திகளைப் பதிவு செய்தல் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைக் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்களின் வரலாறு தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்தி வைத்தல் என்பது பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஒரு நாட்டினுடைய வரலாறுகள் பொதுவாகவே அதிகார வர்கத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பவையாகவும் அவர்களைச் சார்ந்து ஆவனப்படுத்தப்படுபவையாகவுமே இருக்கும். அது…

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

“கண்ணகியைப் பத்தினிக்கடவுளாக மாற்றுவது என்பது ஒரு செயல் திட்டம்”

கடந்த மாதத் தொடர்ச்சி… சினிமா மக்கள் மத்தியில் செய்தியை கொண்டுபோய் சேர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமாக இருக்கும் போது 100 பேர் பார்க்கக்கூடிய நாடகத்தின் தேவை என்னவாக இருக்கும் என்ற கேள்வி பரவலாக உள்ளதே. பிரளயன்: சினிமா ஒரு தொழில்நுட்ப ஊடகம். ஆகவே சினிமாவையும் நாடகத்தையும் ஒப்பிடமுடியாது. புகைப்படம் வந்த பிறகு எதற்கு ஓவியம், என்று…

Plagiarism: அறிவுத் திருட்டின் சில மேற்கோள்கள்

அறிவுத் திருட்டு (plagiarism) எனும் சொல் எழுத்துத் துறை சார்ந்த திருட்டுகளை சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இவ்வாறு சொன்னவுடன் எழுத்துக்களைத் திருட முடியுமா என்ற கேள்வி எழலாம். எழுத்து வடிவம்பெறும் ஒவ்வொன்றும் ஒருவரின் அனுபவம், கற்றல் பேறு, சிந்தனையாற்றல் ஆகியவற்றின் வழியாகத் தோன்றிய அறிவுசார்ந்த சொத்தாகும். அதனை பிறர் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும்போது திருட்டாகவே கருதப்படுகிறது.…

வருங்கால வரண்ட சமுதாயம்

1988-ஆம் ஆண்டு. ஏதோ வரலாற்று கட்டுரை என கடந்து போய் விடாதீர்கள். கொஞ்ச வருடங்களாக நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பழக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். அப்போது எனக்கு 4 வயது. அதற்கு முன்பான வாழ்க்கை ஒரு மங்கலான நிழற்படம் மாதிரிதான் நினைவில் இருக்கிறது. 4 வயதிற்குப் பிறகான நினைவுகள் மிகப் பசுமையாக இருக்கின்றன. அந்த…

கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்

நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது. என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.…

ஆண்குறி சுடும் போட்டி

எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வசதி உண்டு. அத்தனை நீளமும் கைப்பிடியளவு அமைந்திருக்கவேண்டும். இல்லையேல் விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. விளையாட்டு என்பதே சுவாரஸ்யம் மிகுந்ததுதானே. இப்போது உடம்பை குறைக்கவும் வயதை மறைக்கவும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நினைவுகளில் சூழ்ந்திருப்பது அந்த போட்டி விளையாட்டுதான். இது குழு முறை விளையாட்டு. குழுவாக செயல்படவேண்டும். ஆண்களும் பெண்களும்…

உஸ்தாத் சொன்னது தப்புதான்… ஆனா…

வர வர ஒன்னுமே புரிய மாட்டேங்குது நைனா. எல்லாமே முன்னுக்குப் பின்ன முரணா கெடக்குது. அண்மையில உஸ்தாத் ஷாகுல் ஹமிட் (Uztaz Shahul Hamid) இஸ்லாமியர்களோட கட்டுப்பாடுகள் பற்றி பேசியிருக்காப்படி. அதுல ஹலால் உணவுகள் என இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் மசாலாத்தூள்களை வாங்குவதை விமர்சித்து ஏன் அவர்கள் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் மசாலா தூள்களை வாங்குவதில்லை…

லீனா மணிமேகலை மலேசிய வருகை

2.11.2014ல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கவிஞர் / இயக்குனர் லீனா மணிமேகலை கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் கலை ஊடகச் செயற்பாட்டாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. மஹாராஜபுரம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் தமிழாசிரியர்  இரகுபதி அவர்களுக்குப் பிறந்தவர்தான் லீனா. அவர் மிகச் சிறந்த  ஆவணப்படங்களையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழின் மிக முக்கியமான…

கலை இலக்கிய விழா 6 (2.11.2014)

வருடம்தோறும் வல்லினம் இலக்கியக்குழு முன்னெடுத்து நடத்தும் ‘கலை, இலக்கிய விழா’ ஆறாம் ஆண்டாக இவ்வருடம் 2.11.2014ல் நடைபெறுகிறது. பல புதிய அங்கங்களுடன் இவ்வருடம் கலை இலக்கிய விழாவின் வேலைகள் துவங்கியுள்ளது. வல்லினம் விருது வல்லினம் முதல் ஆண்டாக இவ்வருடம் ‘வல்லினம் விருதை’ ஏற்பாடு செய்துள்ளது. இம்முறை வல்லினம் விருது எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதளிப்பு…

வல்லினத்தின் குறும்படப் பட்டறை

26.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர். நாட்டில் குறும்படப்போட்டிகள்  அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும், அதன் பயன்பாடு மட்டுமே கலையாவதில்லை என்பதை…